பொங்கலுக்கு உறுதி எடுப்போம், நதிகளை காப்போம்
லே-லடாக்கிலிருந்து குமரி, குமரியிலிருந்து டில்லி வரை நடக்கும் இந்த பிரம்மாண்ட பயணத்தில் சில நூறு பேர் இணைவார்கள். மக்களிடமும், விவசாயிகளிடமும் வழிநெடுக நதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 
பொங்கலுக்கு உறுதி எடுப்போம், நதிகளை காப்போம், pongalukku uruthi eduppom nadhigalai kappom
 

சத்குரு:

தமிழ் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு திருவிழாவாக பொங்கல் திருவிழா இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் சங்கராந்தி என்ற பெயரில் இவ்விழா மிக விமரிசையாய் கொண்டாடப்படுகிறது. இது அறுவடை நேரம். அறுவடை என்றால் நம்முடைய உழைப்பிற்கும், நாம் உட்பட்ட சிரமத்திற்கும் பலன் கிடைக்கின்ற நேரம். விவசாயிக்கு மட்டுமல்ல, ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கும் இது மிக மிக முக்கியமான நேரம். யோகப் பாரம்பரியத்தில் இந்த காலத்தை "கைவல்ய பாதை" என்று சொல்வோம்.

லே-லடாக்கிலிருந்து குமரி, குமரியிலிருந்து டில்லி வரை நடக்கும் இந்த பிரம்மாண்ட பயணத்தில் சில நூறு பேர் இணைவார்கள். மக்களிடமும், விவசாயிகளிடமும் வழிநெடுக நதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

டிசம்பர் 22ம் தேதி, சூரியனுக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தத்தில் ஒருவித மாற்றம் நிகழ்கிறது. அதனால், இந்தக் காலகட்டத்தை "உத்தராயணம்" என்று அழைக்கிறோம். அதேபோல, ஜுன் 21ம் தேதி மற்றொரு மாற்றம் நிகழ்கிறது அதனை தட்சிணாயனம் என்கிறோம். உத்தராயணம் பிறக்கும் இவ்வேளையில், வளமான ஒரு காலகட்டத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம்.

நமக்கு சோறு படைக்கும் விவசாயிகள் கடந்த ஒரு வருடத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். போதிய மழை இல்லை. ஆற்றில் நீர் ஓடவில்லை. மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். உடனடியாக இதனை கவனிக்காவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவோம் என்பது உறுதி.

என் இளவயதில், தினமும் காவேரியில் நீச்சலடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அப்போது இருந்த காவேரியை பார்த்துவிட்டு இப்போது காவேரி இருக்கும் நிலையை பார்க்கும்போதும் கண்களில் நீர் கட்டுகிறது.

நம் தேசத்தில் இருக்கும் ஆறுகளின் நீர்வரத்து சராசரியாக, ஆண்டிற்கு 8 சதவிகிதம் குறைந்து வருவதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதே ரீதியில் சென்றால், 15-20 வருடத்திற்குள், வற்றா நதிகள் என்பவை வருடத்தின் சில மாதங்களுக்கு வற்றியே இருக்கும். இந்தச் சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

கடந்த நான்கைந்து வருடங்களாக இதைப் பற்றி நான் சற்று ஆழமாக சிந்தித்திருக்கிறேன். பல விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி, இதற்கான தீர்வும் அறியப்பட்டிருக்கிறது. சில அடிப்படையான செயல்களை நாம் உடனுக்குடன் செய்தால் நம் நதிகளை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

செய்யவேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று நம் மண்ணை வளமாய் வைத்துக்கொள்வது. இரண்டு நம் ஆறுகள் செழிப்பாக ஓடும்படி பார்த்துக்கொள்வது. நமது வாழ்க்கைக்கும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இது மிக மிக முக்கியம். தற்சமயம், தேவையான செயல்களை முறையாய் நாம் செய்யும் பட்சத்தில், நம் ஆறுகளின் நீரோட்டத்தினை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்.

செய்யவேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று நம் மண்ணை வளமாய் வைத்துக்கொள்வது. இரண்டு நம் ஆறுகள் செழிப்பாக ஓடும்படி பார்த்துக்கொள்வது. நமது வாழ்க்கைக்கும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இது மிக மிக முக்கியம். தற்சமயம், தேவையான செயல்களை முறையாய் நாம் செய்யும் பட்சத்தில், நம் ஆறுகளின் நீரோட்டத்தினை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்.

விவசாய தலைவர்களுடனும், சில மாநில அரசுகளுடனும், மத்திய அரசுடனும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். விவசாய தலைவர்கள், நம் அரசு, நம் ஊடகங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெற்றிகரமான செயலாக மாற்றியமைக்க வேண்டும். நம் அடிப்படை பொறுப்பு இது.

பொது மக்களிடத்திலும் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒரு பேரணி நடத்தவுள்ளோம். நதிகளை மீட்பதை மையப்படுத்தி இந்தப் பேரணி அமையும். லே-லடாக்கிலிருந்து குமரி, குமரியிலிருந்து டில்லி வரை நடக்கும் இந்த பிரம்மாண்ட பயணத்தில் சில நூறு பேர் இணைவார்கள். மக்களிடமும், விவசாயிகளிடமும் வழிநெடுக நதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தேவையான மாற்றங்களை சரியான தருணத்தில் நாம் செய்யாவிட்டால், நமது எதிர்காலம் நன்றாக இருக்காது. நமது எதிர்காலத்தை நமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது எதிர்காலத்தை நமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நம் மண்ணை, நம் ஆறுகளை நாம் காப்பாற்றியாக வேண்டும். அனைத்திலும் முக்கியமான பணி இது.

இது ஒருபுறம் இருக்க, பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் ஆனந்தமாய் இருக்கட்டும். விழாவினை கொண்டாடும் அதே நேரத்தில், நம் கைகளில் ஒரு பொறுப்பினை எடுத்துக் கொள்வோம். "நம் நன்மைக்கு என்ன தேவையோ அதனை எடுத்துச் செய்வோம்," என்கிற பொறுப்பு அது. இதில் நான் உங்களுடன் இருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1