இறந்தவர்களுக்கான சடங்குகளை ஆண்கள் மட்டுமே செய்து வரும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட காரியங்களை பெண்கள் செய்யலாமா என்று சத்குருவிடம் கேட்டபோது...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இதில் பல அம்சங்கள் உள்ளன. பல காரணங்களுக்காக, பெண்கள் இதனை செய்யக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். பழங்காலத்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் 8,10,12 முறைகள் கூட கருத்தரிப்பாள். அதனால், அவள் பெரும்பாலான நேரங்களில், ஒன்று தாய்மையடைந்திருப்பாள் அல்லது அவள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாள். இது போன்ற சமயங்களில், குறிப்பாக கருத்தரித்திருக்கும் பொழுது அவள் இம்மாதிரியான சூழ்நிலைகளில் இருக்கக்கூடாது. இப்பொழுதும் கூட இது பின்பற்றப்படுகிறது. சடங்குகள் நடந்துக்கொண்டிருந்தால், பல காரணங்களுக்காக கருவுற்றிருக்கும் பெண்கள் அங்கு வர அனுமதியில்லை. இதன் பின்னணியில் ஒரு அறிவியலும் இருக்கிறது.

ஒரு ஆண் தாய்மையடைய வேண்டுமென்று நினைத்தாலும், முடியாதல்லவா? இது பாரபட்சமில்லையா?

இதெல்லாம் இல்லாது இருந்தாலும் பெண்ணுக்கு அவளது மாதாந்திர சுழற்சி இருக்கின்றது. இதிலிருந்து விடுபட்டால் பிரச்சினையில்லை என்றாலும், சில நேரங்களில், ஒரு பெண்ணின் உயிரியல் அமைப்பு காரணமாக இம்மாதிரியான காரியங்கள் நடைபெறும் பொழுது அங்கே இருப்பது உகந்ததாக இருக்காது. இது ஒரு சாதாரண சடங்காக மட்டும் இருந்தால், அப்பெண் அதனை செய்யலாம். ஆனால் உண்மையாக ஏதோ ஒன்று நடக்கும்போது, ஒரு உடலற்ற உயிரைக் கையாளும்போது, இது ஒரு சிறு பிரச்சினை தான். அதனால் தான், இதற்குப் பயிற்சித் தேவை என்று சொல்கிறேன்.

ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தால், அதை சமரசம் செய்யாது இருந்தால், ஒரு பெண்ணால் இதை செய்யமுடியலாம். நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதனால் மட்டும் இதனை செய்யக்கூடாது என்றில்லை; அதே சமயத்தில் இது ஒரு பாரபட்சமான வழிமுறை அல்ல. ஒரு ஆண் தாய்மையடைய வேண்டுமென்று நினைத்தாலும், முடியாதல்லவா? இது பாரபட்சமில்லையா? (சிரிப்பலை)

ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு பொறுப்புகள் இருக்கிறதல்லவா? இதனை புரிந்துக்கொண்டு, பாராட்டுவதை விட்டுவிட்டு, ஒவ்வொரு வேறுபாட்டையும் பாரபட்சம் என பார்க்கும் மனநிலை, உலகில் உள்ளது. மனிதர்களிடையே உள்ள சிறு வேற்றுமைகளையும், நாம் ஒரு பாரபட்ச வழிமுறையாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம். இதனால் தான் இந்த பாலின வேற்றுமைகள் வந்துவிட்டன, இல்லையென்றால் இவ்விரு அம்சங்களும் சார்ந்தது அப்படித் தான் இருக்கவும் வேண்டும். பெண்களும் இதனை செய்யலாம், ஆனால் அவர்கள் இதனை செய்யும்பொழுது, ஆண்களை விட, சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு ஆணின் உயிரியல் ஒரு வழியில் பார்த்தால் நிலையானதாக இருக்கிறது. ஒரு பெண்ணின் உயிரியல் பல நிலைகளை கடக்கிறது. அதனால், இது போன்ற விஷயங்களில் அவள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவளால் செய்யமுடியாது என்று சொல்லவில்லை. தேவையான ஒழுங்கு முறையோடு இதனைச் செய்யலாம்.