மதக்கோட்பாடு, அரசியல், ஆன்மீகம், குழந்தை வளர்ப்பு... இப்படி எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் சத்குருவிடமிருந்து வரும் பதில்கள் கேட்போருக்கு தெளிவைக் கொடுக்கும். அந்த விதத்தில் இரு கேள்விகளுக்கான பதில்கள் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, நீங்கள் எந்தக் கோட்பாட்டைச் சார்ந்தவர்? உங்கள் போதனைகள் எப்படிப் பரப்பப்படுகின்றன?

சத்குரு:

நான் எந்த ஒரு கோட்பாட்டையும் சார்ந்தவனல்ல. நான் சொல்லித் தருபவை அனைத்தும் உள்நிலை அனுபவத்தாலே எழுவது. குறிப்பிட்ட ஒரு பாரம்பரியத்திலிருந்தோ, குறிப்பிட்ட சிந்தனைக் கூடாரத்திலிருந்தோ நான் வரவில்லை. இது முழுக்க உள்நிலை அனுபவத்திலிருந்துதான் வருகிறது. ஒரு தனி மனிதருக்கு என்ன தேவையோ அதன்படி அது தரப்படுகிறது. அவருக்கு நான் தருகிற பயிற்சியை உங்களுக்குத் தந்தால் அது வேலை செய்யாது. இல்லையா? எனவே அறிஞர்களும், தத்துவவாதிகளும் சிலவற்றை போதிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சிந்தனைக் கூடாரத்திலிருந்து வருபவர்கள். என்னுடைய போதனைகள் எந்த ஒரு சிந்தனைக் கூடாரத்தையும் சார்ந்ததல்ல. உள்நிலை அனுபவத்திலிருந்து வருவதை, மனிதர்கள் தேவைப்படுகிற முறையில் பெற்றுக் கொள்கிறார்கள்.

Question: நிறைய அரசியல் தலைவர்கள், உங்களைப் போன்ற சாமியார்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கிறார்கள். எனவே இந்த உலகை யார் ஆட்சி செய்கிறார்கள். அரசியல் தலைவர்களின் பெயரால் துறவிகள் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லலாமா?

சத்குரு:

(உரக்கச் சிரிக்கிறார்) முனிவர்கள் ஆட்சி செய்தால் நல்லது என்று கருதுகிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக முனிவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் தலைவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். உண்மையிலேயே துறவிகள் ஆட்சி செய்ய வேண்டுமென விரும்புகிறேன். அது நடந்தால், உலகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.