சத்குருவின் சந்தோஷம் எதைப் பொறுத்தது?

சத்குருவின் பதில்கள் நடிகர் சித்தார்த்திற்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களாகிய நமக்கும் பல உண்மைகளை உணர்த்துவதாய் அமைகின்றன. அந்த வகையில் சந்தோஷம் அடைவது குறித்து சித்தார்த் கேட்ட கேள்விக்கு, சாமுண்டி மலையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை சத்குரு கூறுவது வார்த்தையில் அடங்காத ஒரு புரிதலை வழங்குகிறது!
 

ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 4

சத்குருவின் பதில்கள் நடிகர் சித்தார்த்திற்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களாகிய நமக்கும் பல உண்மைகளை உணர்த்துவதாய் அமைகின்றன. அந்த வகையில் சந்தோஷம் அடைவது குறித்து சித்தார்த் கேட்ட கேள்விக்கு, சாமுண்டி மலையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை சத்குரு கூறுவது வார்த்தையில் அடங்காத ஒரு புரிதலை வழங்குகிறது!

சித்தார்த் என்னுடைய அடுத்த கேள்வி உங்கள் தனிப்பட்ட சந்தோஷம் குறித்தது. சந்தோஷம் என்பதன் விரிவாக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்பது எனது கருத்து. கூட்டு சந்தோஷம் என்பதை நான் அவ்வளவாக அறிந்தது இல்லை. உங்களைப் பொறுத்த வரையில் ஒரு தனி மனிதராக, நீங்கள் தனியே இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறீர்களா அல்லது மக்கள் நாடும் ஒன்றை அவர்களுக்கு வழங்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறீர்களா? வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் நீங்கள் வேலை செய்கிறீர்கள். தனியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் உங்களுக்குள் இருக்கிறதா?

சத்குரு:

நான் எப்பொழுதும் தனியாக இருப்பதாகவே நினைக்கிறேன். லட்சக்கணக்கான மக்களுடன் இருந்தாலும் நான் தனியாகதான் இருக்கிறேன். தனியே என்றால் நான் தனிமையைக் குறிப்பிடவில்லை. என் அனுபவத்தில் நான் மட்டுமே இருக்கிறேன். மக்களை பார்த்தால் நான் என்னையே காண்கிறேன். இந்த வகையில் நான் எப்பொழுதும் தனியாக இருக்கிறேன். எனக்குள் நிகழ்ந்த ஒரு அடிப்படையான விஷயம் இது.

என் அனுபவத்தில் நான் மட்டுமே இருக்கிறேன். மக்களை பார்த்தால் நான் என்னையே காண்கிறேன்.

என் இளமை பருவத்தில் நான் செய்து கொண்டிருந்த தொழில் ஒரு சில வருடங்களில் பல மடங்கு பெருகியது. சிறப்பான முறையில் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. நீங்கள் செய்யும் எல்லாமே வெற்றிகரமாக இருக்கும் பொழுது உலகமே உங்களை சுற்றி இருப்பதாக ஒரு பெருமிதம் இருக்கும். அப்போது சந்தோஷமும், நிம்மதியும் ஒரு விஷயமே இல்லை. ஏனென்றால் வெற்றி அவ்வளவு இனிப்பானது.

இது போன்ற ஒரு சூழலில் ஒரு மதியம், ஒரு மணி நேர இடைவெளி கிடைத்த பொழுது மைசூரின் சாமுண்டி மலைக்கு போனேன். அந்த மலையை முழுதுமாக நான் அறிவேன். எனவே ஒரு பாறை மேலே சென்று அமர்ந்தேன். அந்த கணம் வரை இது (தன்னை சுட்டி காட்டி) நான், அது வேறு என்றுதான் இருந்தேன். திடீர் என்று எது நான், எது நான் இல்லை என்று தெரியவில்லை. நான் உட்கார்ந்திருந்த பாறை, சுவாசிக்கும் காற்று, என்னை சுற்றி இருந்த சூழ்நிலை, அனைத்தும் நானாக ஆனது. நான் என்பது அந்த பிரதேசம் முழுதும் வெடித்து சிதறியது.

இந்த பைத்தியக்காரத்தனம் 5, 10 நிமிடங்கள் இருந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் 4 1/2 மணி நேரம் கடந்து இருந்தது. திடீரென எது நான், எது நான் இல்லை என்று தெரியவில்லை. உங்களை தனித்து காட்டும் எல்லைகள் முதன் முறையாக என் வாழ்வில் உடைந்து போயின. இது வேறுபல விஷயங்களை நோக்கி இட்டு சென்றது. நிம்மதியும், சந்தோஷமும் ஒரு விஷயமாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் இப்பொழுது உடலின் ஒவ்வொரு அணுவும் பரவசத்தில் வெடித்து சிதறுவது விவரிக்க இயலாத ஒன்றாக இருந்தது. எனக்குள் நிகழ்வதை விளக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனி நபராக இருந்தது ஒரு சில வாரங்களில் மறைந்து போனது.

அடுத்த வாரம்...

ஒருவர் புற தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா, அனைவருக்குள்ளும் இருக்கும் இந்த கேள்விக்கு பதில் அறிய காத்திருங்கள்

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1