சிவனும் தமிழ்நாடும் மஹாசிவராத்திரியும்!
தென்னகமாம் தமிழகத்தில் சிவனுக்காக பல சிறப்புமிக்க கோயில்கள் அமையப்பெற்றுள்ளதையும் சிவனுக்கு தமிழகத்தின்மீதுள்ள தனிப்பட்ட அன்பு குறித்தும் சத்குரு இங்கே கூறுகிறார்! தற்போது ஆதியோகியும் இங்கேதான் அமையப்பெற்றுள்ளார்; மஹாசிவராத்திரியும் நெருங்கி வருகிறது...
 
 

சத்குரு:

தமிழ்நாடு, தமிழ் மண், தமிழ் காற்று, தமிழ் கலாச்சாரம் எல்லாம் எனக்குள்ளே ஒரு பாகமாகவே ஆகிவிட்டது. என்ன தமிழில் பேசுவதுதான் கொஞ்சம் சிரமம். தமிழ் மண், சிவனுக்கு கன்றுக்குட்டிப் போல. அவன் அன்பு இந்த நாட்டின் மீது என்றுமே இருந்திருக்கிறது. அதனால்தான், நாம் எப்படி திசை மாறினாலும் எல்லாமே நமக்கு நல்ல படியாகவே நடந்திருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிவனுக்கு மிக சிறந்த கோவில்கள் அமைந்துள்ளன. இவை கட்டிடக் கலையின் அற்புதங்களாக இன்றும் கண்டறியப்படுகிறது. மனிதனாக பிறந்ததற்கே ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இக்கோவில்கள் இருக்கின்றன. இவை பக்தியின் வெளிப்பாடாக மட்டுமில்லாமல், இணையில்லாத தனிச்சிறப்பு மிக்க கலைத் திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இந்த மாநிலத்தின் அடையாளமாக கோவிலை வைத்தது, மதக்குறியீடாக அல்ல, எப்போதுமே தெய்வீகத்துடன் தொடர்பிலேயே இருக்கவேண்டும் என்ற மக்களின் ஆர்வத்திற்காக. இப்படி தென்னிந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் ஆன்மீகம் என்பது வெறும் போதனையாகவோ, ஒரு செயலாகவோ இல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனின் தினசரி வாழ்க்கையின் அங்கமாகவே வழங்கப்பட்டது. இந்த கலாச்சாரத்தில், முற்காலத்திலிருந்தே மஹாசிவராத்திரி மிக முக்கியமான நாளாக அறியப்படுகிறது. இந்த தெய்வீக இரவு நம் உள்நிலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக விளங்குகிறது. பல உன்னத சாத்தியங்களை வழங்குகிறது.

இந்த மஹாசிவராத்திரியன்று, ஆதியோகியின் அருள் நிழலில், இந்த மகத்தான இரவை உணர்ந்திட வாருங்கள்.

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1