தேச நலனும் மக்களின் நல்வாழ்வும் தான் எனது முதன்மை நோக்கங்கள்

‘ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சில ஊடகங்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பம் ஒன்று உருவாகி வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவத்தில் 13 பேரின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்காமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்கியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சத்குரு அவர்கள் குரல் கொடுப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பார்வை முற்றிலும் தவறானது.

துப்பாக்கி சூடு நடந்த மறுநாளே குரல் கொடுத்தார் சத்குரு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மே 22-ம் தேதி நடைபெற்றது. அதன் மறுநாளான மே 23-ம் தேதி கோவை விமான நிலையத்தில் சத்குரு அவர்கள் தந்தி டி.வி. நிருபரின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த பதிலில், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டு மக்களை நாமே கொல்ல கூடாது. இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டிறிக்க வேண்டும். இந்த பிரச்சினையை அரசியல் ஆக்க கூடாது. சாமானிய மக்களும் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று சத்குரு அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார்.

பின்னர், 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் தொடர் சுற்றுப் பயணம் சென்று இருந்தார். அந்த சமயத்தில் தான் ‘ஸ்டெர்லைட்’ ஆலை மூடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது சியாச்சின் பயணத்தை முடித்துக்கொண்டு சத்குரு அவர்கள் ஜூன் 22-ம் தேதி டெல்லி திரும்பினார். அப்போது, ‘சிஎன்என் நியூஸ் 18’ ஆங்கில தொலைக்காட்சிக்கு சத்குரு அவர்கள் பேட்டி அளித்தார்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது

அந்த பேட்டியில் ஊடகவியாளர் ‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டது குறித்து சத்குருவின் கருத்தை கேட்டார். அதற்கு “இதுபோன்ற சம்பவங்களில் அரசியல் கலந்துள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலுவான தலைவர்கள் தற்போது களத்தில் இல்லை. இதனால், பல்வேறு வகையான நபர்கள் அரசியலில் கால் பதிக்க விரும்புகின்றனர். அதற்கு பல்வேறு விதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். துர்திருஷ்டவசமாக நமது நாட்டில் ஒருவர் தலைவர் ஆக வேண்டுமென்றால் சாலை மறியல், மின்சார துண்டிப்பு, பேருந்துகளை எரிப்பது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்….

சட்டரீதியாக அணுக வேண்டும்

"நான் சுற்றுச்சூழல் மாசுப்பாடு இல்லை என கூறவில்லை. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு சில குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன. இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு இன்னும் சில மக்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. ஆகவே, தொழிற்சாலைகள் அவசியம். ஆனால், தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த பேட்டியிலும் சத்குரு அவர்கள் ”மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வன்முறை சம்பவங்கள் நிகழ கூடாது, சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை சட்டப்படி அணுக வேண்டும்” என்று தான் சத்குரு அவர்கள் பேசினார்.

இதையடுத்து, ஜூன் 25-ம் தேதி பாபா ராம்தேவ் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதன்பிறகு தான் சில ஊடகங்கள் பாபா ராம்தேவ் அவர்களுடன் சத்குரு அவர்களை சேர்த்து செய்திகள் வெளியிட ஆரம்பித்தன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவளிக்கவில்லை

இந்நிலையில், மக்களின் பாதிப்புகளை உணராமல் சத்குரு அவர்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’-க்கு ஆதரவாக பேசி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சத்குரு அவர்கள் ஜூன் 27-ம் தேதி ”நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள். பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்கள் கொல்லப்பட்டது முறையல்ல

பின்னர், ஜூன் 28-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அன்பிற்குரிய அமைச்சரவர்களே, நான் எந்த தொழிற்சாலையும் மீண்டும் திறக்கவேண்டுமென கூறவில்லை. முதலில் விதிமீறல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை, பிரச்சனைகள் எழும்போது சட்ட நடவடிக்கை அவசியம். மக்கள் வீதிக்கு வந்து சூழ்நிலை கட்டுக்கடங்காது போனதும் அவர்கள் கொல்லப்படுவது முறையல்ல. இது உணர்ச்சிப்பூர்வமான விஷயம்தான், ஆனால் உண்மை வலிக்கக்கூடாது. இது 21ம் நூற்றாண்டிலுள்ள நமது பாரதம், 1947ற்கு முந்தையதல்ல” இந்த பதிவிலும் மக்கள் கொல்லப்பட்டது முறையல்ல என்று தான் தெரிவித்துள்ளார்.

sterlitetweet1

தவறான பார்வை

ஆனால், சில ஊடகங்கள் சத்குரு அவர்களின் கருத்துக்களை தவறாக புரிந்துக்கொண்டு ‘மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்காமல், தொழிற்சாலை மூடப்பட்டது குறித்து மட்டுமே சத்குரு அவர்கள் வருந்துகிறார்’ என்ற அர்த்தத்தில் செய்திகளை பிரசுரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.

இந்நிலையில், தமிழ் செய்தி தொலைக்காட்சி (தந்தி டி.வி) ஒன்றுக்கு சத்குரு அவர்கள் அளித்த நேர்முக பேட்டியில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் ஆதரவளிக்கவில்லை. தேச நலனும் மக்களின் நல்வாழ்வும் தான் எனது முதன்மை நோக்கங்கள்’ என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

‘ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் ஒட்டுமொத்த சாராம்சம்:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நம் மக்கள் கொல்லபட்டுள்ளனர், இனி ஒரு சம்பவம் இவ்வாறு நிகழக்கூடாது.

அந்த சம்பவத்தில் சாமானிய மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கருதவில்லை. அரசியல் ஆசை கொண்ட சில குழுக்கள் மக்களை பலி கடா ஆக்கியுள்ளதாகவே கருதுகிறேன்.

நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. 

சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்.

பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம்.

இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சத்குருவின் ட்விட்டர் பதிவுகள்:

ஜூன் 23

ஸ்டெர்லைட் அசம்பாவிதம் குறித்த விவரங்கள் முற்றிலுமாக எனக்குத் தெரியாதது உண்மைதான். ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் அனைத்தையும் அடைத்துவந்தால், தேசத்தின் எதிர்காலம் என்னவாகும்? சுற்றுச்சூழல் அத்துமீறல்களை சரிசெய்யுங்கள், ஆனால் இளம் உயிர்களை எடுக்காமல் வர்த்தகத்தைக் கொலைசெய்யாமல் செயல்படுவோம். - சத்குரு 

ஜூன் 26

தாமிர உருக்காலைகள் பற்றி கருத்துக்கூற எனக்கு நிபுணத்துவமில்லை, ஆனால் இந்தியாவில் தாமிரத்திற்கான தேவை அதிகமாக இருக்கிறது. இங்கேயே உற்பத்தி செய்யாவிட்டால் சீனாவிலிருந்து வாங்குவோம். சுற்றுச்சூழல் அத்துமீறல்களை சட்டப்பூர்வமாக சரிசெய்ய முடியும். பெரிய தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமான விசாரணையின்றி கூட்டம்சேர்த்து தாக்கிக்கொல்வது பொருளாதார அளவில் தற்கொலையே. - சத்குரு 

ஜூன் 27

நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள். பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம். - சத்குரு 

ஜூன் 28

அன்பிற்குரிய அமைச்சரவர்களே, நான் எந்த தொழிற்சாலையும் மீண்டும் திறக்கவேண்டுமென கூறவில்லை. முதலில் விதிமீறல்கள் இல்லாவிதம் பார்த்துக்கொள்வது அரசின் கடமை, பிரச்சனைகள் எழும்போது சட்டநடவடிக்கை அவசியம்...மக்கள் வீதிக்கு வந்து சூழ்நிலை கட்டுக்கடங்காது போனதும் அவர்கள் கொல்லப்படுவது முறையல்ல. இது உணர்ச்சிப்பூர்வமான விஷயம்தான், ஆனால் உண்மை வலிக்கக்கூடாது. இது 21ம் நூற்றாண்டிலுள்ள நமது பாரதம், 1947ற்கு முந்தையதல்ல. - சத்குரு