Question: செய்வது சூரிய நமஸ்காரம், கடைபிடிப்பது சந்திர நாள்காட்டி. சூரியனுக்கு முதல் மரியாதை கொடுக்கும் நமது கலாச்சாரத்தில், சூரிய நாள்காட்டியைப் பயன்படுத்தாமல் ஏன் சந்திர நாள்காட்டியைக் கடைபிடிக்கிறோம்?

சத்குரு:

இங்கே சூரிய வழிபாடு அடிப்படையான அம்சமாக இருந்தாலும், நாம் எப்போதும் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தி வருகிறோம். சூரிய நாட்காட்டியை உருவாக்க இங்கு திறமை இல்லாததால் இப்படிச் செய்யவில்லை. இருப்பினும் இந்தக் கலாச்சாரத்தில் சந்திர நாள்காட்டியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், நம் வாழ்வில், சந்திரச் சுழற்சியினால் நிகழும் தனித்துவமான தாக்கங்கள், சூரியச் சுழற்சியினால் உண்டாவதை விட அதிகமாக உள்ளது.

சந்திர நாள்காட்டியைக் கடைப்பிடிக்கும்போது முக்கிய தினங்கள் அனைத்துமே ஒவ்வொரு வருடமும் மாறும். இந்த வருடம் சந்திர நாள்காட்டியில் மஹாசிவராத்திரி பிப்ரவரியில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வருகிறது என்றால் அடுத்த ஆண்டு அது வேறொரு மாதத்தில் வேறொரு நாளில் வரலாம்.

பெண்ணின் முழு உடலுமே சந்திரச் சுழற்சிக்கு மிகுந்த நேரடித் தொடர்புடையதாக உள்ளது. பெண்ணின் உடலில் ஏற்படும் அந்த சுழற்சிதான் நாம் பிறப்பதற்கும் காரணமாக இருந்தது. எனவே சந்திர நாள்காட்டி தனித்துவமாகக் கருதப்பட்டது. ஆனால் அது ஒரு தாறுமாறான நாள்காட்டியாகவும் தோன்றலாம். ஏனென்றால் சந்திர நாள்காட்டியைக் கடைப்பிடிக்கும்போது முக்கிய தினங்கள் அனைத்துமே ஒவ்வொரு வருடமும் மாறும். இந்த வருடம் சந்திர நாள்காட்டியில் மஹாசிவராத்திரி பிப்ரவரியில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வருகிறது என்றால் அடுத்த ஆண்டு அது வேறொரு மாதத்தில் வேறொரு நாளில் வரலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் அதைக் கணிக்கத் தேவையுள்ளது. இது கொஞ்சம் முட்டாள்தனமாகத் தோன்றலாம்.

சூரிய நாள்காட்டி மிக நிலையான நாள்காட்டியாக இருக்கும் என்றாலும், நாம் சந்திர நாள்காட்டியைத் தேர்ந்தெடுத்துக் கடைபிடிப்பது ஏனென்றால், அது நம் உடலோடும் உடலியல் சுழற்சியிலும் உளவியல் சுழற்சியிலும் தனித்தன்மையான தொடர்பினைக் கொண்டுள்ளது. மேலும் சந்திர நாள்காட்டிதான் மனிதனின் உடல் மன இயக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. எனவேதான் சூரிய வழிபாடு செய்பவர்களாக இருந்தபோதிலும், இந்தக் கலாச்சாரத்தில் சந்திர நாள்காட்டியைத் தேர்ந்தெடுத்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.