சத்குரு நமக்கு நண்பரா, சர்வாதிகாரியா?

"சத்குருவிற்கும் சீடர்களுக்குமான உறவுநிலை என்ன? சத்குருவை கடவுளாகப் பார்க்கலாமா? சத்குரு ஒரு கேள்வியாக இருக்கிறாரா? அல்லது பதிலாக இருக்கிறாரா?" இந்தக் கேள்விகளெல்லாம் உங்களுடையதாகவும் இருக்கலாம். இந்தப் பதிவு இம்மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கிறது!
 

"சத்குருவிற்கும் சீடர்களுக்குமான உறவுநிலை என்ன? சத்குருவை கடவுளாகப் பார்க்கலாமா? சத்குரு ஒரு கேள்வியாக இருக்கிறாரா? அல்லது பதிலாக இருக்கிறாரா?" இந்தக் கேள்விகளெல்லாம் உங்களுடையதாகவும் இருக்கலாம். இந்தப் பதிவு இம்மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கிறது!

Question:நீங்கள் ஒரு குருவாக எந்த மாதிரி உறவுநிலையில் உங்கள் சீடர்களுடன் இருக்கிறீர்கள்? நண்பராகவா, பெற்றோராகவா, சர்வாதிகாரியாகவா?

சத்குரு:

நான் நண்பராகத்தான் இருக்க விரும்புகிறேன். ஆனால் உங்களிடம் நண்பராக இருப்பது எனக்கு நல்லது. ஆனால் என்னை நண்பராக வைத்திருப்பது உங்களுக்கு நல்லதில்லை. நீங்கள் யாரை நண்பராக வைத்திருப்பீர்கள்? உங்கள் அகங்காரத்திற்கு ஆதரவாக இருப்பவரைத்தானே. அதனால் நான் உங்களுக்கு நண்பராக இருக்க முடியாது.
பெற்றோராக இருப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், பெற்றோர் எனும் நிலையை பலரும் ஒருவித அறியாமையால், கட்டாயத்தால் அடைந்துவிடுகிறார்கள். பெற்றோர்கள், பொதுவாக, தன் வாழ்க்கையில் செய்ய முடியாத ஒவ்வொன்றையும் தன் குழந்தைகள் மூலம் செய்ய நினைப்பவர்கள். அதனால், நான் பெற்றோராகவும் இருக்க முடியாது.

சர்வாதிகாரி? சர்வாதிகாரி என்றால் நீங்கள் ஹிட்லரையும், முசோலினியையும் நினைப்பீர்கள். ஆனால், அவர்களைச் சுற்றி நிகழ்ந்தவை எதுவும் உண்மையில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. கட்டுப்படுத்துவதற்காக வலுக்கட்டாயமாகப் போராடினார்கள். ஆனால், மற்ற இரண்டையும் விட நான் ஓரளவுஇதில் பொருந்துகிறேன். ஏனெனில் உங்கள் உயிர்தன்மையின் சில அம்சங்களைப் பொறுத்த வரை உங்களுக்கு எது நல்லதோ, அதைத்தான் செய்வேன். உங்கள் விருப்பம் பற்றி கவலைப்பட மாட்டேன். எனவே இதுதான் ஓரளவு எனக்கு ஒத்து வருகிறது.

Question:யோகா செய்வதனால் என் உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் உங்களை மருத்துவர் என்று கூறுவதா? கடவுள் என்று கூறுவதா? குரு என்று கூறுவதா?

சத்குரு:

(சிரிக்கிறார்) நீங்கள் தானே யோகா செய்தீர்கள்? நானா செய்தேன்? நீங்கள் செய்த செயலுக்கு என்னை ஏன் ஏதோ பெயரிட்டு அழைக்கிறீர்கள்? என்னை எந்தப் பெயரிலும் அழைக்க வேண்டாம். நீங்கள் யோகா செய்யுங்கள். மாற்றம் ஏற்படும். அவ்வளவுதான். நீங்கள் என்னை மருத்துவர் என்றழைத்தால், தினமும் உங்களுக்கு ஏதாவது ஒரு நோய் வரும். மறுபடி மறுபடி என்னையே கூப்பிடுவீர்கள். உங்கள் பொருட்டு மருத்துவமனை திறந்து உட்கார மாட்டேன். என்னை கடவுள் என்று அழைத்துவிட்டால், உங்களுடைய வீட்டின் குளியலறையை விடவும் சிறியளவில் உள்ள ஒரு அறையில் எனக்கு புகை போடுவீர்கள். அதுவும் எனக்கு வேண்டாம்.

குரு என்று அழைத்தால் தேவையில்லாமல், ஏதேதோ எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடும். உங்களுக்கு அதுவும் தேவையில்லை. நீங்கள் யோகா செய்யுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது, காலையில் கதவு திறந்து, சூரியோதயம் நிகழ்ந்த பிறகு, சூரிய ஒளி அறைக்குள் பாய்கிறது. இந்த சூரியனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம். சூரியனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. நீங்கள் கண் திறந்தால் போதும். அவ்வளவுதான். நீங்கள் யோகா செய்யுங்கள். மற்றவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு பெயரும், பதவியும் கொடுக்க வேண்டாம். நீங்கள் யோகா செய்யுங்கள்.

Question:சத்குரு அவர்களே, நீங்கள்தான் நான் சந்திக்க வேண்டிய கடைசி கேள்வியா?

சத்குரு:

I am not a question, I am an answer. Do I look like a question? என்னைப் பார்த்தால் கேள்வி போலவா தெரிகிறது? நான் கடைசி பதில். நான் கேள்வி இல்லை. நான் உங்களைப் பலவிதமாக கேள்விகள் கேட்கிறேன். ஏனென்றால், உங்களுக்குள் கேள்வியே வரவில்லை. அடிப்படையான கேள்விகள் நீங்கள் இன்னும் கேட்கவேயில்லை. எப்போதும் மேலோட்டமாகவே கேள்வி கேட்கிறீர்கள். சிறிது ஆழமாக கேள்வி கேட்டால் பிரச்சினை வந்துவிடுமோ என்று நிறைய பேர் பயப்படுகிறீர்கள். வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்வி கேட்டீர்கள் என்றால் நான் கடைசி பதிலாக இருப்பேன். கேள்வி மிகவும் தீவிரமாக கேட்டீர்கள் என்றால் இப்போதே பதில் கொடுத்துவிடுவேன் (சிரிக்கிறார்).

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima