குடியரசு தினத்தன்று செய்யப்படும் வீரவணக்கங்கள், கொடியேற்றம், படை வீரர்களின் அணிவகுப்பு என நீண்டிடும் சம்பிரதாயங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக் கூட இன்று மக்கள் விருப்பம் காட்டுவது குறைந்துவிட்டது. வெறும் விடுமுறை தினமாக மாறிக் கொண்டிருக்கும் இந்நாளில் நம் முன்னிருக்கும் அரிய வாய்ப்பை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் பாரம்பரியத்தில் ஒரு மனிதர் 60 வயதை அடையும்போது, வாழ்வின் ஒரு பகுதி நிறைவுற்று புதிய தொடக்கத்துக்குள் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறோம். ஒரு தேசமாக, குடியரசு இந்தியா இன்று 64 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது.

இந்த 64 ஆண்டுகளில் தியாகம், ஊழல், மிகப்பெரும் சாதனைகள், பறிகொடுத்த வாய்ப்புகள், 4 போர்கள், தலையெடுக்கும் தீவிரவாதம் எனப் பலவற்றைக் கடந்து தேசம் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. தடைகள் பல இருந்தாலும், முற்றிலும் புதிய சாத்தியங்களை எட்டக்கூடிய கட்டத்தினை நோக்கிச் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

வரக்கூடிய ஆண்டுகள், பெரும்பாலான மக்களின் வறுமையைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றும். மிகப் பெரும் மக்கள் திறனைக்கொண்டு, வாழ்க்கையை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு முதன்முதலாக நம் கைக்கு வந்துள்ளது. ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இது உண்மையாகவே நடந்தேறும். இதற்கு முன் இல்லாத சாத்தியங்களை உணர்கிற அதிர்ஷ்டத்தைப் பெறுகிற இந்தியத் தலைமுறையாக நாம் இருப்போம்.

புதிய சாத்தியங்களை நோக்கி நம் தேசம் செல்லட்டும்!

Love & Grace

Photo Courtesy: Title India