கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம்...?
விவேகானந்தரின் தீவிரத்தைப் பார்த்த இராமகிருஷ்ணர், அவருடைய மார்பில் கால் பதித்தார். அதன்பின், விவேகானந்தர் 12 மணி நேரத்திற்கு கண்களை திறக்கவே இல்லை. அவர் தன் கண்களைத் திறந்தபோது புது மனிதராக இருந்தார்.
 
கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம்...?, Kadavul iruppatharku enna atharam?
 

Question:கடவுள் எங்கே இருக்கிறார்?

சத்குரு:

விவேகானந்தரின் வாழ்வில் மிகவும் சுவாரஸ்யமான இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவிற்கு 1900 களில் சென்று வந்த முதல் யோகி அவர்தான். விவேகானந்தர் புத்திசாலி, தர்க்க அறிவு சார்ந்து செயல்படுபவர், இராமகிருஷ்ணரிடம் வந்து சேர்ந்த காலத்தில் தீயாய் இருந்த இளைஞர். ஆனால் அவருடைய குருவோ படிப்பறிவில்லாதவர், ஞானி, அவர் பண்டிதரும் கிடையாது. இராமகிருஷ்ணரிடம் விவேகானந்தர், “நீங்கள் கடவுள் பற்றி பேசுகிறீர்கள், கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்றார். அதற்கு இராமகிருஷ்ணர், “நானே ஆதாரம்,” என்றார். விவேகானந்தரோ இந்த மாய உலகம் சுற்றுகிறது, உங்கள் முதுகுத் தண்டில் கடவுள் இருக்கிறார் என்று இராமகிருஷ்ணர் பல கதைகள் சொல்லுவார் என எண்ணியிருந்தார், ஆனால் “நானே ஆதாரம்“ என்று எளிமையாக முடித்தது அவருக்கு ஏமாற்றமாய் இருந்தது.

விவேகானந்தரின் தீவிரத்தைப் பார்த்த இராமகிருஷ்ணர், அவருடைய மார்பில் கால் பதித்தார். அதன்பின், விவேகானந்தர் 12 மணி நேரத்திற்கு கண்களை திறக்கவே இல்லை. அவர் தன் கண்களைத் திறந்தபோது புது மனிதராக இருந்தார்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் இராமகிருஷ்ணரை சந்திக்கச் சென்ற விவேகானந்தர், “எனக்கு நீங்கள் கடவுளை காண்பிக்க முடியுமா?” எனக் கேட்க, “உனக்கு கடவுளை காணும் துணிவிருக்கிறதா?” எனக் கேட்டார். “ஆம், இருக்கிறது,” என பதிலளித்த விவேகானந்தர் சாதாரண நிலையில் இல்லை. அவர் தன் அறிவுத்திறன் முழுவதையும் பயன்படுத்தி பார்த்துவிட்டார் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. அதனால் அவரை இந்தக் கேள்வி ஆழமான வேதனையாய் பதம் பார்த்தது. அவரின் தீவிரத்தைப் பார்த்த இராமகிருஷ்ணர், விவேகானந்தரின் மார்பில் கால் பதித்தார். அதன்பின், விவேகானந்தர் 12 மணி நேரத்திற்கு கண்களை திறக்கவே இல்லை. அவர் தன் கண்களைத் திறந்தபோது புது மனிதராக இருந்தார்.

எனவே உங்களுக்கு இந்தக் கேள்வியின் ஆழம் தெரிந்திருந்தால் இதற்கு வேறுவிதத்தில் நான் பதில் அளித்திருப்பேன். நீங்கள் ஆர்வமாகக் கேட்டதால் நான் உங்களுக்கு கடவுள் கதை வேண்டுமானால் சொல்லலாம். கடவுள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டவை, உங்களுக்கு கடவுள் பற்றிய அறிவை ஊட்டி இருக்கிறதே தவிர, கடவுளை நீங்கள் உணரவில்லை. இதனை உணர தீவிரம் தேவை.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1