Question: மருத்துவ உலகில் கருத்தரித்ததை உறுதி செய்ய 40 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கும் உண்மையில் உடலுக்குள் உயிர் நுழைவதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று சொல்லுங்களேன்?

சத்குரு:

ஓ! மருத்துவத் துறையில் 40 நாட்கள் வரை காத்திருக்கிறார்களா? இது எனக்கு புதுச் செய்தி.

நீங்கள் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ அல்லாமல், அவற்றையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு இங்கு ஒரு உயிர் என்பதை உணருங்கள். இந்த உயிர் ஒரு குறிப்பிட்ட அதிர்வுடன் இங்கு இயங்குகிறது. அது பொருந்தியுள்ள உடலுடன் ஒருவித இணைவுடன் அது செயல்படுகிறது.

உயிர் உடலுக்குள் நிலைபெற அதன் தீவிரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பது அவசியம். அந்த வரம்பை தாண்டினால், அது கீழ் வரம்போ அல்லது மேல்நிலை வரம்போ உயிர் உடலுடன் இருக்காது.

இவ்வுடலை அதன் இயற்கையான போக்கில் நிகழ நீங்கள் அனுமதித்தால், வயதாக ஆக மெல்ல அதன் தீவிரம் குறைந்து, தளர்ச்சி அடைவதை பார்க்க முடியும். அது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கீழ் சென்றுவிட்டால், அந்த உயிர் அவ்வுடலில் வாழாது. பொதுவாக, மக்கள் தங்களது ஏதோ ஒரு உறுப்பு பாதிப்படைந்த பின்னரோ சிதைவுற்ற பின்னரோ இறக்கின்றனர், முதுமையில் இறப்பவர்கள் அரிதாகிப் போய்விட்டனர். முதுமையால், இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் இறப்பதுபோல் தெரிந்தாலும் சிறிது உயிரைப் பிடித்துக் கொண்டு உயிர்வாழ்வதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவர் எப்போது இறப்பாரோ என மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தளர்ச்சியடைந்து, ஒரு புள்ளிக்கு மேல் உயிருடன் தாக்குப்பிடிக்க இயலாது எனும் பட்சத்தில் உயிர் விடுவோரையும் பார்த்திருப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் சிதையத் தேவையில்லை, உடல் உறுப்புகள் தன் செயலை இழக்கத் தேவையில்லை, உயிர் தளர்ச்சி அடைந்தால் அது தானாகவே வெளியேறிவிடும். துரதிருஷ்டவசமாக, வெகு சிலரே அவ்வாறு மடிகின்றனர். பெரும்பாலான மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தால் நோயுற்று, உடல் சிதைவுற்று மடிகின்றனர். இதன் மறுபக்கம், உயிர் அதன் உச்சகட்ட தீவிரத்தை அடைந்தாலும், அதன் தீவிரம் ஒரு புள்ளியை கடந்து போனாலும் அந்த உயிரால் உடலுடன் இருக்க முடியாது.

அதீத தீவிரத்தால் உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அதனை மகாசமாதி என்கிறோம். அதாவது உயிர் முழு விழிப்புணர்வுடன் வெளியேறிவிட்டது என்று அர்த்தம். இந்நிலையில் உடல்விட்டு உயிர் பிரிந்தால், ஆட்டம் ஆடி ஓய்ந்தது என்று அர்த்தம். இதனையே முக்தி என்று அழைக்கிறோம். கௌதம புத்தர் இதனை மகாபரிநிர்வாணம் என்றழைத்தார். யோகப் பாதையில் இதனை மகாசமாதி என்றழைக்கிறோம். பலபேர் இதற்கு பல பெயர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் மகாசமாதி அடைந்தால் ஒரு பிறப்பல்ல, ஆட்டம் மொத்தமாய் முடிந்து விட்டது என்று அர்த்தம்.

எனவே, உயிர் உடலுக்குள் நிலைபெற அதன் தீவிரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பது அவசியம். அந்த வரம்பை தாண்டினால், அது கீழ் வரம்போ அல்லது மேல்நிலை வரம்போ உயிர் உடலுடன் இருக்காது. இதனாலேயே, ஒருவர் ஞானமடைதலும் அவர் உயிர்விடும் நேரமும் ஒன்றாக இருக்கிறது. தன் உடலுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, உடலின் செயல்பாடுகளை முழுமையாய் புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே, தன் உடலை ஞானோதயத்திற்கு பின்னும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

அவர் உடலுடன் இருக்க, அறியாமையில் இருப்பது போன்ற ஒரு ஆட்டத்தை ஆடித்தான் ஆகவேண்டும். இவ்வுலகில் ஞானோதயமடைந்த மனிதர்களே கிடையாது, அவர்கள் கட்டாயத்தின் பேரில் அறியாமையில் இருப்பார்கள் அல்லது விழிப்புணர்வாய் கட்டாயத்திற்கு உட்பட்டு இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிலான அறியாமை உங்களிடத்தில் இல்லாதபட்சத்தில் உடலுடன் உயிர் ஒன்றியிருக்க இயலாது.

இராமகிருஷ்ண பரமஹம்சரது வாழ்வில் மிக அழகான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர் வாழ்ந்தபோது, அவரை கடவுளாகவே அவரைச் சுற்றியிருந்தவர்கள் கண்டார்கள். ஆனால், இராமகிருஷ்ணரோ உணவின் மீது தீராத வேட்கை கொண்டிருந்தார். தன் சிஷ்யர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி அடுக்களைப் பக்கம் போய்விடுவார். சாரதா தேவியிடம், “என்ன சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது?” என்று கேட்பார். பலமுறை சாரதா தேவி, இராமகிருஷ்ணரது இந்தச் செய்கையால் மனம் சோர்ந்து போயிருக்கிறார். “உங்களை மக்கள் கடவுள்போல் வணங்குகின்றனர், நீங்களோ உணவுப் பைத்தியமாய் அலைகிறீர்களே” என்பார்.

“அதெல்லாம் சரி, இன்று என்ன சமையல்” என்பார் இராமகிருஷ்ணர். அவர் உணவுப் பித்தராய் இருந்தார். ஒருநாள் மிகுந்த எரிச்சலடைந்த சாரதா தேவி, “உங்களை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது, உணவின் மீது இத்தனை பற்று வைத்துள்ளீர்களே, உங்கள் முன்னால் உட்காரும் மக்கள் எல்லாம் இதுபோன்ற வேட்கையிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை” எனச் சீறினார். அதற்கு இராமகிருஷ்ணர், “ஒருநாள், நீ என்னிடம் உணவுத் தட்டை நீட்டும்போது நான் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால் அன்றிலிருந்து, நான் செல்வதற்கு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது என்று கணக்குப் போட்டுக் கொள்!” என்றார்.

இந்நிகழ்ச்சி நடைபெற்று 7 வருடங்கள் கழித்து, சாரதா தேவி இராமகிருஷ்ணர் முன் உணவினை கொண்டு வந்தபோது, அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவரது நாள் நெருங்கிவிட்டது என்று சாரதா தேவிக்குப் புரிந்தது. அவர் நொறுங்கிப் போனார். அதற்கு இராமகிருஷ்ணர், “நீ அழுது என்ன ஆகப் போகிறது, என் நேரம் முடிந்துவிட்டது!” என்றார்.

இப்படி உயிர் தளர்ச்சியடைந்து உடல் விட்டு சென்ற உயிர், உடலில்லாத நிலையில் மெல்ல தன் தீவிரத்தை மீண்டும் மீட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு எத்தனை நேரம் எடுக்கும் என்பது பல காரணிகளைப் பொருத்த ஒரு விஷயம். ஆனால், அது ஒரு குறிப்பிட்ட தீவிரத்தை அடைந்தவுடன் ஒரு உடலைத் தேடத் துவங்கும்.

இது இராமகிருஷ்ணர் தேர்வு செய்த அறியாமை. இந்த அறியாமையை உருவாக்காமல் அவரால் தன் உடலுடன் வாழ்ந்திருக்க முடியாது. ஒவ்வொரு நாளும், விழிப்புணர்வாக தன் உடலுடன் ஏதோ ஒரு பிணைப்பை இதுபோன்ற மனிதர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இராமகிருஷ்ணர் பயன்படுத்திய கருவி - உணவு.

உணவிற்காக அவர் கிறங்கித்தான் போயிருந்தார். உணவு, உணவு, உணவு என உணவுப் பைத்தியமாய் இருந்தார். அடுத்த நாளே உடல்விட வேண்டும் என நினைத்தால் அவரால் அதைச் செய்ய இயலும், அவர் அப்பேற்பட்ட உயர்ந்த நிலையில் வாழ்ந்தார், அவருக்கு உணவென்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால், உணவே பிரதானமாய் இருப்பது போன்றதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டார். இது விழிப்புணர்வாய் அவர் அமைத்துக் கொண்ட நிலை. அதனால்தான் சொன்னேன், இந்த உலகில் ஞானமடைந்த உயிர்கள் இல்லையென்று. சிலர் அறியாமை விளையாட்டினை விழிப்புணர்வாய் செய்கிறார்கள், பலர் அறியாமையில் உழல்கிறார்கள். இவ்விரு நிலைக்கும் உலகளவு வித்தியாசம் உள்ளது.

இப்படி உயிர் தளர்ச்சியடைந்து உடல் விட்டு சென்ற உயிர், உடலில்லாத நிலையில் மெல்ல தன் தீவிரத்தை மீண்டும் மீட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு எத்தனை நேரம் எடுக்கும் என்பது பல காரணிகளைப் பொருத்த ஒரு விஷயம். ஆனால், அது ஒரு குறிப்பிட்ட தீவிரத்தை அடைந்தவுடன் ஒரு உடலைத் தேடத் துவங்கும். அப்படி அதற்கு சரியான உடல் கிடைக்காத பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் அது நகரத் துவங்கும். உடல் கிடைத்தவுடன் அதற்குள் புகும்.

பெரும்பாலான சமயங்களில், கருவில் இருக்கும் உடல் 40 நாட்களுக்கு பிறகே உயிர்பெற தயாராகும். பெரும்பாலும் 40லிருந்து 48 நாட்களுக்குள் உயிர் உடலினை தேர்வு செய்து, அதற்குள் புகும். சில நேரங்களில் மட்டும் தாமதம் ஆகலாம். ஆனால், 99 சதவிகிதம் 40லிருந்து 48 நாட்களுக்குள் உடலுக்குள் உயிர் நுழையும்.

விழிப்புணர்வில் ஒரு குறிப்பிட்ட உயரத்தை எட்டிய சில உயிர்கள் மட்டும் உடல் கருவிற்குள் நன்றாய் வளரும் வரை காத்திருக்கும். அந்நேரத்தில் பிற உயிர்களையும் அந்த உடலிற்குள் நுழையவிடாது. நான் இதனைப் பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை, காரணம் பிரசவித்துள்ள ஒவ்வொரு பெண்ணைப் பார்த்தும் அவருக்குள் உயிர் நுழைந்துவிட்டதா இல்லையா என கணக்குப் போட துவங்கிவிடுவீர்கள்.

ஒரு பெண்ணின் கருவிற்குள் உயிர் நுழைந்துவிட்டதா, இல்லையா என கணிக்க பல அறிகுறிகள் உள்ளன. 48 நாட்களுக்குள் உயிர் நுழையாவிட்டால், அந்த குழந்தைக்கு அதிஅற்புதமான ஏதோ ஒரு விஷயம் நிகழப் போகிறது என அர்த்தம். அதில் சந்தேகமே வேண்டாம். ஒரு சில குணங்கள் உள்ள உயிர்கள் வேறு உயிர்கள் அந்த கருவிற்குள் நுழையாமல் காக்கும். கருப்பையில் இருக்கும் உடல் சற்றே வளர்ந்தவுடன் அதனுள் புகும்.

கௌதம புத்தர் பிறந்தபோது, அந்தக் குழந்தை மகாஅற்புதமான உயிராக இருப்பான் என கணிக்கப்பட்டது. இதுபோன்ற பிரம்மாண்டமான விஷயம் நிகழும். 48 நாள் வரை கருவில் நுழையாத உயிர் அசாதாரண குணங்களுடன் பிறக்கும். மருத்துவமும் கருத்தரித்ததை 40 நாட்களுக்கு பின்னர் அங்கீகரிக்கிறது என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.