மரணமும் பிறப்பும் கடந்த விதை
தியானலிங்கத்தின் சக்தி வளையத்திற்குள் சென்றாலே ஆன்ம விடுதலைக்கான விதை ஒருவருக்க்குள் விதைக்கப்பட்டு விடுகிறது என்கிறார் சத்குரு. இம்மாதம் 23ம் தேதியுடன் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்து 14 வருடங்கள் ஆகின்றன. அதை முன்னிட்டு சத்குருவிடமிருந்து ஒரு சிறப்புச் செய்தி...
 
தியானலிங்கம் முழுமைபெற்று பதிநான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு நடந்த பிரதிஷ்டைக்குப் பின்னர் ஆன்மீகத் தேடுதல் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை என்னால் 100% உறுதியாகச் சொல்லமுடியும். உலகெங்கும் ஆன்மீகத் தேடுதல் கொண்டோர் நிச்சயமாக அதிகரித்திருக்கிறார்கள். இது தொடர்ந்து அதிகரிக்கும். தியானலிங்கத்திற்கு அதற்கான ஆற்றல் உள்ளது.

தியானலிங்கம் தனித்துவமான சக்தி கொண்டது. ஒரு மனிதனின் உடல், மனம், சக்தி என்ற எல்லா நிலைகளிலும் தியானலிங்கம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தியானத்திற்கான தீட்சை தரவல்லது தியானலிங்கம். அதற்கான விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது.

ஒரு சரியான சூழ்நிலையை உருவாக்கினால் அது விரைவில் அதன் உச்சநிலையை எட்டுகிறது. இல்லாவிட்டால் அந்த விதை காலம் வரும்வரை காத்திருக்கும். ஆனால் ஒருமுறை தியானலிங்கத்தின் முன்னர் அமர்ந்து அந்த ஆன்ம விதை உங்களுக்குள் விதைக்கப்பட்டால் அதை யாராலும் அழிக்க முடியாது. பிறப்பும், இறப்பும் கூட அந்த விதையை அழிக்க முடியாது. அது வளர்வதற்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும்.

Love & Grace

  0 Comments
 
Login / to join the conversation1