ஒரு ஹீரோ... ஒரு யோகி... நிறைவு பகுதி

ஈஷாவின் பணிகள் நேர்மையாக நடைபெறுவதற்கு சத்குரு செய்துள்ள செயல் என்ன? பலநூறு காலம் ஈஷா நிலைத்திருக்க சத்குரு உருவாக்கியுள்ள தன்மை என்ன? இந்தப் பதிவில் நடிகர் சித்தார்த்தின் கேள்விகளுக்கு சத்குரு பதில் தருகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: ஈஷா அதன் பணிகளை இன்னும் 100, 200 வருடங்களுக்கு தொடர, சத்குருவின் மரபு பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?

சத்குரு:

என்னை ஏன் அவசரமாக அனுப்பி வைக்க நினைக்கிறீர்கள்? ஈஷா அறக்கட்டளையில் பகுதி நேரமாக 2.5 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்களும், முழு நேரமாக 3000 க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். முழு நேர தன்னார்வ தொண்டர்களை பொறுத்தவரை முக்கியமான செயல்கள் எடுத்து செய்வதற்கு பல்வேறு சவால்களை அவர்கள் சந்திக்கும் விதமாக அவர்களுக்கான பணிகள் விழிப்புணர்வாக உருவாக்கபடுகின்றன. நேர்மை நிறைந்த மனிதர்களை உருவாக்கி இருக்கிறேன் என்று நான் பெருமையாக கொள்ள முடியும். உலகத்தையே அவர்கள் வைத்தாலும் அசைந்து கொடுக்க மாட்டார்கள்.

என்னுடைய கவனம் எப்பொழுதும் மனிதர்கள் மீதுதான், இயக்கம் குறித்து அல்ல.

இது மனிதர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதால் அல்ல. ஈஷா அறக்கட்டளையை உருவாக்கும் பணியில் நான் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தேசத்தில் எல்லா நிலைகளிலும், நேர்மை என்பது இல்லாது விட்டது. குறிப்பாக ஆன்மீக இயக்கங்களில் நேர்மை இல்லாது இருப்பது அச்சுறுத்தல் தருவதாக இருக்கிறது.
ஆனால், நாம் மிக நேர்மையான மனிதர்களை உருவாக்கி இருக்கிறோம். நான் இங்கு ஆறு மாதங்கள்தான் இருப்பேன். மீதி நாட்கள் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அறக்கட்டளையின் அன்றாட நடைமுறைகளை நான் பார்ப்பது இல்லை. ஆனால் 100 சதவிகிதம் சரியான முறையில் அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். நான் மனிதர்களை மட்டும் பார்த்தால் போதும்.
ஒரு நாள் இங்கே வந்தாலும் மக்களுக்குள் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுவது, நாம் உருவாக்கிய கட்டிடங்களால் இல்லை, நாம் உருவாக்கிய மனிதர்களால். என்னுடைய கவனம் எப்பொழுதும் மனிதர்கள் மீதுதான், இயக்கம் குறித்து அல்ல.
அற்புதமான மனிதர்களை உருவாக்கி இருக்கிறோம். இதுவே நம் பெருமை, நம் மரபு!

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...