காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து சத்குருவின் செய்தி இங்கே...

நமது முழு பரிவும் இப்போது காஷ்மீர் மக்களுடன்தான் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதினால் காஷ்மீரில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற ஒரு நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்த மாநிலம் தயார்நிலையில் இல்லை. ஆனால் காஷ்மீர் மக்களின் துயர்துடைக்க முழு இந்திய தேசமும் முன்வந்திருக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய மத்திய அரசின் பணிகளும் குறிப்பாக பிரமிக்கத்தக்க முறையில் இலட்சக்கணக்கான மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்த இந்திய இராணுவத்தின் பணிகளும் உண்மையில் மிகவும் மெச்சத்தகுந்தவை. இந்திய இராணுவத்தின் சிறப்பான பணிகள் இல்லாமலிருந்தால், இந்த கோர வெள்ளத்தின் துயரங்கள் மிகவும் அதிகமாக இருந்திருக்கும். இந்த நாட்டில் எங்கே பேரிடர் நிகழ்ந்தாலும் இந்திய இராணுவம் அங்கே தனது சேவையை ஆற்றுகிறது. மிகவும் சிறப்பான முறையில் அவர்கள் செய்துவரும் சேவை, மனதிற்கு மிகவும் இதமளிப்பதாக இருக்கிறது. காஷ்மீரில் இன்னமும் வெள்ளத்தில் தவிக்கும் அனைவரையும் காப்பாற்றும் அவர்களின் முயற்சிக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த அனுதாபங்களையும், அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கு எனது ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.