சர்ச்சை கேள்விகளுக்கு சத்குரு பதில்கள்...!

சமூகத்தில் அதிகம் பேசப்படும் விஷயங்களான, ராமர் கோவில், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, சபரிமலையில் பாலின உரிமை பற்றிய எகனாமிக் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, சத்குரு தன்னுடைய நேர்த்தியான பார்வையை பகிர்ந்து கொண்டார். அந்தப் பத்திரிக்கை வெளியிட்ட பேட்டியின் தமிழாக்கம்...
sadhguru-interview-with-economictimes
 

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி உங்கள் பார்வை என்ன?

விவசாயத் துறையில் நம் தலையீடு தேவைப்படுகிறது, அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை விவசாயக்கடன் முழுமையான தள்ளுபடி என்று கூறுவது ஏற்புடையது அல்ல. 1970 வங்கிகள் தேசியமயமாக்கபட்ட போது, ஏழைகளுக்கு கடன் கொடுப்பது என உறுதி செய்யப்பட்டது. ஆனால், இப்போது கடனை திருப்பித் தரவேண்டாம் என்று கூறினால், அது சமூகத்தை சட்டவிரோத செயலுக்கு தூண்டுவதுபோல ஆகிவிடும். விவசாயக்கடன், கடன் தள்ளுபடி என்பது மறுபடியும் அவர்களை கடன் கொடுப்பவர்களின் கையில்தான் போய் நிறுத்தும். கடந்த ஐம்பது வருடங்களாக கிராமப்புறங்களுக்கு நிதி கொடுக்கப்பட்டுதான் வந்துள்ளது. பணத்தை திருப்பிச் செலுத்தாத ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்கினால், பின்னர் எத்தனை நாட்களுக்குத்தான் கடன் கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் மத்திய அரசின் முடிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பட்டுவாடா என்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், முன்பு இந்தச் சலுகைகள் அடித்தட்டு மக்களை சென்று அடைந்தது இல்லை. ஜன்-தன் வங்கிக் கணக்கு திட்டம் புரட்சி கரமான திட்டங்களில் ஒன்று.ஆறாயிரம் ரூபாய் என்பது, வறுமைக்கோட்டுக்கு தள்ளப் பட்டவருக்கு குறைந்த தொகை ஒன்றும் இல்லையே.

நீங்கள் GST யை முழுமையாக ஆதரிக்கிறீர்கள். ஆனால் அது சிறுதொழில்களை நசுக்குவதாக ஒரு பார்வை இருக்கிறதே?

கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிக முக்கிய-மான பொருளாதார நடவடிக்கைகளில் GST ஒன்றாகும். இது சிறிய வியாபாரத்தை பாதித்துள்ளது, ஆனால், இந்தியா எப்போதுமே ஒரு சிறு வியாபார நாடாகவேவா இருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் எதுவும் நிகழவில்லை என்ற உங்களது அறிக்கையில் அரசியல் நோக்கம் இருப்பதாக கூறப்பட்டது, அதைப் பற்றி?

கடந்த நான்கு ஆண்டு களாக நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, பிரதான நகரங்களில் எங்கும் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன். காஷ்மீர் மற்றும் சிவப்பு (நக்சல்) தாழ்வாரங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்து உள்ளது. ஆனால் ஒரு குண்டு வெடிப்பு கடைசியாக எப்போது நகர்புறத்தில் நடந்தது என்று கூறமுடியுமா? இதற்குத்தான் நமது பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறினேன். யாரோ பி.ஜே.பிக்கு நன்றி சொல்வதாக கூறிவிட்டார்கள்.

மின்னணு வாக்கு இயந்திரம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். வெற்றி பெற்றால் ஒருவிதமாக பேசுகிறார்கள், தோல்வி அடைந்தால் மற்றொரு விதமாக பேசுகிறார்கள். எல்லா இடங்களிலும் காகிதமற்ற பரிவர்த்தனை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஓட்டுப் போடும் முறையில் மட்டும் பழைய காகித முறையை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்பது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் நாம் விரும்பியபடி அதில் எதையும் திருத்தவும், மாற்றவும் முடியாது என்பதாலா? நான் சமீபத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தை உற்பத்தி செய்பவர்களை சந்தித்தேன். ஒரு இயந்திரம் வேறு ஒரு இயந்திரம் அல்லது நபருடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே அந்த இயந்திரத்தை ஹேக் செய்யமுடியும். நீங்கள் ஒரு தொலைபேசியை, ஒரு கணினியை ஹேக் செய்யலாம். ஆனால் ஒரு கால்குலேட்டரை ஹேக் செய்ய முடியாது.

ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விஷயத்தில் உங்கள் பார்வை என்ன?

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியகம் அங்கு ஒரு கோவில் இருந்ததாக அறிவித்துள்ள போது, நம் நீதிமன்றம் ராமனின் பிறப்பு உண்மைதான் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைப்பது மிகவும் அபத்தமானது. ராமர் கோவில் தொடர்பான விஷயத்தை தேர்தலோடு சம்பந்தப்படுத்தாமல், இது நிலப் பிரச்சனை நீங்கள் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒதுங்காமல், நீதிமன்றம் தலையிட்டு இதை முடித்து வைக்க வேண்டும்.

அந்த மொத்த இடத்தில், 2.7 ஏக்கர் நிலம்தான் பிரச்சனையில் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்னும் பட்சத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய நிலத்தோடு கூடுதலாக 2.7 ஏக்கர் நிலத்தை சர்ச்சைக்குரிய இந்த இடத்துக்கு வெளியே கொடுத்து இந்த நிலப் பிரச்சனையை முடிக்க வேண்டாமா? இந்துக்களை பொறுத்தவரையில் இது ராமர் பிறந்த மண். அந்த உணர்ச்சியில் அதை பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தரப்பில் அப்படிப்பட்ட உணர்வு சார்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு வரும் தேர்தலுக்குள் தீர்வு காணவேண்டும்.

சபரிமலை விஷயத்தில் நீதிமன்றத்தின் பங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சபரிமலை பிரச்சினையை பாலின பாகுபாட்டுடன் இணைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்த தெய்வத்தையும்விட அதிக தேவி கோயில்கள் நம் நாட்டில் உள்ளன. கோயில் பிரார்த்தனைக்கான இடம் அல்ல. தரிசனத்திற்காக நீங்கள் அங்கு செல்கிறீர்கள். சபரிமலை ஐயப்பன் ஒரு அகல் (சுத்த) பிரம்மச்சாரி. இது அவரது தனிப்பட்ட தங்கும் இடம், படுக்கையறை. நீங்கள் ஏன் அங்கு செல்ல விரும்புகிறீர்கள்? கோவிலில் என்ன நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது.

பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அரசாங்கத்தின் அழைப்பு, சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் அடியா?

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு என்ற எண்ணத்திற்கான நேரம் வந்துவிட்டது. தேர்தலுக்கு மிகவும் நெருக்கமாக இந்த முடிவு இருப்பதாக மக்கள் கூறலாம். அப்படி பார்த்தால் நாட்டில் எங்காவது ஒரு தேர்தல் நடந்த வண்ணமே உள்ளது.

 

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1