Question: சத்குரு, நீங்கள் கை தட்டினால் பலர் சத்தம் போட்டு ஆர்ப்பரித்து குதித்து அடங்குகிறார்களே, ஏன்? என்ன நடக்கிறது அவர்களுக்கு?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் அவரைத்தானே கேட்க வேண்டும்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சத்தம் போடுகிறார்கள். அப்படியென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நடக்கின்றது, இல்லையா? (சிரிக்கிறார்).

கோவிலுக்கு ஒரு சக்தி உருவம் வேண்டும். ஆனால் அதை உருவாக்க சக்தி வேண்டுமே, எங்கிருந்து உருவாக்குவது? இதற்கு பலவிதமான கருவிகள் இருந்தன. அதில் உயிர்ப்பலி என்பது ஒரு கருவி. இதை ஒரு விஞ்ஞானமாக பல கலாச்சாரங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

உலகில் எந்தக் கலாச்சாரத்திலும் விலங்குகளை உயிர்ப்பலி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போது அது வெறும் சடங்காக இருக்கிறது. ஆனால் அடிப்படையாக அதில் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் பல கோவில்கள் முன்பு கட்டப்பட்டன. கோவிலுக்கு ஒரு சக்தி உருவம் வேண்டும். ஆனால் அதை உருவாக்க சக்தி வேண்டுமே, எங்கிருந்து உருவாக்குவது? இதற்கு பலவிதமான கருவிகள் இருந்தன. அதில் உயிர்ப்பலி என்பது ஒரு கருவி. இதை ஒரு விஞ்ஞானமாக பல கலாச்சாரங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

இப்போது நீங்கள் தேங்காய் உடைப்பதும் அதற்கான ஒரு கருவிதான். அதுவும் ஒரு பலி போன்றதுதான். ‘டப்’ என்று உடைக்கும்போது அதிலிருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியையும் உபயோகப் படுத்தினார்கள். அதனால்தான் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள். அதேபோலத்தான் எலுமிச்சம் பழம் நசுக்குவதும். அந்த அடிப்படை விஞ்ஞானம் தெரிந்தவர்கள் அதிலிருந்து வெளிப்படும் சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது ஒருவிதமான தொழில்நுட்பம்.

பல வருடங்களுக்கு முன்பு இரயில் இன்ஜினில் கரி போட்டு ஓட்டினார்கள். அப்போது அது புகை கக்கிக் கொண்டே போகும். பயணிகள் உடை எல்லாம் கரியாகிவிடும். பின்பு டீசல் பயன்படுத்தினார்கள். புகை குறைந்தது, சத்தம் குறைந்தது. இப்போதெல்லாம் மின்சாரம் மூலம் இரயில் ஓடுகிறது. இப்போது சுத்தமாக புகையே இல்லை. தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது.

சக்தி இல்லாமல் எதுவும் நடக்காது. உங்களுக்கும் சக்தி தேவைப்படுகிறது. அன்பாக இருங்கள், அமைதியாக இருங்கள் என்று போதனை கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒரு கருவி இல்லாமல், சக்தி இல்லாமல் போதனை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் எதற்குமே சக்தி தேவைப்படுகிறது. சக்தி இல்லாமல் எதுவும் நடக்காது. உங்களுக்கும் சக்தி தேவைப்படுகிறது. அன்பாக இருங்கள், அமைதியாக இருங்கள் என்று போதனை கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒரு கருவி இல்லாமல், சக்தி இல்லாமல் போதனை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. பத்து பிறவிகளுக்குப்பிறகு முக்தி கிடைத்தால் போதும் என்று இருந்தால் வெறுமனே போதனை மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் நமக்கு இப்பிறவியிலேயே அனைவரும் முக்தி அடையவேண்டும் என்று ஆசை. அதற்காக நமக்கு ஆடு மாடுகள் வெட்டுவதில் விருப்பம் இல்லை.

எனவே இது ஒருவிதமான பலி (சத்குரு கை தட்டுகிறார்). இப்போது கொஞ்சம் உயிர்சக்தி வெளியே வீசுகிறது. உயிர்சக்தியை தயார் செய்கிற தொழில்நுட்பம் நம்மிடம் இருப்பதால் நமக்கு ஒன்றும் கவலையில்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் கை தட்டி உயிர்சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கலாம். ஏனெனில் படைத்தவனே உள்ளே இருக்கிறானே! அவனுடன் இடைவிடாமல் தொடர்பு இருப்பதால் இது முடிகிறது. அவனுடன் தொடர்பு இல்லையென்றால் சக்தியை வெளிப்படுத்தும்போது நம் உயிர் போய்விடுமே! இதுவும் பலிதான். ஆனால் நவீன தொழில்நுட்பம்.

எனவே அப்படி சக்தி வெளிப்படும்போது சிலர் ஆடுகிறார்கள், குதிக்கிறார்கள். ஆனால் நீங்களும் அப்படி ஆட வேண்டும் என அவசியமில்லை. ஆனால் அந்த சக்தியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இங்கு உட்கார்ந்து கொண்டு இவருக்கு என்ன நடக்கிறது, அவருக்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கக்கூடாது. மற்றவருக்கு என்ன நடந்தாலும் நமக்கு ஒன்றும் புரியாது. நமக்குள்ளே ஏதாவது நடந்தால்தானே நமக்குப் புரியும். மற்றவருக்கு எது வேண்டுமானாலும் நடக்கட்டும், நமக்கென்ன? நமக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும், இல்லையா? ஏனென்றால் யாரோ ஆனந்தமாக இருக்கிறார்கள், நமக்கு என்ன தெரிகிறது? நமக்குள்ளே அது நடந்தால்தானே அது நமக்குத் தெரியும். எவ்வளவோ பிரமாதமான விஷயம் இங்கே நடக்கட்டும். ஆனால் நமக்குள் நடக்கும்வரைக்கும் அது நமக்குப் புரியாது. உயிரை கல்லறை மாதிரி நடத்திக் கொள்ளலாமா? அல்லது எரிமலை மாதிரி நடத்திக் கொள்ளலாமா? எனவே சிறிது திறந்த மனத்தோடு, அதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாக்கிக் கொண்டு இங்கு இருக்கலாம். அப்படி இருந்தால் உயிர்த்தன்மையை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது, உயிரை எப்படி தீவிரமாக நடத்திக் கொள்வது என்னும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.