சிவனின் காலடியில் உள்ள ஈஷா
தியான அன்பர் ஒருவர், சாம வேதம் பற்றிய கேள்வியை முன்வைக்கும் போது, கோவை ஈஷா யோகா மையம் சிவனை சுற்றி உள்ளதா என்றும் கேட்க, அதற்கு சத்குரு தந்த பதில் இங்கே...
 
 

தியான அன்பர் ஒருவர், சாம வேதம் பற்றிய கேள்வியை முன்வைக்கும் போது, கோவை ஈஷா யோகா மையம் சிவனை சுற்றி உள்ளதா என்றும் கேட்க, அதற்கு சத்குரு தந்த பதில் இங்கே...

Question:நமஸ்காரம் சத்குரு. சாமவேதத்தை உச்சரிப்பது, மஹாதேவனான சிவனைப் பிரார்த்திக்கவும், அடைவதற்குமான வழி என்று பெரியவர்களும், பண்டிதர்களும் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் சாம வேதமானது மிக விரைவாக அழிந்துக் கொண்டிருக்கின்றது என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த மாதிரியான, ஆன்மீக அமைப்பில், சாமவேதத்திற்கு இடமுண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் இந்த இடத்தைச் சிவனைச் சுற்றி அமைத்திருக்கிறீர்கள், அதனால், சாம வேதத்திற்கு இங்கு இடமுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சாம வேதத்தை இங்கு அறிமுகப்படுத்தவும், வளர்க்கவும், சக்தியூட்டவும் உங்களிடம் திட்டங்கள் இருக்கிறதா?

சத்குரு:

சரித்திரத்தின்படி, ஆராயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்தியாவின் வட சமவெளிகளில் பெரும் பஞ்சம் இருந்ததாக கூறப்பட்டது. இந்த பஞ்சம் 14 வருடக் காலங்கள் நீடித்ததாகவும், வேதியப் பரம்பரை, வாய்மொழி பரம்பரையாக இருந்ததால், முற்றிலும் தொலைந்துப் போய்விட்டதாகவும் கூறபட்டது. 14 வருடக் காலங்கள், மக்கள் தொடர்ந்து பசியுடனிருந்ததால், அவர்கள் வேதங்களை மறந்து விட்டனர். அதற்குப் பிறகு, மக்கள் அங்கிங்கு, துண்டு துண்டாய் கேள்விப் பட்டதையெல்லாம் சேகரித்து, நான்கு வேதங்களாய் தொகுத்தனர். பராசரர் என்னும் முனிவர் தான் முதன்முதலில் இதனை தொகுத்தவர். அதனால், நீங்கள் இன்று பார்க்கும் வேதம், மீதம் இருந்தவற்றையெல்லாம் தூசித்துடைத்து, திரட்டியவை தான். இது ஒரு முழுமையான திரட்டு அல்ல, ஏனென்றால் அந்த நீண்டப் பஞ்சத்தினால், பெரும்பாலானவை தொலைந்துப் போய் விட்டன.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவையும் ஒரு நுழைவாயிலாக நீங்கள் உபயோகப் படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை.

இந்த இடம் நீங்கள் சொன்ன மாதிரி சிவனைச் சுற்றி அல்ல, சிவனின் காலடியில் இருக்கிறது. நாங்கள் அவரைச் சுற்றி இல்லை, அது மட்டுமல்ல, சிவனுக்காகப் பிரார்த்தனைகளோ, மந்திர உச்சாடனங்களோ இங்கு நடப்பதில்லை ஏனென்றால் நான் அவருடைய பக்தன் இல்லை. அவர் தன்னையே கட்டாயமாய் திணித்து, ஐம்பது சதவிகித கூட்டாளி ஆனார். (சிரிப்பு) அவர் பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய எல்லைக்குள் இருப்பதில்லை, அவர் அதனைத் தாண்டிவிடுவார். (சிரிப்பு) அதனால் நான் அவரை அழையா விருந்தாளி போல நடத்துவேன். அதனால் எனக்கு எந்த வித மந்திர உச்சாடனங்களோ, வேதமோ தெரியாது. அவர் சொல்லிக் கொடுத்த யோகமாய் மட்டும்தான் நான் வாழ்கிறேன் (சிரிக்கிறார்). அது கூட நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை அவர் என் மேல் பலவந்தமாய் திணித்தார். நான் எப்போதுமே, எதனையும் கற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருந்தேன். அதனால் இந்த அறிவென்னும் சுமை இல்லாமல் இருக்கிறேன். (சிரிக்கிறார்) இந்த அறிவென்னும் சுமையை என் தலையில் ஏற்றி கொள்ளாததால், நான் ஒரு குழந்தையைப் போல வளைய வருகிறேன்.

எனக்கு வேதங்கள் எதுவும் தெரியாது, இந்த இடத்தைப் பற்றி யாருக்கும், எதுவும் தெரியாது, இங்கேயே வாழ்பவர்களுக்குக் கூட. அதனால் தான் இந்த இடம் நன்றாக இருக்கின்றது. (சிரிக்கிறார்) ஏதோ வேலை செய்கிறது என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் எப்படி என்பது தெரியாது. இப்படி இருப்பது நல்லதுதான், ஏனென்றால், மக்கள் தங்கள் அறிவினால், ‘இது இப்படித் தான்’ என்று நினைத்தால், அவர்கள் தொலைந்து போய் விடுவார்கள். இங்கு ‘இது இப்படித்தான்’, என்பது கிடையாது. ‘இது இப்படித்தான்’ என்று சொன்னவுடன், நீங்கள் மற்ற எல்லாவற்றையும் தவறவிட்டு விடுவீர்கள். அதனால் “இது இப்படித்தான்’ என்பதே இல்லை. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவையும் ஒரு நுழைவாயிலாக நீங்கள் உபயோகப் படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை. இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே உங்களைத் தடுக்க முடியாது. நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே ஒரு நுழைவாயில் தான். அதனால் இந்த இடமே உங்களை மெதுவாக ஈர்த்து, விருப்படைய செய்வதற்காகத்தான். இதனால் நீங்கள் முற்றிலும் விருப்பத்துடன் செயல்பட்டால், நீங்கள் எங்குப் பார்த்தாலும் அது உங்களுக்கு ஒரு வாய்ப்பாகத் தெரியும். அதனால் நாங்கள் வேதங்கள் படிப்பதற்கு முயற்சிக்கவில்லை. நாங்கள் அதற்கு எதிராக இல்லை. நாங்கள் படிப்பறிவற்றவர்களாக இருப்பதால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. (சிரிக்கிறார்)

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1