தென்னிந்தியாவில் மெய்பொருள் நாயனார் என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவபக்தர். எப்படிப்பட்ட பக்தர் என்றால், யாரொருவர் சிறு அளவு திருநீறு அணிந்திருந்தாலும், அவரை சிவனாகவே நினைத்தார், பரிபூரணமாக நம்பினார்.

ஒரு அரசர் இவ்வாறு வாழ்ந்தால், அது அவருக்கு எப்போதுமே ஆபத்துதான். ஆனால் அதுபற்றி அவர் கவலைப்படவில்லை. சிவனை, சிவனிடம் கொண்ட பக்தியை தன் உயிரினும் மேலாகவே கருதினார். இப்படி இந்த அரசர் இருப்பதை அறிந்த அவர் எதிரிகளில் ஒருவர், சிவபக்தராக வேடம் பூண்டு, திருநீற்றை நெற்றி முழுவதும் இட்டுக்கொண்டு, அவரைக் கொல்லும் நோக்குடன் அரண்மனைக்குள் வந்தார்.

அவனைக் கண்டதும் அந்த மன்னர் சிரம்தாழ்த்தி, வந்தனம் செய்து வரவேற்றார். நல்ல நேரம் பார்த்து, வந்தவன்அவன் மறைத்து வைத்திருந்த வாளை அரசரின் பின்புறத்தில் குத்தினான். அந்த வாள் அவர் உடலின் பின்புறத்திலிருந்து முன்பாக வந்தது. இதன் சித்தரிப்பை தியானலிங்க உள்மண்டபத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். உடனே அந்த அரசர் அவரது காவல்வீரர்களை அழைத்து, இவரை உடனடியாக ஊர் எல்லைக்கு அப்பால் அழைத்து சென்று விட்டுவிடுங்கள். நடந்ததை அறிந்தால் ஊர்மக்கள் இவரைக் கொன்று விடக்கூடும் என்று கூறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவர் சிவனின் அடையாளமான திருநீற்றை அணிந்துள்ளார். அதனால் அவர் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை. முதலில் அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுவிடுங்கள் என்று கூறினார். இதுதான் அசைவில்லா நம்பிக்கை என்பது. பக்தி என்பது.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.