மனநோய் பிடித்தவர்கள் ஏன் அப்படி உள்ளார்கள்?
மனநோய் பிடித்தவர்களைப் பார்த்தால் அச்சப்படுகிறேன். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?
 
மனநோய் பிடித்தவர்கள் ஏன் அப்படி உள்ளார்கள்?, Mananoi pidithavargal yen appadi ullargal?
 

Question:மனநோய் பிடித்தவர்களைப் பார்த்தால் அச்சப்படுகிறேன். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

சத்குரு:

இன்று மனிதர்களில் 90% பேர் வெவ்வேறு விதமான மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த மனநோயின் அளவு, சில சமயம் கையாளக் கூடியதால் இருக்கிறது. சில சமயம் கை மீறிப் போகிறது. உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சில நேரங்களில் ஆஸ்துமா கையாளக் கூடியதாய் இருக்கிறது. பலநேரம் கை மீறிப் போகிறது. அப்பொழுது எல்லாம் உங்களை நோயாளி என்று கருதுவதில்லை. ஏதோ ஒரு மருந்தையோ, மாத்திரையையோ சாப்பிட்டு சமாளித்துக் கொள்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோய் அதிகமாகிறது. ஒன்று நீங்கள் இறந்து போக வேண்டும் அல்லது மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உங்களை நோயாளி என்று நீங்கள் கருதுகிறீர்கள். அதற்காக மற்ற நாட்களில் நீங்கள் நோயில்லாமல் இருந்ததாக பொருளில்லை. நோயோடிருந்தீர்கள். அதை கையாளுகிற நிலையில் இருந்தீர்கள்.

ஒன்று நீங்கள் இறந்து போக வேண்டும் அல்லது மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உங்களை நோயாளி என்று நீங்கள் கருதுகிறீர்கள். அதற்காக மற்ற நாட்களில் நீங்கள் நோயில்லாமல் இருந்ததாக பொருளில்லை.

அதேபோல் மனநிலையை பொறுத்தவரையிலும் ஏறக்குறைய நோய்வாய்ப்பட்டுத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கையாளக்கூடிய அளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு நேரத்தில் அது அதிகமாகிறது. மீண்டும் சரியாகி விடுகிறது.

ஒரு பைத்தியம், தான் இந்தத் துணோடு பிணைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவரைக் கட்டி வைப்பதற்கு சங்கிலியும் இல்லை. கயிறும் இல்லை. ஆனால் தான் பிணைக்கப்பட்டிருப்பதாக கருதுவார். அவர் அதை சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருப்பார். நீங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டார். ஏனென்றால் அவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்பார். இப்படித்தான் எல்லோரும் தங்களை ஏதாவது தூணோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அதுவும் ஒரு பைத்தியக்காரத்தனம்.

உங்கள் உடல் மற்றும் உணர்வுநிலை சார்ந்த சக்திகளுக்கு வெளிப்பாடு தேவையாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்கள் மதுக்கடைகள், பொழுதுபோக்கு சங்கங்கள், டிஸ்கொதேக்கள் எல்லாம் உருவாக்கினர். தங்களுக்குள் இருக்கிற பைத்தியக்காரத்தனத்தை எங்காவது அவர்கள் செலவிட வேண்டும். இந்த டிஸ்கோதேக்களுக்கு போனால் நீங்கள் மூச்சுவிடக் கூட முடியாது. அவ்வளவு வேர்வையும், புகையும் நிரம்பியிருக்கிறது. அங்கே நடனம் ஆடக்கூட முடியாது. யாராவது உங்களை தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எதையாவது செய்து உங்கள் மனதிலிருக்கிற அந்த பதட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் பைத்தியம் பிடிக்கும். எனவே அந்தந்த வாரம் சேகரித்த பைத்தியக்காரத்தனத்தை சனிக்கிழமை எரிக்கிறீர்கள். மீண்டும் அந்த பைத்தியக்காரத்தனம் சேர்ந்து கொண்டே போகிறது. அடுத்த சனிக்கிழமை இரவுக்காக காத்திருக்கிறீர்கள். இன்னொரு வழியும் இருக்கிறது. இது உங்கள் பைத்தியக்காரத்தனத்தை முழுமையாக கீழே வீசிவிட்டு நடையிடுகிற முறை. அது இனி உங்களுடைய பகுதிகளில் ஒன்றாக இருப்பதில்லை. தியானம் இதைத்தான் செய்கிறது. நீங்கள் இப்பொழுது நடனம் ஆடினால் மகிழ்ச்சிக்காக நடனம் ஆடுகிறீர்கள். எதையோ எரித்தாக வேண்டும் என்பதற்கு இல்லை.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1