புகைப் பிடிப்பதற்கு அடிமையாகி இருப்பதிலிருந்து வெளியே வர விரும்பும்போது, உடல் - மனம் இரண்டையும் முறையாகக் கையாளத் தேவையாக இருக்கிறது. இவ்விரண்டையும் எப்படி சரியாகக் கையாளுவது என்று சத்குரு வழிகாட்டுகிறார்.

Question: நான் அதிகம் புகை பிடிப்பேன். இப்பழக்கத்தை எப்படிக் கைவிடுவது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இன்று, ஏதோவொரு விதத்தில் நரம்பைத் தூண்டும் பதார்த்தத்தை அல்லது போதைப் பொருளை பயன்படுத்தினால், அதானால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலகில் போதுமான அளவு விழிப்புணர்வு இருக்கிறது. முன்பெல்லாம் அட்டைகளில் மிகச்சிறிய எழுத்துக்களில், "புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது" என்று அச்சிடப்பட்டது. இன்று பெரிய படமாக "புகைப்பிடித்தல் மரணத்தை ஏற்படுத்துகிறது", அல்லது "புகைப்பிடித்தல் புற்றுநோய் ஏற்படுத்துகிறது" என்று அச்சிடப்படுகிறது.

பின்விளைவை அறியாமல் செயல்புரியும் முட்டாள் நிச்சயம் வேதனைப்படுவான்.

புற்றுநோய் ஏற்படுத்திக்கொள்வது குற்றம் கிடையாது. நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்றால் புற்றுநோயை வரவழையுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், நீங்கள் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கிறது. அந்த பின்விளைவு வரும்போது, அது என்னவாக இருந்தாலும், அதை சந்தோஷமாக உங்களால் எதிர்கொள்ள முடியுமென்றால், நீங்கள் விரும்புவது எதுவாயினும் செய்து தொலையுங்கள். ஆனால் பின்விளைவு வரும்போது நீங்கள் அழப்போகிறீர்கள் என்றால், என்ன செயல் செய்கிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். வாழ்க்கையே இவ்வளவுதான். இது நீதிபோதனை கிடையாது. பின்விளைவை அறியாமல் செயல்புரியும் முட்டாள் நிச்சயம் வேதனைப்படுவான்.

இயற்கையுடன் இசைந்து இயங்கும் இயந்திரம்

புகைப் பிடிப்பது உண்மையில் முட்டாள்தனமானது. ஏனென்றால் மனித உடலமைப்பு என்பது இயற்கையுடன் இசைந்து இயங்கும் இயந்திரம்! அது புகைப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. இப்போது நம் கார்களை குறைவான புகையை வெளியேற்றும் விதமாக மேம்படுத்த, எரிபொருள் மீதும் என்ஜின்கள் மீதும் பெரியளவில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். புகையே விடாத ஒரு இயந்திரத்தை புகைவிடும் இயந்திரமாக மாற்ற முயற்சிப்பது முட்டாள்தனமல்லவா? இதை நீங்கள் உணர்வீர்களேயானால், இந்தப் பழக்கம் மெதுமெதுவாக குறைந்துவிடும்.

உங்கள் ரசாயன அமைப்பாலேயே ஆனந்தமாய் இருந்திடுங்கள்

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை செய்தால், திடீரென உங்கள் உடலமைப்பு மிகவும் புத்துணர்வாக உணரும். புகைப்பிடிப்பது, காஃபி டீ குடிப்பது, அல்லது வேறேதோ எடுத்துகொள்வதற்கான தேவையே இருந்த சுவடில்லாமல் காணாமல் போய்விடும்.

இதற்கு ஒரு ரசாயன அடிப்படையும் உள்ளது. உங்கள் ரசாயன அமைப்பு நிக்கோட்டீன் அல்லது கஃபீன் அல்லது வேறேதோ இரசாயனத்திற்கு அடிமையாகிவிட்டது. இதை மாற்றமுடியும். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை செய்தால், திடீரென உங்கள் உடலமைப்பு மிகவும் புத்துணர்வாக உணரும். புகைப்பிடிப்பது, காஃபி டீ குடிப்பது, அல்லது வேறேதோ எடுத்துகொள்வதற்கான தேவையே இருந்த சுவடில்லாமல் காணாமல் போய்விடும். அப்போது என்றைக்காவது ஏதோவொன்றை எடுத்துக்கொண்டால், அது ரசிப்பதற்கு மட்டுமாகத்தான் இருக்கும். என்றோ ஒருநாள் காஃபி குடிக்கவேண்டும் அல்லது புகைப்பிடிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் செய்வீர்கள், ஆனால் அது வேண்டுமென்ற நிர்பந்தமோ, உடலளவில் அதனை சார்ந்திருப்பதோ இல்லாமல் போய்விடும்.

எவரிடமும் சென்று, "இதை விட்டுவிடுங்கள், அதை விட்டுவிடுங்கள்" என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படிச் சொன்னால், இரண்டு நிமிடங்களுக்கு சிகரெட்டைக் கீழே வைத்துவிட்டு மீண்டும் ஊதித்தள்ள ஆரம்பித்துவிடுவீர்கள், ஏனென்றால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய அனுபவமாக இருக்கிறது. தற்போது அதுதான் உங்களுக்கு அற்புதமான அனுபவம். ஆனால் புகைப்பிடித்தல், மது, உடலுறவு, போதைப் பொருட்கள், அல்லது நீங்கள் அறிந்திருக்கும் அனைத்தையும் விட மிகப்பெரிய அனுபவமொன்றை உங்களுக்கு நான் உருவாக்கிக் கொடுத்தால், உங்களிடம் "இதை விட்டுவிடுங்கள்" என்று சொல்லவேண்டிய அவசியம் இருக்குமா? அது தானாகவே மறைந்துவிடும். உங்கள் ரசாயனத்தாலேயே எப்படி பேரானந்தமாக இருப்பதென்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் சிகரெட்டையோ மதுவையோ தொடக்கூட மாட்டீர்கள். ஷாம்பவி மஹாமுத்ரா செய்யும்போது, முதல் முறையிலேயே பேரானந்தத்தில் வெடித்துப்போவீர்கள். அதற்குப் பிறகு எதையும் கைவிடச் சொல்லி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையாக இருக்காது. திடீரென உங்கள் வாழ்க்கை சீராகிவிடும்.

தெய்வீகத்தின் போதையில்

நான் ஒருமுறை கூட எந்த போதைப் பொருளையும் தொட்டது கிடையாது, ஆனால் என் கண்களைப் பார்த்தால் நான் எப்போதும் போதையில் இருப்பதை கவனிப்பீர்கள். ஒருநாளின் 24 மணி நேரமும் என்னால் போதையில் இருக்கமுடியும் - பின்விளைவுகளின் பாதிப்பு எதுவுமில்லை, செலவில்லை, இது ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட! மதுவையும் போதைப் பொருட்களையும் நாங்கள் குழந்தைகளின் விளையாட்டுச் சாமானைப் போலப் பார்ப்போம், ஏனென்றால் நம் உயிரோட்டத்தை மட்டுமே வைத்து இன்னும் ஆயிரம் மடங்கு அதிகமாக போதையேற்ற முடியும்போது, ஏன் வெறும் மது? தெய்வீகத்தின் போதையில் மிதந்திடுங்கள்!