நிர்வாண ஷடகம் - பாடல் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் இலவச MP3 டவுன்லோடு

நிர்வாண ஷடகம் ஆதிசங்கரர் அவர்களால் இயற்றப்பட்டது. ஆன்மீகத் தேடலின் வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த மந்திரத்தை இங்கே இலவசமாக MP3 டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
நிர்வாண ஷடகம், Nirvana Shatakam Lyrics in Tamil, Vairagya – Mantras, Sadhguru
 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய நிர்வாண ஷடகம் சமஸ்கிருத மந்திரங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சத்குரு அவர்கள் இந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் தெரிவிக்கப்படுவதையும் பற்றி இங்கு குறிப்பிடுகின்றார்.

நிர்வாண ஷடகம், வைராக்யா என்ற ஈஷா பிரம்மச்சாரிகள் பாடிய மந்திரங்கள் தொகுப்பின் ஒரு பகுதியாகும், இது ஒரு இலவச மொபைல் செயலியாகவும், mp3 பதிவிறக்கங்களாகவும் கிடைக்கும்.

நிர்வாண ஷடகம் மந்திரத்தின் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் தமிழ் அர்த்தங்கள் (Nirvana Shatakam Meaning in Tamil) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சத்குரு: நிர்வாண என்றால் "உருவமற்றது" என்று பொருள்.

நிர்வாண ஷடகம் என்பது இதை நோக்கியது - நீங்கள் இது அல்லது அதுவாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் இதுவாக, அதுவாக இருக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் மனம் இதை புரிந்துகொள்ள முடியாது, ஏனெனில் உங்கள் மனம் எப்போதும் ஏதாவதொன்றாக இருக்க விரும்புகிறது. “நான் இதுவாக இருக்க விரும்பவில்லை; நான் அதுவாக இருக்க விரும்பவில்லை, என்று நான் சொன்னால், நீங்கள் நினைக்கலாம், “ஓ! ஏதோ மிக மேன்மையானது!” என்று. மிக மேன்மையானது இல்லை. "ஓ! அப்படியென்றால், வெறுமை?" வெறுமை அல்ல. “ஒன்றுமின்மை?” ஒன்றுமின்மை இல்லை.

இதுதான் இந்த மந்திரத்தின் மூலம் சொல்லப்படுகின்றது.

சத்குரு App - இலவச மொபைல் செயலி

ஈஷா மந்திரங்கள் - வைராக்யா - mp3 பதிவிறக்கம்

நிர்வாண ஷடகம் – பாடல் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் பொருள் (Nirvana Shatakam Meaning in Tamil)

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்
ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல,
நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல,
நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு
ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:
ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் பிராணமும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல,
நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல
நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ
ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ
சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை
எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை,
எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை,
எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை,
நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ
ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி, மதம் இல்லை,
எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை,
நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

அஹம் நிர்விகல்போ நிராகாரோ ரூபோ
விபுத் வாட்ச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியானாம்
ந ச்ச சங்கதம் நைவ முக்திர் ந மேயஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது,
நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன்,
நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறைபிடிக்கப்பட்டவனாகவோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், ஷிவன் நான் ஷிவமே நான்

ஆசிரியர் குறிப்பு: மந்திரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி படிக்க, ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது? என்ற பதிவைப் பார்வையிடவும்.