ஒலிம்பிக்ஸ் 2012 - வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்

ஒலிம்பிக்ஸ் 2012 - வாழ்க்கையும் ஒரு விளையாட்டு, சத்குருவின் பார்வையில்...
 

நீங்கள் விளையாட விருப்பமாக இருக்கும்போதுதான் அதை விளையாட்டு என்று சொல்ல முடியும். விளையாட விருப்பம் என்றால் நீங்கள் அதில் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் உயிர்ப்புடன் இருக்கிறீர்கள் என்று பொருள். இதுதான் வாழ்க்கையின் சாரமும் கூட.

நம் அன்றாட வாழ்வில் ஆன்மீக செயலுக்கு நெருக்கமான, நிகரான விஷயம் ஒன்று இருக்கிறதென்றால் அது விளையாட்டுதான். "பிரார்த்தனையில் இருப்பதை விடவும், ஒரு பந்தை உதைக்கும்போதோ அல்லது ஒரு விளையாட்டை விளையாடும்போதோ தெய்வீகத்துடன் அதிக நெருக்கமாக இருக்கிறீர்கள்," என்று விளையாட்டைப் பற்றி சொல்லும் அளவுக்கு விவேகானந்தர் சென்றுள்ளார். ஏனென்றால் ஈடுபாடில்லாமல் நீங்கள் பிரார்த்தனை செய்யலாம், ஆனால் ஈடுபாடில்லாமல் உங்களால் விளையாட முடியாது. வாழ்க்கையின் சாரமே ஈடுபாடுதான்.

நாம் செய்யும் செயலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் உள்ள சிக்கலான விஷயமே அந்த செயலிலேயே சிக்கிப் போய்விடுவதுதான். மக்கள் அப்படி சிக்கிப் போகும்போது, அதைப் பற்றி அவர்களுக்குள் ஒரு அலுப்பான உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. பிறகு இதே உணர்வு பிறருக்கும் ஏற்படும்படி செய்துவிடுவார்கள்.

எனவே ஒரு விளையாட்டின் அடிப்படை என்னவென்றால் - நீங்கள் ஒரு விளையாட்டை விளையாட விரும்பினால், அதை ஜெயிக்க வேண்டும் என்கிற தீ உங்களுக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் 'நான் தோற்றாலும், அதனால் எந்தப் பாதிப்பும் பிரச்சனையும் இல்லை' என்கிற சமநிலை வேண்டும்.

தோற்பதற்காக நீங்கள் எந்த விளையாட்டையும் விளையாடுவதில்லை, ஜெயிப்பதற்காகத்தான் விளையாடுகிறீர்கள், ஆனால் நீங்கள் தோற்றாலும் அது உங்களுக்குப் பரவாயில்லை. இந்த அடிப்படையான விஷயத்தை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைபிடித்தால், உங்கள் வாழ்க்கை விளையாட்டுதான். இதைத்தான் இந்த உலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் வாழ்க்கை விளையாட்டுதான். ஒரு விளையாட்டின் புனிதமே விளையாடுபவர்கள் தங்கள் எல்லைகளை தகர்த்து, தளைகள் அற்ற அந்த நிலையை உணர்வதுதான்.

ஆன்மீகத்தின் உச்சத்தில்தான் பொதுவாக இந்த நிலை உணரப்படுகிறது. இதனால்தான் ஈஷாவின் அத்தனை விஷயங்களிலும் விளையாட்டு ஓர் அங்கமாக இருக்கிறது, அத்தனை வகுப்புகளிலும் விளையாட்டு ஒரு பாகமாக இருக்கிறது.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

_/_