கண்கள் இமைக்கும்போது அதனை வழுவழுப்பாக்கிட போதுமான கண்ணீர் சுரக்காமல் ஏற்படும் உலர் கண்கள் (dry eyes) பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா? இதற்கு எளிமையான வீட்டு வைத்தியம் ஒன்றை சத்குரு சொல்கிறார்.

Question: உலர் கண்களுக்கு (dry eyes) யோக முறைப்படி ஏதாவது வைத்தியம் உண்டா?

சத்குரு:

உங்களை அழவைக்க வேண்டும்! பொதுவாக உலர் கண்கள் இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண்கள் முற்றிலும் உலர்ந்து இருப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கண்ணீர் கொஞ்சம் குறைவாக சுரக்கலாம். கண்ணில் அறுவை சிகிச்சை அல்லது சரிசெய்ய முடியாத பிரச்சனை ஏதாவது இருந்தால், மருந்துக்கடையில் கிடைக்கும் செயற்கை கண்ணீர் திரவம் போன்ற சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் நிலை அப்படி இல்லாவிட்டால், மிக மோசமான பாதிப்பு இல்லை என்றால், இதனை வேறு விதங்களில் சரிசெய்ய முடியும்.

உங்கள் கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டும் விதமான யோகக் கிரியைகள் உள்ளன. ஆனால் சிறந்த வீட்டு வைத்தியத்திற்கு நீங்கள் நீர் பூசணியைப் பயன்படுத்தலாம். நீர் பூசணியை நீங்கள் தோலறுத்துத் துருவினால் அதிலிருந்து சாறு வழியும். அந்தத் துருவலை சாறு சொட்டச்சொட்ட அள்ளி கண்களின் மீது வைத்து 10 நிமிடங்களுக்கு படுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனை எடுத்துவிட்டு பச்சைத் தண்ணீரில் கண்களைக் கழுவுங்கள். இது பிரச்சனையை சரிசெய்துவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.