சத்குரு:

கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு மணி நேரம்; அல்லது எத்தனை நிமிடங்கள் ஆனந்தமாக இருந்தீர்கள்? இதை சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கச் செல்லும் முன் ஐந்து நிமிடங்களையாவது இதற்காக ஒதுக்குங்கள். ‘இன்று எவ்வளவு நேரம் நான் ஆனந்தமாக உணர்ந்தேன்... நேற்றைவிட இன்று என் ஆனந்தம் குறைந்து விட்டதா? அல்லது அதிகமாகி இருக்கிறதா?’ என்று அசை போட்டுப் பாருங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் பல செயல்களைச் செய்ய நேர்ந்தாலும், அந்தச் செயல்களின் ஒரே நோக்கம் ‘ஆனந்தமாக இருக்கவேண்டும்’ என்பதுதான், இல்லையா? ஆக, நீங்கள் ஒரு ஆனந்தத் தொழிற்சாலை! ஆனந்தம் என்ற அற்புதமான விஷயத்தை உருவாக்குவதே உங்கள் வேலையாக எப்போதும் இருக்கிறது.

இது அவசியம் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்! வாழ்க்கையில் நீங்கள் பல செயல்களைச் செய்ய நேர்ந்தாலும், அந்தச் செயல்களின் ஒரே நோக்கம் ‘ஆனந்தமாக இருக்கவேண்டும்’ என்பதுதான், இல்லையா? ஆக, நீங்கள் ஒரு ஆனந்தத் தொழிற்சாலை! ஆனந்தம் என்ற அற்புதமான விஷயத்தை உருவாக்குவதே உங்கள் வேலையாக எப்போதும் இருக்கிறது.

ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது எவ்வளவு ஆனந்தமாக இருந்தீர்கள்... அன்று நீங்கள் பெரிதாக எதையுமே செய்துவிடவில்லை; ஆனாலும் ஆனந்தமாக இருந்தீர்கள். வளர்ந்தபிறகு இன்று எத்தனையோ செயல்களைச் சாதித்தும், உங்களால் ஆனந்தமாக இருக்க முடியவில்லை.

குழந்தைப் பருவத்தில் உங்களால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. பெரியவர்கள் கைகாட்டும் திசையில் உங்கள் வாழ்க்கை நகர்ந்தது. அப்போதெல்லாம், ‘வேகமாக வளர வேண்டும், இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழவேண்டும்’ என்று நினைத்தீர்கள். நினைத்ததுபோலவே இப்போது வளர்ந்தும் விட்டீர்கள். சுதந்திரமான வாழ்க்கைக்கான தேவைகளாக நீங்கள் நினைத்த வேலை அல்லது தொழில், வீடு, வாகனம், வங்கிக்கணக்கு, குடும்பம் என எல்லாவற்றையும் உருவாக்கி விட்டீர்கள். இவை அனைத்தும் வர வர, உங்கள் ஆனந்தமும் பன்மடங்கு பெருகியிருக்க வேண்டும்தானே! ஆனால் இன்று ஆனந்தத்தைத் தொலைத்து விட்டு, இவற்றில் சிக்கிக் கொண்டு தவிக்கிறீர்கள்.

நாம் ஒரு தொழிற்சாலை நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குத் தேவையான மூலப்பொருட்களை எல்லாம் வாங்கிச் சேர்த்து, ஆட்களை நியமித்து, நிர்வகித்து, நாள் முழுவதும் நமது கடுமையான உழைப்பை அங்கு கொடுக்கிறோம். எல்லாம் செய்தும் இறுதியில் நாம் எதிர்பார்த்த பொருள் உற்பத்தியாகவில்லை என்றால், அந்தத் தொழிற்சாலையை என்ன செய்வது? ஒன்று அதை இழுத்து மூடிவிட வேண்டும்; அல்லது அதை சரிபார்த்தே ஆகவேண்டும். அவ்வளவுதான்... இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.