காமம் அசிங்கம் அல்ல ! - பகுதி 1
சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?
 
 

Question:"சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?"

சத்குரு:

கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?

செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிராகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?

செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

"அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?" என்று கேட்டாள், எட்டு வயது மகள்.

சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்... "அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?"

"நீ எப்படி அம்மா பிறந்தாய்?"

"என்னையும் இந்தக் குருவியின் அம்மாதான் கொண்டு வந்து போட்டது!"

"அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டதா?

"ஆமாடா செல்லம்!"

"அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?" என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.

இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?

சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்தக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.

கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.

இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.

அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.

Question:"நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?"

சத்குரு:

யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.

உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.

இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.

மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி... இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.

கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.

அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?

 
 
  16 Comments
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

நல்ல கேள்வி சரியான பதில் மேலும் விஷ் & ராஜா கண்ணணின் ஆரோக்கியமான கலந்துரையாடல் . எங்கு எதில் எப்போது இல்லை இணைவு அதை நாம் வெறும் உடல் சம்பந்தபட்டதாக மட்டும் பார்த்தால் நம் பார்வையில் அசிங்கம் உள்ளார்ந்த படைப்பின் தத்துவமாக பார்ப்போமேயானால் உண்மை கோவிலுக்கே போகாதவர்களுக்கும் கூட கலவி என்பதும் அதன் அர்த்தமும் தெரியும்

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

aiya unmaiulla katturai. Anaivaru padithu therinthukolavendiyavai.

5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

உங்கள் பதிலுக்கு நன்றி ராஜா.. காமத்தை சுவைத்த பின்னர் தான் அதை துறக்க
முடியுமா? அவை இல்லாமல் துறத்தல் எப்படி. நம் சிவன் இதற்கு வழி காட்டுவாரா ?
அவரின் பதில் என்னவாக இருக்கும் ?--தமிழ் ..

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

புரோட்டானும் எலக்ட்ரானும் ஒன்றையொன்று காமுறும் வரையில்தான்
இந்த பிரபஞ்சம் இயங்கும்.
வாழ வைக்கும் காமத்திற்கு ஜெ...!

5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

நீங்க தலைப்ப கொஞ்சம் பாருங்க, 'காமம் அசிங்கமல்ல'. எனவே அதைத் துறந்துவிட்டு இங்கே யாருமில்லை, கடந்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு உயிரையே உருவாக்கும் சக்தி அதற்கு இருக்கிறது, எனவே குழம்ப வேண்டாம். கடக்க முயற்சி செய்யலாம்

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

good

3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

yende ippadi..

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

தலைப்பில் சொன்னது போல் "காமம் அசிங்கம் இல்லை" என்றால் ஒரு சராசரி மனிதன் அதையும் மீறி என் வரவேண்டும்!! "இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும்". என்று சொல்லுகிறார். "கடந்து செல்ல முடிய வில்லையே, அப்படியும் கோவில்களில் இதை வைத்து என் ஆற்றாமையை பெருக்க வேண்டுமா?" என்ற ஏக்கம் தானே இந்த கேள்வியில் தெரிகிறது. அதற்கு பதில் கிடைத்ததாக தெரியவில்லையே. எனக்கு தெரியாததால் கேட்கிறேன். குறை கூற அல்ல.
சீரழிந்த சினிமாவில் கூட சென்சார் போர்டே இதை முடக்க முனையும் போது, கோவில்களில் எதற்கு? பதில் கிடைக்குமா?

3 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

காமத்தை கடந்தது ஆண்மீகம் என்பதை உணர்த்தவே இந்த சிர்ப்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோய்ல் கோபுரங்களில் கீழே உள்ள அடுக்குகளில் காம சிர்ப்பங்களும் அதற்க்கு மேலே உள்ள அடுக்குகளில் தேவர்களும், முனிவர்களும் பிறகு உச்சியின் முடிவில் இறைவனும் இருப்பதை பார்க்களாம். இது தான் காமத்தோடு நின்று விடாமல் இறை நிலையை சென்றடை என்று உணர்த்துவதாகும்.

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

வணக்கம் விஷ்,
உங்களது இந்த கேள்வியை யாரோ ஒருவர் ஒருமுறை சத்சங்கத்தில் கேட்டபோது,
"நீங்க சின்ன வயசா இருந்தபோது பெப்பர்மென்ட் மிட்டாய் மேல் உங்களுக்கு ஆவல்.
ஆனா இப்போ இல்ல. ஏன்னா நீங்க வளந்துட்டீங்க!
அதுமாதிரி நீங்க வளந்துட்டீங்கன்னா (உள்நிலையில்) ஆவல் குறைந்து விடும். -சத்குரு
இப்போதைக்கு Just taste the பெப்பர்மென்ட்...

2 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

காமத்தை பற்றிய தவறான கருத்துக்கள் தேவையஇல்லை. பசி போல இதுவும் ஓர் உணர்வுதான். ஆனால் நீங்கள் எதை சாப்பிடுகிறீர் எப்படி சாப்பிடுகிறீர் என்பதை பொருத்துதான். அசிங்கமும் அழகும்.

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

வணக்கம் ராஜா கண்ணன்.
ரொம்ப நன்றி - "இதை கடப்பது எப்படி" என்று கேள்வி கேட்டவர்களுக்கு பதில் கிடைத்ததற்கு.
ஆனால், "கோவில்களில் இது எதற்கு?" என்ற பிரதான கேள்வியின் பதிலுக்கு இன்னும் காத்திருக்கிறேன்.

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

Hi Vish, 'கோவில்களில், ஆணும் பெண்ணும் மோகத்தில் உள்ளது போன்ற சிற்பங்கள் வெளிப்புற கோபுரங்களிலும் மண்டபங்களிலும் மட்டுமே காணப்படுகிறது. இதைக் கடந்து சென்றால்தான், நாம் மூலவரைத் தரிசிக்க முடியும். அதுபோல் நம் உள்நிலையிலும், காமத்தைக் கடந்து செல்லும்போதுதான் மூலமாக இருக்கும் சத்தியை நமது அனுபவத்தில் உணர முடியும்.' இது இந்த கட்டுரையிலேயே கூறப்பட்டுள்ளது. இதை உணர்த்துவதற்காகவே அந்த சிற்பங்கள் symbolic ஆக வைக்கப்பட்டுள்ளன. எனக்குப் புரிந்ததைக் கூறியிருக்கிறேன், உங்கள் கருத்தை கூறவும்.

5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

காமத்தில் இருந்து முயுவதும் விடுபட என்ன செய்ய வேண்டும்....

5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

:)

5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

detailed...