வேதங்கள் நான்கு என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இந்த வேதங்கள் தோன்றிய விதம், அதன் தொன்மை, அவை உலகிற்கு வழங்கும் சாரம் ஆகியவற்றை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட தொன்மையான இந்த பொக்கிஷங்களைப் பற்றி சத்குரு இக்கட்டுரையில் விளக்குகிறார்.

சத்குரு:

வேதங்கள் இந்த பூமியின் மிகத் தொன்மையான நூல்களாக இருப்பினும், மற்ற எந்த நூலையும் விட விரிவான, விஸ்தாரமான உள்ளடக்கம் கொண்டவை. வேதங்கள், யாரோ எழுதி வைத்த ஒழுக்க விதிகள் அல்ல. அவை வெளிநிலை மற்றும் உள்நிலை சம்பந்தமான பல ஆழமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.

வடிவங்களை ஒலியாக மாற்றுவதைப் பற்றி வேதங்களின் பல்வேறு பகுதிகள் பேசுகின்றன. ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறதென்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.

ஒலிக்கும், வடிவத்திற்குமான இந்த உறவை வேதங்களில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ரிக், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்வது பற்றித் தான் பேசுகின்றன. ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் மந்திரங்களின் விஞ்ஞானம்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில் மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. வேதங்கள், மனம் மற்றும் உள்நிலை சார்ந்த அறிவியல் என்பதால் அவற்றைக் கற்க ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் தேவை. அதற்காக நீங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவை உங்களுக்குப் பலன் தராது. உங்களுக்கு கல்வித்தகுதியாகவோ, வேலைவாய்ப்பாகவோ இதை நினைத்தால், இதனால் உங்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்காது. உங்களையே அதற்கு அர்ப்பணித்தால்தான், உங்களுக்குப் அதன் பயன் கிட்டும். இதற்குத் தேவையான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் போனதால், எல்லா வகையான தவறான புரிதல்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆளாகி இந்த விஞ்ஞானம் சீரழிந்துவிட்டது.

வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்க முனையவில்லை.

சிவபுராணத்தைப் போன்ற மிக அற்புதமான நூலே ஆனாலும், அது முழுக்க முழுக்க விஞ்ஞானம் மட்டுமே பேசினாலும், அதன் நடை அழகிய கதை வடிவில்தான் இருக்கும். காலப்போக்கில் சில தலைமுறைகள், அதன் விஞ்ஞானத்தை விட்டுவிட்டு வெறும் கதையாக மட்டும் சொல்லி வந்தனர். கதை என்று ஆன பின்பு அது இயல்பாகவே மருவி, வளர்ந்து, கற்பனை கலந்து தலைமுறை தலைமுறையாக கைமாறிய போது, முற்றிலும் மாறுபட்டு, அதன் உண்மைநிலை இல்லாமல் போனது.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தை தன் ஆரம்பக் கல்வியில் துவங்கி இருபது வருடங்கள் கல்விப் படிப்பை முடித்து, பி.எச்.டி (PhD) பட்டத்துடன் வெளிவருகிறது என்றால், அதன் புத்திசாலித்தனம் 70 சதவிகித அளவிற்கு மீட்கமுடியா வகையில் அழிந்துவிடுகிறது என்று இன்றைய நவீன கல்விமுறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது அக்குழந்தை விஷயம் தெரிந்த முட்டாளாக வளர்ந்து வெளிவருகிறது. வாழ்க்கை, உயிர் பற்றிய மிக அடிப்படையான அறிவும், உணர்வும் தடம் தெரியாது தொலைந்தே விட்டது. அதனால் கல்வியை ஒரு நாடகமாக, ஒரு பாடலாக, ஒரு கதையாகக் கற்றுத் தரவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். இதைத்தான் நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்து கொண்டிருந்தார்கள்; விஞ்ஞானத்தின் உச்சகட்ட அம்சங்களையும் கூட அவர்கள் கதை வடிவில்தான் வெளிப்படுத்தி வந்தார்கள்.

வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்க முனையவில்லை. இன்றைய கல்விமுறையோ அறிவை வளர்க்கிறதே தவிர புரிதலை அல்ல. இதனால் விரைவில், ஏன் இப்பொழுதே கூட, நீங்கள் சேகரித்திருக்கும் எல்லா தகவலும், அறிவும் உபயோகமற்றுப் போகும் - ஒரு சின்னஞ்சிறிய ‘ப்ளூ சிப்’ (கம்ப்யூட்டர் உபயோகிக்கும் சாதனம்) வைத்துக் கொண்டே, உங்களுக்கு என்ன என்ன தெரியவேண்டுமோ அது அனைத்தையுமே தெரிந்து கொள்ள முடியுமே!

இப்பூமியில் திறம்பட ஒருவர் வாழ வேண்டும் என்றால், தனது புரிதலை அவர் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அந்தப் புரிதல், உடல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளைக் கடந்து விரிய வேண்டும். அப்போதுதான் அவரால் முற்றிலும் மாறுபட்ட வழியில் செயல்பட முடியும். யோக விஞ்ஞானத்தில் இதற்கென பல கருவிகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி ஒருவர் தனது ஐம்புலன்களைக் கடந்து, அதன் மூலம், பொருட்தன்மையைக் கடந்த புரிதலையும் அடைய முடியும். உங்கள் புரிதல் பொருட்தன்மையைத் தாண்டி உயரும்போதுதான், உண்மையான ஆன்மீகப் பயணம் துவங்குகிறது.

pradeep_kumbhashi@flickr