மனதின் கட்டமைப்பை மாற்றுங்கள்!

மனதை ஒரு கான்க்ரீட் சுவர் போல அல்லாமல், நெகிழ்வுத் தன்மை உடையதாக வைத்திருப்பதன் அவசியத்தை சத்குரு இங்கே கூறுகிறார்!
 
 

நீங்கள் உங்கள் மனதை, நீங்கள் விரும்பியவாறு வைத்துக்கொள்ளத் தெரிய வேண்டும். இப்போது உங்கள் மனதின் நிலை எப்படி இருக்கிறதோ, அதேபோலவே உங்கள் வாழ்க்கையின் மீதி உள்ள நாட்களிலும் அதை வைத்திருக்கத் தேவையில்லை. உங்கள் மனதின் கட்டமைப்பை மாற்றிக்கொள்வது என்பது மிகவும் எளிதான செயல். ஏனெனில், உங்கள் தன்மையை வைத்துப் பார்க்கும்போது, இயல்பாகவே மனம்தான் மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது. உங்கள் உடலின் கட்டமைப்பை மாற்றுவதுதான் மிகவும் கடினம். ஆனால் மிகவும் பெரும்பாலான மக்கள் தங்கள் மனதைத்தான் ஒரு கான்க்ரீட் ப்ளாக் போல கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். உங்கள் தலையை எதற்குப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? அடுத்தவரை தலையால் முட்டி வீழ்த்துவதற்கா? கான்க்ரீட் ப்ளாக் போல் இருக்கும் ஒரு தலை மிகவும் எல்லைக்குட்பட்டது. உங்கள் மனதை எவ்வளவு நெகிழ்வுடன் வைத்திருக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை நெகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும். எவ்வளவு நெகிழ்வுடன் வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் அதை பயன்படுத்தி செயல் செய்ய முடியும். நீங்கள் விரும்பினால் இந்தக் கணத்திலேயே நீங்கள் உங்கள் மனதின் கட்டமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1