மக்களை சரியான திசையில் செலுத்த என்ன வழி?
கடந்த வாரம்... "கோபத்தால் இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்குமா?" என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்த சித்தார்த், கோபத்தினால்தான் மக்களை தட்டி எழுப்ப முடியும் என்கிறார். இதற்கு சத்குரு என்ன விளக்கம் அளித்தார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்...
 
 

ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 2

கடந்த வாரம்... "கோபத்தால் இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்குமா?" என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்த சித்தார்த், கோபத்தினால்தான் மக்களை தட்டி எழுப்ப முடியும் என்கிறார். இதற்கு சத்குரு என்ன விளக்கம் அளித்தார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்...

சித்தார்த்: கோபத்தை விடும் ஒருவர் உங்களில் ஒருவர் என்று சொன்னீர்கள். நான் கோபத்தை விட்டு விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எரியும் பிரச்சனைகள் பல எனக்கு இருக்கிறது. பல கோடி மக்கள் நிறைந்த தேசத்தில், உங்களைப் போன்ற ஒருவர் இதை எப்படி முடிவாக மாற்றுவார். மக்களை தட்டி எழுப்ப பல ஆண்டுகள் ஆனது போல அவர்களை அமைதிபடுத்தவும் இன்னொரு நூற்றாண்டு ஆகுமா?

கோபப்படும் பொழுது நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதில்லை. முட்டாள்தனமான காரியங்களை செய்கிறீர்கள்.

சத்குரு: மக்களை தட்டி எழுப்ப முடியும் என்றால் அதை கோபத்தினால் மட்டுமே செய்ய முடியும் என்ற தவறான புரிதல் உங்கள் மனதில், ஏன் பலரின் மனத்திலும் நிலை கொண்டிருக்கிறது. எழுச்சி என்றால் இன்னும் விழிப்பாக இருப்பது தானே. உறக்கம், எழுவது இரண்டுக்கும் உள்ள வித்யாசமே விழிப்புணர்வுதான். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், உங்களை கொசு கடிக்கிறது. அது உங்களுக்கு தெரிவதில்லை. அதே ஒரு முதலை கடித்தால் உடனே தெரிந்துவிடும். அப்படியென்றால் நீங்கள் விழிப்பாகதான் இருக்கிறீர்கள் ஆனால் கொசுவை தெரியும் அளவுக்கு விழிப்பாக இல்லை.

அதனால் உறக்கத்தில் இருந்து விழிப்பு என்பது ஒரு ஒரு விதமான விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு நிலைக்கு கடந்து செல்வது. எழுவது என்பது எப்பொழுதும் விழிப்புணர்வு நோக்கி நகர்வதாகவே இருக்க வேண்டும். ஆனால் கோபப்படும் பொழுது நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதில்லை. முட்டாள்தனமான காரியங்களை செய்கிறீர்கள். இல்லையா?

சித்தார்த்: நான் சில சமயம் கோபத்தில் நல்ல விஷயங்கள் செய்திருக்கிறேன், அது போல அமைதியாக இருந்த ஒரு சில தருணங்களில் மோசமான விஷயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இது எனது தனிப்பட்ட அனுபவம்.

சத்குரு: நீங்கள் கோபப்படும் பொழுது உங்களிடம் ஒரு வேகம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, தீவிரம் இருக்கிறது. இதற்கு கணிசமான மருத்துவ, அறிவியல் சான்றுகள் மற்றும் மனிதர்கள் அனுபவங்கள் இருக்கிறது. நீங்கள் கோபப்படும் பொழுது இருக்கும் தீவிரத்தோடு அல்லது அதையும் விட பல நூறு மடங்கு தீவிரத்துடன், ஒரு அமைதியான மனதோடு இங்கே இருந்தால் பல அற்புதமான விஷயங்களை நிகழ்த்த முடியும். மக்களை சரியான திசையில் செலுத்த முடியும்.

அடுத்த வாரம்...

"குரு என்பது ஒரு தொழில் வாய்ப்பாக இருக்க முடியுமா?" சித்தார்த்தின் விசித்திரமான இந்த கேள்விக்கு சத்குருவின் பதிலை அறிய அடுத்த வாரம் வாசியுங்கள்

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1