Question: குரு மற்றும் அவதாரம், இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

சத்குரு:

ஒருவர் ஆடை அணிகலன்களுடன் ஆடம்பரமாக வந்தால் அவரை அவதாரம் என்று நாம் சொல்வோம். (சிரிப்பலை) ஆடம்பரமாக உடை அணிபவர் அவதாரம், எளிமையாக உடுத்துபவர் குரு (சிரிக்கிறார்).

இந்த கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை நீங்கள் பார்க்கவேண்டும். இந்தக் கலாச்சாரம் என்று நான் சொல்லும்போது, இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி நான் பேசவில்லை, இந்த நாட்டின் ஆன்மீக சாத்தியத்தை பற்றி பேசுகிறேன், ஏனெனில், இந்த நாட்டில் ஆன்மீகம் தான் ஒரே நோக்கமாக இருந்தது. போரில் சண்டையிலிருந்தாலோ, தங்கள் உணவுக்காக கொன்று கொண்டிருந்தாலோ, சமைத்துக் கொண்டிருந்தாலோ, அல்லது குடும்பத்தில் இருந்தாலோ, திரும்பத் திரும்ப தர்மம், தர்மம், கர்மம், தர்மம், தர்மம், கர்மம் என்று ஏன் பேசுகிறார்கள் என்றால், முழு கலாச்சாரமே முக்தி எனும் ஒரே குறிக்கோளில் ஊறியிருக்கிறது. இதனால்தான், இது சரியான செயலா? இது தவறான செயலா? என்று தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். பொருள் தன்மை சார்ந்த சூழ்நிலையாக இருந்தால், சரியான செயல் எது என்று ஒரு முட்டாள்கூட சொல்லிவிட முடியும் தானே? குறிப்பிட்ட சூழ்நிலையில் செய்ய வேண்டிய சரியான செயல் என்ன என்பது தெருவில் வாழும் திறமையான குழந்தைக்கு கூட தெரியும் அல்லவா? இந்த விவாதம் எல்லாம் தெருவில் இருக்கும் நிலைமை , உச்சநிலை நோக்கிய பயணத்துடன் பொருந்திப் போகிறதா என்பது பற்றித்தான். அதனால்தான், தர்மம், தர்மம் என்ற விவாதம். தர்மம் பற்றி நடக்கும் பேச்சும் இதுதான்.

அவதாரம் என்பவர், கீழே இறங்கி வந்து கற்றுத் தருவார், கீழே வந்து உண்பார், கீழே வந்து பல செயல்களை செய்வார்.

எனவே, முக்தி எனும் நோக்கத்தை இயல்பாகவே சென்றடைய, செயலை எப்படி செய்ய வேண்டும் அல்லது எப்படி துவங்க வேண்டும் என்று வழியை கண்டறிந்து விட்டால், அந்த நோக்கத்தை அடைவது தவிர்க்கமுடியாது, ஏனென்றால், இந்த நாட்டில், இந்த கலாச்சாரத்தில், அதை கண்டுபிடித்துள்ளார்கள். நான், நாடு, தேசம் என்று சொன்னால், இந்தியா என்ற அரசியல் அமைப்பைப் பற்றி பேசவில்லை. அந்த சலுகையை நீங்கள் எனக்கு தரவேண்டும். நான், மிக கவனத்துடனும், விழிப்புணர்வுடனும், ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்த ஆன்மீக கலாச்சாரத்தை பற்றி பேசுகிறேன். இந்த கலாச்சாரத்தில், ஒரு நபரை அவதாரம் என்று குறிப்பிடப்படுகிறது. அவதாரம் என்றால், வெளிப்பாடு என்று அர்த்தம். எதனுடைய வெளிப்பாடு? ஒவ்வொரு உயிரும், படைத்தவனின் வெளிப்பாடு அல்லவா? நீங்கள் கூட படைத்தவனின் வெளிப்பாடு. அங்கு இருக்கும் தென்னை மரமும், தவழ்ந்து செல்லும் எறும்பும் படைத்தவனின் வெளிப்பாடே. அதை உணர்ந்திருக்கிறோமா என்பதுதான் கேள்வி. படைத்தவனின் அங்கமாக உணரும்நிலை, படைத்தவனை உணரக்கூடிய விழிப்புணர்வு, அப்படிப்பட்ட ஒருவரைக் கண்டால், அந்த கணமே மக்கள் அவரை பகவான் என்று அழைப்பார்கள். பகவான் ரமண மகரிஷி, பகவான் இவர், பகவான் அவர் என்று கூறுவார்கள் தெரியுமா?

ஒரு ரிஷியையோ அல்லது ஒரு முனிவரையோ, அல்லது ஒரு தகுதியான நபரையோ சாதாரண மக்கள் பகவான் என்று சொல்வர். ஒருவர், யாரோ ஒருவரை பகவான் என்று அழைத்தால், அவர் படைப்பவரை உணர்ந்தவர் என்று அர்த்தம். ஒவ்வொருவரும் படைப்பவரின் வெளிப்பாடு. ஆனால், பகவான் என்று அழைக்கப்படும் இவர், படைப்பவரை உணரக்கூடிய வழிகளை அறிந்தவர். அதே நபர், சில சமயம், படைப்பவர் போலும், சில சமயம் மிக சாதாரண மனிதர் போலும் இருந்தால், அவரை அவதாரம் என்று குறிப்பிடுவர். அவர் படைத்தவனின் வெளிப்பாடாக இருந்தாலும், ஒவ்வொரு கணமும் அப்படி வாழ்வதில்லை. சுற்றி உள்ள மக்களுக்கும் இந்த செயல்முறை சென்றடய வேண்டும் என்பதற்காக விருப்பத்துடன் கீழே இறங்கி வருவதும் உண்டு. பகவான் என்பவர் எளிமையாக அமர்ந்து, ஆசீர்வாதம் செய்பவர். அவர் கற்றுத் தரமாட்டார். அவதாரம் என்பவர், கீழே இறங்கி வந்து கற்றுத் தருவார், கீழே வந்து உண்பார், கீழே வந்து பல செயல்களை செய்வார். விழிப்புணர்வுடன், தேவைக்கேற்ப மேலிருந்து கீழே வந்து, கீழேயிருந்து மேலே போய், மேலிருந்து கீழே வந்து செயல்களை செய்பவர் அவதாரம்.
எனவே அவதாரம் என்ற சொல் கண்ணனுக்கு மிக சரியாக பொருந்தும். கண்ணனை, விஸ்வரூபமாக தரிசிக்கும் கணம், மக்கள், பகவான் கிருஷ்ணன் என்று அழைப்பர், ஆனால் கீழே இறங்கி வந்து மற்ற செயல்களை செய்யும்பொழுது அவதாரம் என்று அழைப்பர். கண்ணனை விவரிக்க அவதாரம் என்ற சொல் மிக சரியான பொருத்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.