இன்றைய தரிசனத்தில், ஆன்மீக சாத்தியத்தை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் முயற்சியில், இன்றைய இளைய தலைமுறை காட்ட வேண்டிய நேர்மை குறித்து சத்குரு பேசியதிலிருந்து சில துளிகளை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

6:27

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசிரமவாசிகள், ஹட யோகா ஆசிரியர் பயிற்சி பங்கேற்பாளர்கள், காலை சம்யமா நிகழ்ச்சிக்கான சந்திப்பில் கலந்துகொள்ள வந்தவர்கள், என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்க சத்குரு வந்தமர்ந்தார்.

6:34

சத்குரு கூறியதிலிருந்து: "ஆன்மீகப் பாதையில் இருப்பதென்றால், உங்களுக்கு நீங்கள் 100 சதம் நேர்மையாய் இருப்பது. சத்யமேவ ஜெயதே என்பதன் உண்மையான அர்த்தம் உண்மையுடன் ஒத்திசைவாய் இருப்பது. அல்லது இதை ஸ்வதர்மா என்று சொல்லலாம், அப்படியென்றால் இந்த உயிர் எப்படி இயங்கினால் சிறப்பாக இயங்குமோ அப்படி நிகழ்த்துவது.

ஆன்மீகப் பாதையில் இருப்பது உங்களுக்கு நீங்கள் நேர்மையாய் இருப்பது. ஆன்மீக சாத்தியத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் இது இன்னும் பெரிய சவால், ஏனென்றால் இது சுற்றியுள்ள உலகத்துடனும் நேர்மையாய் இருப்பதாகும். நான் இதை பிறருக்கு பரிமாறுபவர்களிடம் மிகவும் கடினமாக இருந்துள்ளேன். இன்னொருவரைத் தொடும் முன் உங்கள் கைகள் சுத்தமாய் இருப்பது மிகவும் முக்கியம்.

"உலகிற்கு கல்வியும் மருத்துவ வசதியும் உணவும் இருந்தால் போதாதா? ஆன்மீக சாத்தியம் எதற்கு?" என்று நீங்கள் சிந்திக்கலாம். மனிதர்கள் இப்போது தங்களுக்காக தாங்களே சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள். இன்னும் 70 முதல் 100 வருடங்களில் சொர்க்கத்தில் வழங்கப்படும் தீர்வுகளில் மக்களுக்கு நாட்டமில்லாமல் போய்விடும்.

அடுத்த 25 முதல் 30 வருடங்களில் தர்க்க அறிவிற்கு அர்த்தம் தரக்கூடிய ஒரு ஆன்மீக சாத்தியத்தை நாம் பெரிய அளவில் வழங்கவில்லை என்றால், குடியும் போதையும் உலகில் தலை விரித்து ஆடத் துவங்கிவிடும். இதை உலகிற்கு வழங்குவதில் நேர்மையாய் இருப்பது மிக மிக அவசியம்.

இதை உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நேர்மையாய் இருந்தால் கசாப்புக் கடைக்காரர் போல நான் கடினமாக நடந்துகொள்ளத் தேவையிருக்காது. அந்த சூழ்நிலையை எனக்குக் கொடுங்கள், நான் உங்களிடம் மென்மையாய் நடந்துகொள்ளும் விதமான சூழலைத் தாருங்கள்."

7:43
சம்யமா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்களை தயார்செய்வது குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கும், இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டு வணங்கி விடைபெற்றார் சத்குரு.