மெய்ப்பொருள் நாயனார் - உயிரைத் துச்சமாக்கி பக்தியின் உச்சம் தொட்ட கதை
நம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீகத் தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக் கிடந்த காலத்தில் நடந்த கதையிது.
 
மெய்ப்பொருள் நாயனார், Meipporul nayanar
 

தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! பகுதி 3

நம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீகத் தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக் கிடந்த காலத்தில் நடந்த கதையிது.

தென்னிந்தியாவில் செல்வச்செழிப்பு மிகுந்த ஒரு ராஜ்ஜியத்தின் மன்னாராக மெய்ப்பொருள் நாயனார் இருந்தார். அருகிலிருந்த ராஜ்ஜியத்தின் அரசனான முத்தநாதன் மெய்ப்பொருள் மேல் கொண்ட பொறாமையால், அவர் ராஜ்ஜியத்தை ஆக்கிரமிக்க எண்ணினான். ஆனால் அவன் முயற்சியில் தோற்றுப்போய் தனது படைவீரர்கள் பலரையும் போரில் தொலைத்தான். பிறகு, மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் கொல்ல முடியாது என்றால், மாறுவேடம் போட்டுச்சென்று கொல்லவேண்டும் என்று தீர்மானித்தான்.

"இவன் திருநீற்றைப் பூசியிருக்கிறான். இவன் சிவனின் மக்களில் ஒருவன். இவனுக்கு எந்தவொரு துன்பமும் நேரக்கூடாது. நாட்டின் எல்லைக்குக் கூட்டிச்சென்று விடுங்கள், அவனுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொல்லுங்கள்." என்றார்.

முத்தநாதன் ஒரு சிவபக்தனைப் போல வேடம் பூண்டு, மெய்ப்பொருளின் அரண்மனைக்குச் சென்றான். நெற்றியிலும் கைகளிலும் விபூதி பூசிக்கொண்டு, தன் போதனைகளை மெய்ப்பொருள் நாயனாருக்கு வழங்க வந்த ஒரு சைவத் துறவியாக தன்னை அறிவித்துக்கொண்டான். மெய்ப்பொருள் நாயனார் தானே ஒரு சிவபக்தராக இருந்ததால், எந்தவொரு சிவபக்தருக்கும் தன்னை சந்திப்பதில் தடை இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். சிறந்த உணவையும் உடையையும் வழங்கி துறவியை உபசரித்தார்கள். பிறகு காவலாளிகள் அவரை மன்னர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே மெய்ப்பொருள் தன் மனைவியுடன் அமர்ந்திருந்தார். அந்தத் துறவி மெய்ப்பொருளின் மனைவியிடம், இந்த போதனை இருவருக்குமிடையே தனிமையில் நிகழவேண்டும் என்று கூறினார். உடனே அவர் மனைவி எழுந்து சென்றுவிட்டார். மெய்ப்பொருளும் முத்தநாதனும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

கூப்பிய கைகளுடன் மெய்ப்பொருள் முத்தநாதனுக்கு அருகில் வந்தார், உடனே துறவி வேடம் பூண்டிருந்த முத்தநாதன் சட்டென தன் உடைவாளை உருவி மெய்ப்பொருளின் முதுகில் குத்திவிட்டான். ஆழமான காயத்தால் இரத்த வெள்ளத்தில் கிடந்த மெய்ப்பொருள் வலியில் கதற, சப்தம் கேட்ட காவலாளி ஓடோடி வந்தான். அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்றவனாக முத்தநாதனைக் கொல்ல தன் ஆயுதத்தைக் கையிலெடுத்தான். ஆனால் மெய்ப்பொருளோ, முத்தநாதன் நெற்றியிலும் கைகளிலும் பூசியிருந்த திருநீற்றைப் பார்த்து, தன் காவலாளியைத் தடுத்து நிறுத்தினான். "இவன் திருநீற்றைப் பூசியிருக்கிறான். இவன் சிவனின் மக்களில் ஒருவன். இவனுக்கு எந்தவொரு துன்பமும் நேரக்கூடாது. நாட்டின் எல்லைக்குக் கூட்டிச்சென்று விடுங்கள், அவனுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொல்லுங்கள்." என்றார். காவலனுக்குக் கோபம் கொப்பளித்தது, ஆனால் அவனால் தன் அரசனின் கட்டளையை மீற முடியவில்லை. மெய்ப்பொருளின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், அவரின் கடைசி நொடிகளில் காட்சிதந்து ஆசீர்வதித்ததாகக் கூறப்படுகிறது.

'தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை!' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1