உலக அமைதி நாளான செப்டம்பர் 21ம் தேதியன்று ஈஷா அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை உங்களுக்காக இங்கே பதிகிறோம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலக அமைதி தினம், ulaga amaithi thenam

ஐநா சபையினால் அறிவிக்கப்பட்ட "உலக அமைதி தினம்" இந்த வருடம் ஈஷா அமெரிக்கா வளாகத்தில் பல நிகழ்வுகளுடன் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களும், மாகாண மேயர்களும் ஈஷா தியான அன்பர்களும் ஈஷா மையத்தில் கூடியிருக்க, நிகழ்ச்சி சில நிமிட மௌனத்துடன் துவங்கியது.

இதன் முக்கிய நிகழ்வாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான "Huffington post" ன் துணை நிறுவனரும், ஆசிரியருமான அரியானா ஹஃபிங்க்டன் (Arianna Huffington) உடனான உரையாடல் அமைந்தது. மன அழுத்தம், தூக்கம், திருமணம், நவீன தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் இந்த உரையாடல் அமைந்தது.

மதிய இடைவேளையில், தன்னார்வத் தொண்டர்கள் உணவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ராதே ஜகி அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் சில ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகளும் கூடியிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.