சத்குருவின் சுதந்திர தின செய்தி
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், 68வது சுதந்திர தினத்தின் சிறப்புச் செய்தியாக, நம் நாடு எப்படிப்பட்ட சாத்தியத்தை சாதிக்கும் தருணத்தில் இருக்கிறது என்பதையும், அதை அடைந்திட குடிமக்களாக நாம் செய்யவேண்டிய கடமையையும் சத்குரு சொல்கிறார்...
 
 

70வது சுதந்திர தினத்தின் சிறப்புச் செய்தியாக, நம் நாடு எப்படிப்பட்ட சாத்தியத்தை சாதிக்கும் தருணத்தில் இருக்கிறது என்பதையும், அதை அடைந்திட குடிமக்களாக நாம் செய்யவேண்டிய கடமையையும் சத்குரு சொல்கிறார்...

ஒரு தேசமாக நாம் இன்று ஒரு புதிய சாத்தியத்தின் விளிம்பில் இருக்கிறோம். 69 ஆண்டு சுதந்திரத்தின் இப்பயணம், கடும்முயற்சி, தியாகம், ஊழல், தடுமாற்றம், பெரிய சாதனைகள் மற்றும் தவறவிட்ட சாத்தியங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. இதில் நான்கு போர்களும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் உள்ளடங்கும். இவை அனைத்தையும் தாண்டி, ஒரு தேசமாக நாம் முற்றிலும் புதுமையான ஒரு சாத்தியத்தின் நுழைவாயிலை அடைந்துள்ளோம்.

நீண்டகாலம் நிலைத்துள்ள பிரச்சனைகளாய் இருக்கும் பெருந்திரளான மக்களின் வறுமைக்கும், அடிப்படை வசதிகளே புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலைக்கும் தீர்வு காண்பதில் வரும் பத்தாண்டுகள் அதிமுக்கியமானது. முதன்முதலாக, மனிதகுலத்தின் பெருந்திரளான மக்களை ஒரு நிலையிலான வாழ்க்கையிலிருந்து இன்னொரு நிலையிலான வாழ்க்கைக்கு எடுத்துப்போகும் வாய்ப்பிற்கான திறவுகோல் நம்மிடம் உள்ளது. ஒரு தேசமாக நாம் ஒன்றாக, விழிப்புணர்வாக, ஒருநோக்குடன் செயல்பட்டால், இது நிஜமாகும். முன்பு எப்போதும் இருந்திராத இந்த சாத்தியத்தை நிதர்சனமாக்கிடும் அதிர்ஷ்டம், இந்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு இருக்கிறது. இந்த நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பேற்றிருப்பவர்களின் கைகளை வலுவாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

புதிய சாத்தியங்களின் சகாப்தத்திற்குள் நம் நாடு நடைபோடட்டும்!

Love & Grace

 

 
?rel=0" frameborder="0" allowfullscreen="">
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1