Question: மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் பல உணர்வு சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறேன். இதற்கு குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் உதவுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாதவிடாய் உடல்சார்ந்த ஒரு அம்சம். துரதிர்ஷ்டவசமாக, பல பெண்களுக்கு இது மனம்சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது. உடலிற்கும் மனதிற்கும் இடையே ஒத்திசைவு இல்லாததே இதற்கான மூலகாரணம். இதைத் தவிர பஞ்சபூதங்கள் சார்ந்த சில அம்சங்களும் இதற்குண்டு. நம் உடலை உருவாக்கும் பஞ்சபூதங்கள் நமக்குள் ஒத்திசைவில் இருப்பது மிக மிக அவசியம்.

பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும்.

பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும். இது அதிசயம் அல்ல. உடல்சார்ந்த ஒரு இயல்பான விஷயத்தை பல பெண்கள், ஏதோ அருவெறுக்கத்தக்க விஷயத்தை கையாள்வதுபோல், மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்கிறார்கள். தன் சொந்த உடலமைப்புடன் ஒத்திசைவில் வாழ்வது எப்படி என்று யாரும் அவர்களுக்கு சொல்லித் தராது போனதுதான் காரணம்.

உடல்சார்ந்த ஒரு அம்சம், மனம்சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தினால், வெவ்வேறு அம்சங்கள், உங்களுக்குள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கின்றன என்பதையே சொல்கிறது. மாதவிடாய் உடல்சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், அதனை மருத்துவமுறைப்படி கையாள முடியும். ஆனால், அவை மனம்சார்ந்த தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடாது. பூதசுத்தி சாதனா செய்வதால் இதிலிருந்து முற்றிலுமாய் விடுபடலாம்.
நம் உடலிலுள்ள பஞ்சபூதங்களை சுத்திகரிப்பதே பூதசுத்தி சாதனா. நம் உடலை சுகமாகவும் சுமுகமாகவும் வைத்திருந்து, உயர்நிலையிலான சக்திகளை நம்மை நோக்கி ஈர்க்க பூதசுத்தி உதவுகிறது. இதன்மூலம், ஒருவர் தன் உடலின்மீது ஆளுமை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்பு:

ishayoga.org என்ற இணையதளத்தில் அடுத்த பூதசுத்தி நிகழ்ச்சி நடைபெறும் தேதியை அறிந்துகொள்ளுங்கள்.