நாகதோஷம்… நீங்கள் அறிந்திரா இரகசியங்கள்!

நாகதோஷம் பற்றியும் நாகதோஷத்தால் விளையும் தீரா நோய்களை குணப்படுத்தும் சூட்சும வழிமுறைகள் பற்றியும் பேசும் சத்குரு, ஈஷாவிலுள்ள சூரியகுண்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகா, நாகதோஷத்தை தீர்க்கவல்லது என்பதை சத்குரு விளக்குகிறார். நாகதோஷம் பற்றி இதுவரை அறிந்திராத இரகசியங்கள் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்!
nagadhosham-neengal-arinthidaatha-ragasiyangal
 

பகுதி 1

divider

சத்குரு : சில குறிப்பிட்ட விதமான உளவியல் சார்ந்த பிரச்சனைகளும் அவற்றின் நோய்குறிகளும் முற்றிலும் வித்தியாசமானவை. இவ்வாறு ஏதேனும் ஏற்பட்டால் அதுவும் நாகதோஷமே. அல்லது சில தோல் சம்பந்தமான நோய்கள், இதில் நீங்கள் உங்கள் தோலை நீங்கள் உரிப்பது போலவே உணர்வீர்கள். அடுக்கு அடுக்காக உரிந்து விழும் - இதுவும் நாகதோஷம். அல்லது உங்கள் எலும்புகளில் ஒரு குறுப்பிட்ட விதத்தில் கால்சியமேற்றம் ஏற்படும். நீங்கள் அதை மேலும் அதிகரிக்க அனுமதித்தால், உங்கள் உடல் ஒரு பாறைப்போல மாறிவிடும்.

கால்சியமேற்ற நோயிலிருந்து விடுபட்ட அற்புதம்…

கால்சியமேற்றம் உடலின் மூட்டுகளில் ஏற்பட்டு சில காலத்திற்கு பிறகு எல்லாமே, கிட்டத்திட்ட எல்லாமே ஒரு கல்லைப்போல மாறிவிடும். உண்மையாகவே நீங்கள் ஒரு சுண்ணாம்புக் கல்லால் ஆன ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறிவிடுவீர்கள். பொதுவாக, பெண்ணுக்கு இப்பிரச்சினை வருவதில்லை. ஆணுக்கே அதிகம் ஏற்படுகிறது. இதை (Marble-Bone Disease) பளிங்கு எலும்பு நோய் என்பார்கள். ஏனென்றால், உங்கள் உடல் அல்லது உங்கள் எலும்பு மண்டலம் ஒரு கல்லைப்போல மாறுகிறது. அளவுக்கதிகமான கால்சியமேற்றம் - பளிங்கு என்பதே சுண்ணாம்பு என்பது உங்களுக்கு தெரியுமா... சுண்ணாம்புக் கற்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டுமே பளிங்கு என்பது உருவாகும். ஆக இதுவும் ஒரு நாகதோஷம்.

நம்மிடம் இந்த விதமான பிரச்சனை பெற்றிருந்த ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார், எந்த விதத்திலும் நம்பிக்கை என்பதே இல்லாமல் இருந்தார். பளிங்கு எலும்பு நோயுடன் இங்கு வந்து, இப்போது பரிபூரண நலம்பெற்று, பல சூரியநமஸ்காரம் மற்றும் அனைத்து பயிற்சிகளையும் அவர் செய்கிறார். பொதுவாக இவர்கள் சிகிச்சை பலனின்றி நிராகரிக்கப்படுவார்கள். ஏனென்றால், இது வெறும் காலத்தை பொறுத்தது. அவர்களால் அதன் வேகத்தை சிறிது குறைக்க முடியும், ஆனாலும் கால்சியமேற்றம் கட்டாயம் ஏற்படும். உடல் கல்லாகவே மாறிவிடும். அதிக வலியுடன் கூடிய மரணமாக அமைந்துவிடும். ஆகவே இவை எல்லாம் சில வெளிப்பாடுகளே. இன்னும் சில உள்ளன. ஆனால் முக்கியமாக இவ்வித வெளிப்பாடுகளே பொதுவாக நாகதோஷம் என்று கருதப்படுகின்றன.

நாகதோஷத்திற்கான தீர்வு…

nagadhosham-part2

அடிப்படையில், ஒருவிதமாக நாகதோஷத்தை புரிந்துகொள்வது என்பது, எதாவது ஒரு காரணத்தினால் உங்களின் வியானா அல்லது உங்கள் உடலின் பதப்படுத்தலுக்கான பரிமாணம் என்பது செயலில் இல்லை. அது ஒரு புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. நீங்கள் அதை பல வழிகளில் ஊக்குவிக்க முடியும். சரியான பயிற்சி முறைகளினாலோ அல்லது சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளினாலோ அல்லது சில குறிப்பிட்ட சக்திநிலையில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதனாலோ... நீங்கள் இவனுடன் (சூரியகுண்டத்தில் உள்ள நாகா சிலையை குறிப்பிட்டு சொல்கிறார்) இருந்தாலே நாகதோஷம் போய்விடும். நாம் இதே தன்மையை ஒரு சிறிய அளவில் தேவியின் துணையுடன் தேவி கோவிலில் உருவாக்கி உள்ளோம். நாகதோஷத்துடன் வந்த மக்களின் வாழ்க்கையே மாறிப்போனதாகவும், சில பிரச்சினைகளிலிருந்து அவர்கள் எவ்வாறு குணமடைந்தார்கள் என்பதை பற்றிய கதைகளையும் இப்போதே சிலர் என்னிடம் சொல்கிறார்கள். இது அதே தன்மையின் மிகப் பெரிய வெளிப்பாடாக அமையும். அங்கே அவள் வேறு ஒரு விதத்தில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறாள்.

தொடர்ந்து வளரும் சூரியகுண்ட நாகா…

suryakund-nagaஇவன் (சூரியகுண்டத்தில் உள்ள நாகம்) மெதுவாகவே வளருவான். வளர்ந்து மிகவும் வலிமையானவன் ஆவான். இப்போது இவன் பெரியவன் இல்லை, ஆனால் இவன் வளருவான். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இங்கு வந்து பார்த்தீர்களென்றால், இவன் மிக மிக ஆதிக்கம் மிகுந்தவனாய் இருப்பான். இவன் இந்த இடத்தை மிக பெரிய அளவில் ஆதிக்கம் செய்வான், ஏனென்றால் அப்போது இவன் மிகப் பெரியவனாக வளர்ந்து இருப்பான். ஏனென்றால், நாகம் எப்போதுமே எதாவது ஒன்றின் ஆதரிப்பிலேதான் இருக்க வேண்டும். இது தனக்குத்தானே தனிப்பட்ட ஒரு சக்திநிலை அல்ல. இது ஒரு உணரும் திறன். இது உள்வாங்கும் தன்மை கொண்டது. இவனுடைய இயல்பே உள்வாங்கும் தன்மையாக இருப்பதால், ஒரு ஆற்றல் வாய்ந்த மூலஸ்தானம் இருந்தால் மட்டுமே, ஒரு வலிமையான சக்திநிலை ஆதாரம் இருந்தால் மட்டுமே, இவன் வளருவான். இவன் தானே ஒன்றும் இல்லாதவன், ஆனால் இவன் உள் வாங்குவான். மிக திறம்பட இவன் உள்வாங்குவதால் இவன் பெரிய வடிவம் பெறுவான்.

இதனாலேயே, நாகத்தின் சக்திநிலை ஒருவிதத்தில் இருந்தாலும், நாம் இவனை சந்திரனுடன் அடையாளப் படுத்துகிறோம், ஏனென்றால் இவனும் நிலவைப் போலவே ஒரு பிரதிபலிப்புதான். ஆனால் நாகத்தின் தன்மை என்பது அடிப்படையில் சூரியன், ஆனால் நாம் அவனை சந்திரன் என்றே கருதுவோம். ஏனென்றால், இவன் ஒரு பிரதிபலிப்பு. பொதுவாக இவனை நாம் சிவனின் ஒரு பிரதிபலிப்பு என்று சொல்வோம். எது இல்லையோ அதை உங்களால் உணர முடியாது; அதை இவன் ஏற்கனவே உணர்ந்துவிட்ட படியால், நீங்கள் இவன் மூலமாக உணர முடியும். ஆகவே இவன் மிகவும் முக்கியமானவன்.

நாகதோஷமும் நவீன மருத்துவமும்

ஆக, நாகதோஷம் என்பதில், நீங்கள் உங்கள் ஊர்வனவற்றிற்கான மூளையுடன் அடையாளப்பட்டு இருப்பதுதான் மிக மோசமான நிலை என்று நான் முன்பே சொல்லிவிட்டேன். அதை ஒரு வியாதி என்று சொல்ல முடியாது. அறியாமை ஒரு வியாதி அல்ல. ஆனால், அது மிகவும் கொடியது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிகக் கொடிய கேடு என்பது அறியாமைதான். ஆனால், அது ஒரு வியாதி என்று மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கவில்லை. உண்மையில் பெற்றிருக்க வேண்டும். (சிரிக்கிறார்)

மருத்துவ துறையில் சில தோல் சம்பந்தமான நிலைமைகளுக்கு பெயரே இல்லாமல் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். வழக்கமாக, மக்களுக்கு இருக்கும் சில தோல் சம்பந்தமான பிரச்சனைகளை உளவியல் சார்ந்த நிலை என்று கருதப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், நவீன மருத்துவம் என்பது எவ்வாறு இருக்கிறதென்றால், நீங்கள் உங்கள் மருந்து கடையில் உள்ள எல்லா மருந்துகளையும் கொடுத்தும் நோய் குணமாகவில்லை என்றால் அது ஒரு சிக்கலான நோய்க்கான அறிகுறி என்றாகிவிடும். இந்த வகையில் நவீன பாஷையில் நாகதோஷம் என்பதை சர்ப்ப நோய்க்கான அறிகுறி எனலாம் (சிரிக்கிறார்).

 

tamilapp

 

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1