காதலர் தினம் அபத்தமானது என்று ஒருபுறம் பேச்சுக்கள் எழுந்தாலும் மறுபுறும் அது சீரும்-சிறப்புமாக கொண்டாடப்படுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மீடியாக்களும் வணிக நிறுவனங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு பல சிறப்புப் பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்நிலையில், பெருகி வரும் காதலர் தினக் கலாச்சாரத்தை நீங்கள் ஏற்கிறீர்களா என சத்குருவிடம் கேட்டபோது...

Question: காதலர் தினம் கொண்டாடப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

சத்குரு:

இந்தச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பைத்தான் இன்று காதல் என்று வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் உண்டு செய்யும் நிர்பந்தம் தானே அன்றி அதை காதல் என்று சொல்லிவிட முடியாது.

வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால், அந்தக் காதலர் தின கொண்டாட்டங்கள் ஏற்கக் கூடியவைதான்.

காதல் என்பது மனநிலையிலும், உணர்வு நிலையிலும் ஏற்படுகிற ஆழமான ஈடுபாடு. இந்த ஈடுபாட்டால் புதுவிதமான ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான். இந்த ஈடுபாட்டை, செய்கிற செயல்கள் எல்லாவற்றிலும், ஏன் விளையாட்டிலும், தியானத்திலும் கூட கொண்டு வர முடியும். எதை ஈடுபாட்டுடன் செய்தாலும் அது காதல்தான். வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால், அந்தக் காதலர் தின கொண்டாட்டங்கள் ஏற்கக் கூடியவைதான். இன்னும் சொல்லப் போனால், உச்சபட்ச காதல் நிலை தான் ஆன்மீகம் - அதாவது எல்லாவற்றுடனும் காதலோடு ஈடுபடும்போது, உயிரின் இயல்பே காதலாய் மலரும்போது ‘ஆன்மீகம்’ பிறக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.