நரகம்தான் வேண்டும்!
பில்கேட்ஸ் இறந்து சொர்க்கத்திற்கு சென்றால் கடவுள் அவருக்கு என்ன செய்வார்? சத்குரு சொல்லும் இந்த கதை மூலம் அறிந்துகொள்வோம்...
 
 

பில்கேட்ஸ் இறந்து சொர்க்கத்திற்கு சென்றால் கடவுள் அவருக்கு என்ன செய்வார்? சத்குரு சொல்லும் இந்த கதை மூலம் அறிந்துகொள்வோம்...

சத்குரு:

நரகம்தான் வேண்டும்!

வின்டோஸ் சாப்ட்வேரை உருவாக்கிய பில்கேட்ஸ் ஒரு நாள் இறந்து போனார். அவர் செய்த நல்ல காரியங்களாலோ என்னவோ அவர் சொர்க்க வாசலை அடைந்தார். சொர்க்கத்து வாசலில் காத்துக் கிடந்த செயின்ட் பீட்டர், “உங்கள் வின்டோஸ் கண்டுபிடிப்பின் மூலம் இந்த உலகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள், உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்துள்ளீர்கள், அதனால் தேர்வை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம், சொர்கமா நரகமா நீங்களே சொல்லுங்கள்,” என்றார்.

அதற்கு பில்கேட்ஸ், “நான் முதலில் நரகத்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்,” என்றார். ஒரு எலிவேட்டரில் கீழே சென்றார். அங்கே கதகதப்பான கடற்கரை, அற்புதமான கால்ஃப் மைதானம், பிகினியில் பெண்கள் என்று அவர் விரும்பியபடியே இருந்தது அந்தச் சூழல். சியாட்டில் நகரில் அவருக்கு வெகு பரிச்சயமான விஷயங்கள் ஆயிற்றே இவையெல்லாம். “இது நன்றாகவே இருக்கிறது,” என்று திருப்தி கொண்ட பில்கேட்ஸ் அடுத்து சொர்க்கத்தை அடைந்தார்.

சொர்க்கத்தின் கதவுகள் பில்கேட்சுக்காக திறந்தன. அங்கே ஒரே மேகமூட்டமாக இருந்தது, தேவதைகள் பாதி உடல்களுடன் மிதந்து கொண்டிருந்தனர், யாழிசை இசைந்துக் கொண்டிருந்தது. அத்தனை பெரும் ஆனந்த பரவசத்தில் இலயித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு இடங்களையும் பார்த்த பில்கேட்சுக்கு தெரிவு சுலபமாய் போனது. “ஒருநாள் நான் இந்த சொர்க்கத்தில் இருக்கும் நிலைக்கு வளர்வேன் என்று நினைக்கிறேன், ஆனால் தற்சமயம் நரகம்தான் எனக்கு பொருத்தமாய் தெரிகிறது. ஒருவேளை நரகம் எனக்கு அலுத்துப் போனால் யாழிசை கேட்கும் சொர்க்கத்திற்கு நான் வருகிறேன்,” என்றார்.

அடுத்த கணம் நரகத்தின் பதிவேட்டில் பில்கேட்சின் பெயர் பொறிக்கப்பட்டது. எலிவேட்டர் கீழே சென்றது. நரகத்தில் கால் பதித்த பில்கேட்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எரியும் நெருப்பு, தகிக்கும் அனல், பைத்தியம் பிடித்த மனிதர்கள், கொடூரமான சித்திரவதைகள் என்று கண்ணால் பார்க்க முடியாத பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதிர்ந்து போன பில்கேட்ஸ், “என்ன இது, கடற்கரை, கால்ஃப் மைதானம், அந்த பெண்கள் எல்லாம் என்னவானார்கள்?” என்றார். அதற்கு சாத்தான், “உங்களை வசீகரிக்க நாங்கள் செய்திருந்த விளம்பர டெமோ அது,” என்றார்.

பறவைக்குப் பிறகு என்ன?

பறவைக்குப் பிறகு என்ன?, Paravaikku piragu enna?

சினிமாவில் நடிக்க ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பிரதிநிதி, ஒரு முறை, தன்னுடைய அலுவலகத்தில் கோப்புகளை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென உள்ளே நுழைந்த ஒரு மனிதரைப் பார்த்த அவர், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். ஒன்றும் பேசாமல், பறக்கத் துவங்கிய அந்த மனிதர், அலுவலகம் முழுவதும் பறந்து, ஜன்னலுக்கு வெளியே குதித்துப் பறந்து சாகசங்கள் செய்தார்.

இரண்டு தெருக்கள் கடந்து பறந்து, இன்னும் இரண்டு தெருக்களைச் சுற்றியடித்து, மீண்டும் ஜன்னலுக்குள் இடிக்காமல் புகுந்து பிரதிநிதியின் முன் இருந்த மேஜையில் சரியாக லேன்ட் ஆனார்.

“சரி, சரி, உன்னால் பறவையைப் போல நடிக்க முடியும், வேறென்ன செய்வாய்?” என்றார் அந்தப் பிரதிநிதி. அருமை பெருமை புரியாதவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1