உலக யோகா தினம் - சத்குருவிடமிருந்து ஒரு கடிதம்!

முதலாவது உலக யோகா தினம் வெற்றிகரமாய் நிறைவுபெற்றது, பல கோடி மக்களை ஆழமாய் தொட்டுள்ளது. இத்தருணத்தில், ஈஷாவின் செயல்பாடுகள் இத்தனை கோடி இதயங்களை தொட்டு, வழிகாட்ட உதவிய தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் தன் நன்றிகளை வெளிப்படுத்தும் சத்குரு அவர்கள், "இந்தச் செயல் என் இதயத்தை தொட்டுவிட்டது" என மனம் நெகிழ்கிறார். தொடர்ந்து வாசியுங்கள்.
 

முதலாவது உலக யோகா தினம் வெற்றிகரமாய் நிறைவுபெற்றது, பல கோடி மக்களை ஆழமாய் தொட்டுள்ளது. இத்தருணத்தில், ஈஷாவின் செயல்பாடுகள் இத்தனை கோடி இதயங்களை தொட்டு, வழிகாட்ட உதவிய தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் தன் நன்றிகளை வெளிப்படுத்தும் சத்குரு அவர்கள், "இந்தச் செயல் என் இதயத்தை தொட்டுவிட்டது" என மனம் நெகிழ்கிறார். தொடர்ந்து வாசியுங்கள்.

நமஸ்காரம்,

முதலாவது உலக யோகா தினம் உங்கள் அனைவரது முயற்சியால் மிக அற்புதமாய் நிகழ்ந்தது. இந்தப் பணி நடைபெற்ற தரம், அது மக்களைச் சென்று சேர்ந்துள்ள விகிதம் ஆகியவற்றினால், நீங்கள் புதிய அளவுகோலினை நிர்ணயித்துள்ளீர்கள். ஈஷாவின் தனிப்பட்ட தரத்தினை இவ்வுலகிற்கு நீங்கள் பெருமளவு கொண்டு சேர்த்துள்ளீர்கள். இதனை நிகழச் செய்ய நீங்கள் மேற்கொண்ட திடமான முயற்சிகளும் அன்பும் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டன.

35,600 ஆசிரியர்கள், 1 லட்சம் இடங்களில் யோக வகுப்புகள், பறக்கும் விமானத்தை கூட விடாமல் எங்கெங்கும் உப-யோக வகுப்புகள் என பல்லாயிரக்கணக்கான மக்களை இது சென்றடைந்துள்ளது. உங்கள் ஆதரவினால், சென்னையில் 21ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 25,000 பேர் கலந்துகொண்டனர்.

அதே சமயம், இணையத்தில் இந்தச் செய்தியை பரவச் செய்ய, ஆசிரமத்தில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். ஈஷாவின் சமூக வலைத்தளங்களின் மூலம் நாம் 1.5 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளோம். நாம் பதிவிட்ட "நமஸ்காரம்" ஆங்கில வீடியோ வைரலாகி, இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனைப் பார்த்துள்ளனர். நாம் வெளியிட்டுள்ள "Yoga Tools" எனும் மொபைல் செயலி (App) பல பேருக்கு உப-யோகா பயிற்சிகள் எளிமையாக சென்றடைய உறுதுணையாய் இருந்து வருகிறது.

இந்நாள் பற்றிய விழிப்புணர்வை பிரம்மாண்டமாய் கொண்டு சேர்த்த இந்திய அரசிற்கும், ஊடகங்களுக்கும் நம் நன்றியை இந்நேரத்தில் வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். 192 நாடுகள் யோகா தினத்தைக் கொண்டாடிய இத்தருணத்தில், இந்தியா இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறது. 84 தேசங்களைச் சேர்ந்த, 35,000த்திற்கும் மேற்பட்ட மக்கள், ஒரே நாளில் தில்லியிலுள்ள ராஜபாதையில் கூடி இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது. ஆனால், உலகிலுள்ள 720 கோடி மக்களுக்கும் யோகாவின் சுவையை ஊட்டாமல் நம் பணி நிறைவுபெறாது. இந்த உலக யோகா தினத்தினை ஒரு உந்துதலாய் பயன்படுத்தி இதனை யோகா வருடமாக நாம் மாற்றி அமைப்போம். நாம் தற்போது தட்சிணாயணத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளோம், இது சாதனா பாதை. குளிர்காலத்தில் பிறக்கவிருக்கும் சங்கிராந்திக்கு முன், உப-யோகா எனும் இந்த சாதனாவினை நீங்களும் செய்து, இன்னும் 100 பேருக்காவது இதனைக் கொண்டு சேர்த்திடுங்கள். இது அவர்களுக்கு நல்வாழ்வினை பெற்றுத்தரும். மனித விழிப்புணர்வினை மேலெழுப்புவதில் நீங்களும் பங்கு பெற்றீர்கள் என்ற பெருமை உங்களுக்கும் உண்டு. இதில் நீங்களும் ஒரு பாகமாய் இருப்பதற்கான சுவையை, சந்தோஷத்தினை உணர்வீர்களாக.

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1