ஈஷா யோக மையத்தின் சக்திநிலை எத்தகைய சாத்தியத்தை வழங்குகிறது?
நீங்கள் வகுப்பையோ அல்லது என்னையோ கூட பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். வெறுமனே இந்த இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டால் கூட, 100 தலைமுறைகளில் செய்ய முடியாததை இந்த ஒரு தலைமுறையில் செய்யமுடியும்.வழங்குகிறது?
 
 

Question:ஈஷா யோக மையத்தில் உயர்ந்த சக்திநிலையும் அதிகப்படியான குழப்பமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறதா? மக்கள் தங்களது கர்மாவை வேகமாக கரைப்பதற்கு இது உதவுகிறதா? உலகில் உள்ள எல்லா புனிதத் தலங்களும் இதுபோன்ற விரைவு முறையை வழங்குகிறதா?

சத்குரு:

அதிதீவிர நிலையிலுள்ள சக்தியும் குழப்பமும் ஈஷா யோக மையத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறதா? அப்படிக் கிடையாது, குழப்பத்தை நான் உருவாக்கவில்லை. தர்க்க ரீதியற்ற சில சூழ்நிலைகளை நான் உருவாக்கும்போது நீங்கள்தான் குழப்பமடைந்து விடுகிறீர்கள். சூழ்நிலைகள் தர்க்க ரீதியில் படிப்படியாக நிகழ வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு நேரத்தில் ஒரு படி மட்டும் ஏற விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் சேரவேண்டிய இடம் கண்ணுக்கெட்டாததாகி விடுகிறது. இப்படி ஏறிக் கொண்டிருந்தால் நீங்கள் எப்போதும் ஏறிக் கொண்டிருக்க வேண்டும் என நான் அறிவேன்; எண்ணற்ற படிகள் ஏற வேண்டும். எனவே இங்கு அங்கு சில படிகளை நீங்கள் தவற வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் குழப்பமடைந்து விடுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் முறையாக எதிர்ப்பார்க்கிறீர்கள். ஆசிரமத்தின் சக்திநிலையைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அதைப்பற்றி நான் என்ன சொல்வது? அதைப்பற்றி நான் சொன்னால் சரியாக இருக்காது. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. எதற்கும் யாருக்கும் வளையாதவர்கள் கூட, மிகவும் காரணரீதியாக இருப்பவர்கள் கூட, எதற்கும் கலங்காதவர்கள் கூட - அவர்கள் குடும்பம் அவர்களை நெருங்க முடியாது, அவர்கள் நண்பர்கள் அவர்களைத் தொட முடியாது - அப்படிப்பட்டவர்கள் கூட இந்த சக்தி சூழ்நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் வீறிடுகிறார்கள். எனவே சக்திநிலை பற்றி நான் எதுவும் பேச வேண்டியதில்லை.

நீங்கள் வகுப்பையோ அல்லது என்னையோ கூட பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். வெறுமனே இந்த இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டால் கூட, 100 தலைமுறைகளில் செய்ய முடியாததை இந்த ஒரு தலைமுறையில் செய்யமுடியும்.

குழப்பத்தைப் பற்றிய உங்கள் புகார் போல மெக்ஸிகோவில் ஒருமுறை நடந்தது. மெக்ஸிகோவில் சில இடங்களில் வெப்ப நீரூற்றுகளும் குளிர் நீரூற்றுகளும் சேர்ந்தாற்போல் உள்ளன. எனவே சுற்றுப்பயணிகள் அதுபோன்ற ஒரு இடத்திற்குச் சென்றபோது அந்த நீரூற்றுகளில் உள்ளூர் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். முதலில் வெப்ப நீரூற்றில் துணியை நனைத்துவிட்டு பிறகு குளிர் நீரூற்றில் மீண்டும் நனைத்துவிட்டு பிழிந்து காயப்போட்டனர். அனைவரும் அப்படித்தான் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சுற்றுப் பயணி இதைப் பார்த்து வழிகாட்டியிடம் சொன்னார், “அவர்கள் துவைப்பதற்கு வசதியாக வெப்ப நீரூற்றையும் குளிர் நீரூற்றையும் அருகருகே அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு இந்தப் பெண்மணிகள் தினசரி நன்றி சொல்வார்கள்”. அதற்கு வழிகாட்டி சொன்னார், “இல்லையில்லை, அப்படி எல்லாம் கிடையாது, சோப் இல்லை என்று அவர்கள் தினமும் புகார் செய்கிறார்கள்” (அனைவரும் சிரிக்கின்றனர்). எனவே உங்கள் புகார் அதைப் போலத்தான் இருக்கிறது.
இங்கு வந்து உட்கார்ந்தாலே உள்ளிருந்து நாங்கள் உங்களை அசைக்கிறோம். குறைந்தபட்சம் நமக்குள்ளே ஏதோ செயல்படுகிறது என்று அறிகிறீர்கள். உங்கள் பொருள்தன்மையைக் கடந்த ஏதோ ஒன்று இப்போது உங்களை உள்ளிருந்து அசைக்கிறது என்று குறைந்தபட்சமாக உணர்கிறீர்கள். உங்களைவிட மிகப் பெரிய ஒன்று உங்களை கதறவும் அல்லது தரையில் ஊர்ந்து செல்லவும் இப்படி ஏதோ ஒன்று செய்கிறது என உணர்கிறீர்கள். உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது பொருட்டல்ல. ஆனால் உங்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று குறைந்தபட்சமாக நகர ஆரம்பிக்கிறது. எனவே சக்திநிலை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பமுடியாது. இதுவரை உங்களுக்கு அப்படி நடக்கவில்லை என்றாலும் உங்களைச் சுற்றிலும் எல்லோருக்கும் அது நிகழ்வதைப் பார்க்கிறீர்கள், அது உங்களுக்கும் நிகழும், கவலைப்பட வேண்டாம் (சிரிக்கிறார்).

அப்படியானால் இது கர்மவினை செயல்முறைகளை விரைவுபடுத்துகிறதா? நிச்சயமாக. நீங்கள் வகுப்பையோ அல்லது என்னையோ கூட பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். வெறுமனே இந்த இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டால் கூட, 100 தலைமுறைகளில் செய்ய முடியாததை இந்த ஒரு தலைமுறையில் செய்யமுடியும். உங்களுக்கு என்னுடன் பிரச்சினை இருந்தாலும் கூட வெறுமனே கண்கள் மூடி இந்த இடத்தில் உட்காருங்கள், அது உங்களுக்கு நிகழ அனுமதியுங்கள். பிறகு உங்களுக்கு நீங்களே அற்புதமான ஒன்றை நிகழ்த்திக்கொள்ள முடியும். ஏனெனில் இந்த இடம் சக்தியால் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த சக்தி தனிச்சிறப்பு வாய்ந்த தன்மையில் இருக்கிறது. நீங்கள் ஏதாவது சக்திநிலை உள்ள இடங்களுக்குச் சென்றால் அங்கிருக்கும் சக்திநிலை ஏதாவது ஒரு குறிப்பிட்ட வடிவத்தையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ சார்ந்திருக்கும். உதாரணமாக தியானலிங்கம் இருக்கிறது. அதைச்சுற்றியும் சக்தி நிலை இருக்கிறது. அதுபோல் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைச் சுற்றி சக்திநிலை இருப்பது இயல்பானதுதான். ஆனால் முழு இடமுமே சக்தியால் நிரப்பப்பட்டிருப்பது என்பது மிகவும் அரிது. நாம் இதை உருவாக்கியதால் நான் இப்படி சொல்லவில்லை. நாம் இப்படி உருவாக்க முடிந்ததற்குக் காரணம் மிக மிக அற்புத உயிர்கள் இந்த இடத்தைச் சுற்றிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆவலும் அதுதான்; நோக்கமும் அதுதான். பல உயர்ந்த உயிர்களின் நோக்கம் அப்படி இருப்பதால்தான் நாம் அப்படி உருவாக்க முடிந்திருக்கிறது. எனவே இங்குள்ள சக்திநிலை பற்றி நான் அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பூமியில் வெகுசில இடங்களே இப்படி உள்ளன. சில இடங்களில் அதிகமான சக்திநிலை உள்ளது, ஆனால் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. வெகுசில இடங்களில் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திநிலை இருக்கிறது. அது குறிப்பிட்ட வழியில் இயங்கி உங்களை சில செயல்கள் செய்ய அனுமதிக்கிறது. அதேநேரத்தில் ஒரு எல்லைக்கு மேல் போவதில்லை.

பூமியில் வெகுசில இடங்களே இப்படி உள்ளன. சில இடங்களில் அதிகமான சக்திநிலை உள்ளது, ஆனால் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. வெகுசில இடங்களில் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திநிலை இருக்கிறது. அது குறிப்பிட்ட வழியில் இயங்கி உங்களை சில செயல்கள் செய்ய அனுமதிக்கிறது. அதேநேரத்தில் ஒரு எல்லைக்கு மேல் போவதில்லை. வெகுசில இடங்களே இப்படி உள்ளன. அவற்றிலும் அனேக இடங்களில் காலநிலை (weather) சரியில்லை. இங்கோ காலநிலையும் நன்றாக இருக்கிறது. கொசு மட்டும்தான் சிறிது பிரச்சினை. ஒருவேளை அவையும் சக்திநிலை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கலாம் (அனைவரும் சிரிக்கின்றனர்). ஏனெனில் சக்தியை ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட தீவிரத்துடன் ஒருமுறை செலுத்திவிட்டால் அதன் பாதிப்பிலிருந்து எதுவும் தப்பமுடியாது. ஒவ்வொன்றும் அதை நோக்கியே நகர ஆரம்பிக்கும்.

எனவே ஆசிரமத்தில் தொடர்ந்து இருந்தீர்களானால் நிச்சயமாக நீங்கள் விரைவான செயல்முறையில் (fast-forward) இருக்கிறீர்கள். ஆனால் இந்த இடம் உங்கள் மீது செயல் செய்ய நீங்கள் விழிப்புணர்வுடன் அனுமதித்தால் செயல்முறை மேலும் விரைவானதாக இருக்கும். விரைவான செயல்முறை உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்காது. பழைய டேப் ரிக்கார்டர்களைப் பார்த்திருப்பீர்கள். டேப் ரிக்கார்டரில் உங்களுக்கு பிடிக்காத தேவையில்லாத பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாட்டிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்கள். அடுத்த பாட்டிற்கு விரைவாக போவதற்கான பட்டனை (fast-forward button) இயக்குகிறீர்கள். அப்போது அழுத்தம் காரணமாக க்க்க்க்கீகீகீகீகீஞ்ஞ்..... என்று சப்தம் போட்டபடி டேப் ஓடுகிறது, எல்லா சப்தமும் கேட்கிறது, திணறுகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம், அந்த தேவையற்ற பாட்டிலிருந்து நீங்கள் இப்போது தப்பித்து விட்டீர்கள். அதுதான் விஷயமே. விரைவான செயல்முறையில் சில அழுத்தங்களும் வலிகளும் இருக்கலாம், ஆனால் அதே முட்டாள்தனங்கள் மீண்டும் மீண்டும் நடக்கத் தேவையில்லை.

முக்திக்கான தாகம் வரக் காரணமே திரும்ப திரும்ப அதேபோல வாழ்க்கையை நடத்த விரும்பாததுதான். வாழ்க்கை எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி, எவ்வளவு அழகாக இருந்தாலும் சரி, அந்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்ய நீங்கள் விரும்பவில்லை. அதனால்தான் முக்திக்கு ஏங்குகிறீர்கள். நீங்கள் துன்பத்தில் இருப்பதால் முக்திக்கு ஏங்கவில்லை. துன்பத்தில் இருந்தால் முக்திக்கு ஏங்கமாட்டீர்கள், சொர்க்கத்திற்குத்தான் ஏங்குவீர்கள். ஏனென்றால் அங்கு இன்பமாக வாழமுடியும். வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் அதையே திரும்பத் திரும்ப செய்ய விரும்பவில்லை. அப்படிச் செய்வது அறிவான செயலாக உங்களுக்குத் தோன்றவில்லை. எனவே விரைவான செயல்முறையின் மூலம் அதிலிருந்து தாவ விரும்புகிறீர்கள்.

எனவே எல்லா புனித இடங்களும் இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதா? அப்படித்தான் என்று கிடையாது. அவை வெவ்வேறு வழிகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக சக்தி தீவிர நிலையில் உள்ள இடங்கள் உங்களை ஒன்றிரண்டு படிகள் தாவ வைக்கின்றன. ஆனால் அந்த எல்லா இடங்களுமே ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் உருவாக்கப்பட்டவை என சொல்ல முடியாது.

அவை உங்களை பல சாத்தியத்திற்கு இட்டுச் செல்லலாம். ஆனால் ஆன்மீக செயல்முறையை விரைவு படுத்துவதைத் தவிர்த்து வேறு சாத்தியம் உருவாகாதபடி நாம் இங்கு உறுதி செய்திருக்கிறோம். வேறு சாத்தியங்கள் ஆன்மீக சாதகருக்கு அவசியமற்றவை.

இங்குள்ளது போல் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் தீவிர சக்திநிலை உள்ள இடங்கள் மிகவும் அரிது. பரிசோதனைகள் மூலம் நாம் அதை நிரூபிக்க முடியும். ஆனால் எதற்காக அப்படி செய்யவேண்டும்? அதை நிரூபிக்கத் தேவையில்லை. அது அங்கு இருக்கிறது. நீங்கள்தான் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஏற்கனவே ஆசிரமத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே பரிசோதனைகள் மூலம் நிரூபித்து எல்லா கூட்டமும் இங்கு வரச்செய்யத் தேவையில்லை. பிறகு மிகவும் கஷ்டமாகிவிடும். இந்த இடம் ஏற்கனவே மக்களால் நிரம்பியுள்ளது. இங்கு மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை அதிக மக்கள் பயன் பெறுவதற்காக இதேபோன்ற சில இடங்களை நாம் மேலும் உருவாக்க வேண்டி வரலாம் (சிரிக்கிறார்).

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1