சத்குருவின் சுதந்திர தினச் செய்தி
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! சத்குருவின் வாழ்த்துச் செய்தி உள்ளே...
 
 

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! சத்குருவின் வாழ்த்துச் செய்தி உள்ளே...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு தலைமுறை நகர்ந்துவிட்டது. இருந்தும் இங்கு அடிப்படையாக என்ன நிகழ வேண்டுமோ அதனை நோக்கி நிறைய செயல்கள் செய்ய தேவை இருக்கிறது.

நம் நாட்டை நன்மையை நோக்கியும் முன்னேற்றத்தை நோக்கியும் கொண்டு செல்லும் தருணம் வந்துவிட்டது. அதனை இந்த தலைமுறை நிகழ்த்த வேண்டும்.

சுதந்திரம் என்பது வெறுமனே கொடி ஏற்றி, கோஷமிடுவதில் இல்லை.

சுதந்திரத்திற்கு அடிப்படை என்னவென்றால், நாமே நம் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறோம் என்பதே. சுதந்திர நாட்டின் மக்கள் என்று நாம் சொல்லும்போது நம்முடைய வாழ்க்கை, நம்முடைய எதிர்காலம், வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய வாய்ப்பு ஆகியவற்றை நாம் உருவாக்குவோம் என்கிற உறுதியுடன் இருப்பது அவசியம். இந்த தலைமுறை மக்கள் இதனை நோக்கி செயல்பட வேண்டும்.

வேறெந்த நாடும் கைக்கொள்ளாத ஓர் அபூர்வமான வழிமுறையில் இந்தியா சுதந்திரம் பெற்றது. தனிமனிதரின் நேர்மை மற்றும் அகிம்சை ஆகிய அணுகுமுறைகளால் இந்த சுதந்திரம் கிடைத்தது.

மகாத்மா தொடங்கி வைத்த இந்த மகத்தான பணி, மக்கள்தொகையின் பெரும் பகுதியினர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட ஒரு வாய்ப்பு வழங்கப்படும்போதும், இந்திய மக்களின் உரிமையான ஒரு நேர்மையான அரசு நடக்கக்கூடிய சூழலை நாம் உருவாக்கும் போதும் மட்டுமே முழுமை பெறும். குடிமக்களின் முழு முயற்சி இல்லாமல், எந்த தேசமும் உயர்வடைந்ததில்லை.

நாம் அனைவருமே இதில் ஈடுபட்டு நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம்முடைய நன்மைக்காகவும், வரும் தலைமுறையின் நன்மைக்காகவும் என்ன செய்ய வேண்டுமோ அதில் ஈடுபட வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும் அருளும்.

இந்த சுதந்திர தினம், நமக்கு முந்தைய தலைமுறை கொடுத்துச் சென்றுள்ள ஓர் அன்பளிப்பு. இதனை நாம் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Love & Grace

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

i like sathguru ji wishes.....

5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

isha is a world team.....