திருமணம் நரகத்தில் நிச்சயிக்கப்படுகிறது!
சத்குரு சொல்லும் குட்டிக் கதைகள் நம்மை சிரிக்க வைப்பதில் சந்தேகமே இல்லை. அப்படி, நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணத்தையும், சுவையான பானம் அருந்திய இராணுவ வீரரைப் பற்றியும் இங்கே இரு கதைகள்...
 
 

சத்குரு சொல்லும் குட்டிக் கதைகள் நம்மை சிரிக்க வைப்பதில் சந்தேகமே இல்லை. அப்படி, நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணத்தையும், சுவையான பானம் அருந்திய இராணுவ வீரரைப் பற்றியும் இங்கே இரு கதைகள்...

சத்குரு:

திருமணம் நரகத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

இளம் பெண் ஒருத்தி, அன்றொரு நாள், மிகவும் சோகமாக வீடு திரும்பினாள். வீட்டில் அவள் தாய் இருந்தாள்.

தாய்: என்னம்மா, என்ன ஆச்சு?

இளம்பெண்: இன்றைக்கு குமார் என்னை திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.

தாய்: சந்தோஷமான விஷயம் தானே! இதற்கு ஏன் சோகமாக இருக்கிறாய்?

இளம்பெண்: இல்லம்மா அவர் ஒரு நாத்திகர். கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. ஏன் நரகத்தில் கூட நம்பிக்கை இல்லை.

தாய்: நீ அவனை திருமணம் செய்து கொள், நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய நம்பிக்கை தவறு என்று நிரூபித்துவிடலாம்!

சுவையான பானம்! சுவை சேர்த்தது யார்?

2

ஒரு ஆங்கில ராணுவ அதிகாரி இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார், இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம். அவரிடம் ஒரு விலையுயர்ந்த பானம் (Sherry) இருந்தது. சில விசேஷமான நாட்களில் அவர் அதில் சிறிது மட்டும் குடித்துவிட்டு மிச்சத்தை பிறகு குடிக்கலாம் என்று சேமித்து வைப்பார். ஒரு நாள் அவர் அந்த பாட்டிலின் பானத்தின் அளவு, தான் குடிப்பதைவிட அதிகமாக குறைவதை கவனித்தார். தன் வேலைக்காரன்தான் இதை குடித்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். ஒரு நாள் இதை ஏன் மற்றவர் குடிக்க விட வேண்டும்? தானே குடித்து விடலாம் என்று முடிவெடுத்தவர், அதை முழுமையாக குடித்துவிட்டு அந்த பாட்டிலில் கொஞ்சம் சிறுநீரை ஊற்றி வைத்தார். அதன் பிறகும் அந்த பாட்டிலின் அளவு குறைந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அந்த பாட்டிலின் சிறுநீர் அளவு முழுமையாக குறையட்டும் என்று பலநாள் காத்திருந்தார். பிறகு அவர் அந்த வேலைக்காரனை அழைத்து “நான் இந்த பாட்டிலை பல நாட்களாக தொடவே இல்லை. ஆனால் அதன் அளவு எப்படி குறைந்தது? நீ என்ன செய்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு அவர் “ஐயா நான் உங்களுக்கு கொடுக்கும் சூப்பில் கொஞ்சம் Sherry ஐ தினமும் சேர்க்கிறேன்” என்றார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1