கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 9

மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளிடமிருந்து சத்குரு யோகப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளக் காரணமாக இருந்த அந்த சுவாரஸ்ய நிகழ்வைக் கூறும் இந்தப் பகுதி, ஸ்வாமிகளின் மல்யுத்த திறத்தையும் பறைசாற்றுகிறது. இன்று பல வசதிகளோடு சொகுசாக யோகா வகுப்பிற்கு செல்லும் நாம், அன்று பயிற்சியில் தவறு செய்யும்போது பிரம்படி பெற்ற இளைஞர்களை நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.

சத்குருவின் தாத்தா, கர்நாடக ஆந்திர எல்லையில் உள்ள சிக்கபல்லபூர் என்னும் ஊரில் வசித்து வந்தார். பெரும் செல்வந்தர். பெரிய வீடு. வீட்டைச் சுற்றிலும் ஏரிகள், குளங்கள் இருந்தன. எனவே ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் சத்குரு உட்பட 20, 25 பேரக் குழந்தைகள் அங்கு கூடிவிடுவர். பெற்றோரின் கெடுபிடி எதுவுமின்றி அங்குள்ள வெட்டவெளிகளில் சுற்றித் திரிவதும், ஏரிகளிலும், குளங்களிலும் பொழுதைக் கழிப்பதுமாக இருப்பார்கள்.

“ஓ, அதுவா, “யோகா என்று கேள்விப்பட்டு இருக்கிறாயா? நான் தினமும் யோகா செய்கிறேன். நீ என் ஆசிரமத்துக்கு வந்தால் உனக்கும் சொல்லித் தருகிறேன்” என்றார்.

ஒருமுறை சத்குரு பள்ளி விடுமுறைக்காக தாத்தா வீட்டில் இருந்தபோதுதான் மல்லாடிஹள்ளி சுவாமிகளும் அந்த வீட்டில் வந்து தங்கினார். மல்லாடிஹள்ளி சுவாமிகள் ஒவ்வொரு ஆண்டும் நிதி திரட்டுவதற்காக வருவார். அப்படி வரும்போதெல்லாம் தாத்தா வீட்டில்தான் தங்குவார். அடுத்த நாள் காலை நேரத்தில் வீட்டின் பின்புறம் இருந்த 60 அடி ஆழமான ஒழுங்கான படிகள் கூட இல்லாத அந்த கிணற்றில் சிறுவர்கள் குதித்து யார் முதலில் மேலே ஏறி வருவது என்ற போட்டியில் இருந்தனர். இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டு இருந்த சுவாமிகள், “நானும் உங்களுடன் போட்டியிடலாமா?” என்று கேட்டார். முதியவர்தானே என்று அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அனைவரும் கிணற்றில் குதித்தனர். சுவாமிகள்தான் முதலில் மேலே வந்தார். சரி, இன்னொரு முறை, இன்னொரு முறை என்று சொல்லி சொல்லி பலமுறை போட்டி நடந்தபோதும் சுவாமிகள்தான் ஒவ்வொரு முறையும் முதலில் வந்தார். சத்குருவுக்கு மிகவும் ஆச்சரியம். அப்போது அவருக்கு வயது 11. என்றாலும் தைரியமாக சுவாமிகளிடம் சென்று, “உங்கள் வயது எவ்வளவு?” என்று கேட்டார்.

“77” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

“எப்படி இவ்வளவு பலசாலியாக இருக்கிறீர்கள்?”

“ஓ, அதுவா, “யோகா என்று கேள்விப்பட்டு இருக்கிறாயா? நான் தினமும் யோகா செய்கிறேன். நீ என் ஆசிரமத்துக்கு வந்தால் உனக்கும் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அந்த மண்தளம் அங்கு வருவோரின் பல நோய்களைப் போக்கும்விதமாகவும் அமைந்திருந்தது. தன்னை நாடி வரும் நோயாளிகளை அந்த மணற்பரப்பிலேயே உறங்கச் சொல்வார்.

காலையில் சீக்கிரமாக எழுவது என்பது சத்குருவுக்கு எப்போதுமே பிரச்னை. பள்ளிக்குச் செல்வதற்காக காலை 7.30க்கு எழுவதே பெரும்பாடு. அப்படியே எழுந்து குளித்துவிட்டாலும் சாப்பாட்டு மேஜையில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார். எனவே யார் காலையில் எழுவது? யார் யோகா செய்வது? என்று அக்கறையின்றி இருந்தார். ஆனால் 77 வயது முதியவர் ஒருவர் தன்னை வென்றுவிட்டாரே என்ற உறுத்தலும் இருந்தது. ‘யோகா உடலுக்கு இவ்வளவு உறுதியைத் தருகிறது என்றால் நானும் அதைக் கற்க வேண்டும்‘ என்று முடிவெடுத்தார்.சத்குருவிற்கு யோகா அறிமுகமானது எப்படி? , sadhguruvirku yoga arimugamaanathu eppadi ?

இரண்டு வருடங்கள் கழித்து மல்லாடிஹள்ளி ஆசிரமத்தில் நடந்த யோக முகாமில் பங்கேற்றார். அங்கு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் யோக முகாம் நடைபெறும். மாநிலம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அந்த முகாமில் பங்கேற்பார்கள். பங்கேற்பவர்கள் அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்து மூன்று மணிக்கே மைதானத்தில் கூடிவிட வேண்டும். பயிற்சியில் தவறு செய்யும்போது சுவாமியின் உதவியாளர்கள் அருகில் வந்து பின்தொடையில் பிரம்பால் அடிப்பார்கள். அப்படி அடி வாங்கிவிட்டால், பிறகு ஓரிரு நாட்களுக்கு தரையில் அமரக்கூட முடியாமல் போய்விடும். எனவே, விருப்பம் இல்லாமலோ அல்லது அரைகுறை விருப்பத்தோடோ நீங்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட முடியாது.

சுவாமிகள் சிறந்த மல்யுத்த வீரரும்கூட. அழிந்து கொண்டு இருந்த மல்யுத்தக் கலையை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருந்தார். ஆசிரமத்தில் ஆயுர்வேத முறைப்படி ஒரு மல்யுத்தக் களத்தை அமைத்திருந்தார். அதில் நிரப்பப்பட்ட மண் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பொருட்களைக் கொண்டு இருந்தது. அதைப் பக்குவப்படுத்த மட்டுமே பல மாதங்கள் ஆயின. 1960-களில் அதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். அந்த மண்தளம் அங்கு வருவோரின் பல நோய்களைப் போக்கும்விதமாகவும் அமைந்திருந்தது. தன்னை நாடி வரும் நோயாளிகளை அந்த மணற்பரப்பிலேயே உறங்கச் சொல்வார். அதற்கு அத்தனை மருத்துவக் குணங்கள் இருந்தது.

ஆசனப் பயிற்சிக்குப் பின்னர் சத்குரு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுவாமிகளின் ஆசிரமம் சென்று அவருக்கு உதவியாக இருப்பார். அங்கு சத்குருவுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு சுவாமிகளுக்கு எதிராக மல்யுத்தம் செய்வதுதான். ஒரு பக்கம் 80 வயதான சுவாமிகள், மறுபக்கம் சுமார் 18 வயதுள்ள இளைஞர்கள் இருந்தும் சில நிமிடங்களிலேயே அவர்களை வீழ்த்திவிடுவார். "நீங்கள் மேல் உலகம் சென்றால்தான் நாங்கள் சாம்பியன் ஆகமுடியும்’’ என இளைஞர்கள் கேலியாகச் சொல்லும்போதெல்லாம் ‘‘அதற்கு இன்னும் 40 வருடங்கள் உள்ளன. அவ்வளவு வேலை பாக்கி இருக்கிறது’’ என்று பதில் சொல்வார். பல சமயங்களில் அவர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். ஆக 120 வயது வரை இருந்து பல செயல்களைச் சாதிக்கும் திட்டங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.
அடுத்த வாரம்...

இறுதிவாரப் பகுதியான அடுத்த வாரம், ஸ்வாமிகளின் இறுதிநாட்களைப் பற்றி விவரிக்கிறது. பலகோடி மதிப்பிலான தனது ஆசிரமத்தை தனக்கு பின்பு எடுத்து நடத்துவதற்காக யாராவது முன் வந்தார்களா?! அடுத்தவாரம் அறிந்துகொள்ளுங்கள்!

கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்