இறந்தவர்களின் பந்தம், உணர்வுகள், ஞாபகங்கள்... எப்படி கையாள்வது?
இறந்தவர்களுக்காக இத்தனை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி வைத்தோமே ஏன் தெரியுமா? இன்று சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு இறப்பை சரியாக கையாளாததும் ஒரு காரணம் என்கிறார் சத்குரு... தொடர்ந்து வாசியுங்கள்..
 
இறந்தவர்களின் பந்தம், உணர்வுகள், ஞாபகங்கள்... எப்படி கையாள்வது?, Iranthavargalin bandam unarvugal gnabagangal - eppadi kaiyalvathu?
 

இறந்தவர்களுக்காக இத்தனை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி வைத்தோமே ஏன் தெரியுமா? இன்று சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு இறப்பை சரியாக கையாளாததும் ஒரு காரணம் என்கிறார் சத்குரு... தொடர்ந்து வாசியுங்கள்..

சத்குரு:

மனம் என்பது தகவல்களின் குவியல், அதற்கென இயல்பாக சில போக்குகள் உள்ளன, அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுகின்றன. யாரோ ஒருவர் இறந்துபோனால், அப்போது அவருக்கு பிரித்துப்பார்க்கும் மனமிருக்காது, புத்தியும் இருக்காது. அவர்கள் உள்ளத்தில் ஒருதுளி இனிமையைப் போட்டால், அந்த இனிமை பலகோடி மடங்கு பெருகும். ஒருதுளி கசப்பைப் போட்டால், அந்த கசப்பு பலகோடி மடங்கு பெருகும். உதாரணமாக, குழந்தைகள் விளையாடச் செல்லும்போது, முழுமையாக சோர்வடையும்வரை விளையாடுவார்கள். எப்போது நிறுத்தவேண்டும் என்று அவர்களுக்கு நிர்ணயிக்கத் தெரிவதில்லை.

இன்றைய தேதியில், இளம்பருவத்தினர் அதிக ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். முந்தைய தலைமுறைகளில் இருந்ததைவிட இன்று இளமைப் பருவம் பெரும் போராட்டமான காலகட்டமாக இருப்பதற்குக் காரணம், இறந்தவர்களை நாம் சரியாக கையாள்வதில்லை.

அதே போல, இறந்தவர்கள் உள்ளத்தில் எந்தவொரு தன்மையைப் போட்டாலும், அது பலகோடி மடங்கு பெருகும். இதைத்தான் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் குறிக்கிறார்கள். இனிமையாக இருக்கும் நிலைக்குச் சென்றால், அதைச் சொர்க்கம் என்கிறோம். கசப்பாக இருக்கும் நிலைக்குச் சென்றால் அதை நரகம் என்கிறோம். இவை பூமியில் இருக்கும் இடங்களல்ல, இவை உடலை இழந்த அந்த உயிர் உணரக்கூடிய அனுபவரீதியான உண்மைகள்.

இறந்தவர்களுக்கான சடங்குகள்

இன்று எவ்வளவு நன்றாக, அல்லது அபத்தமாக இந்தச் சடங்குகள் செய்யப்படுகின்றன என்பது வேறு விஷயம், ஆனால் இறந்தபின் பல்வேறு நிலைகளில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஒரு முழுமையான அறிவியலே இருக்கிறது. யாரோ ஒருவர் இறந்துவிட்டால், மக்கள் பாரம்பரியமாகச் செய்யும் முதல் விஷயங்களில் ஒன்று, அந்த உடலின் கால் கட்டைவிரல்களை சேர்த்துக் கட்டுவது. இதன்மூலம் அந்த உயிர், உடலை மறுபடியும் சேராத விதமாக, மூலாதாரம் இறுக்கமடைகிறது. “இது உடல்தான், இது நானில்லை” என்ற விழிப்புணர்வுடன் வாழாத ஒரு உயிர், ஏதோ ஒரு துவாரம் மூலமாக, குறிப்பாக மூலாதாரம் மூலமாக உடலுக்குள் நுழைய முற்படும். மூலாதாரத்தில்தான் உயிர் ஜனிக்கிறது. உடல் குளிர்வடைந்து கொண்டிருக்கும் நிலையில், உடலில் கடைசி வரை உஷ்ணமாக இருப்பது மூலாதாரம்தான்.

இறந்த உயிர் உடலுக்குள் மறுபடியும் நுழையப் பார்ப்பதால், ஒருவர் இறந்தவுடன், உடலை ஒன்றரை மணிநேரம், அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்குள் எரித்துவிட வேண்டும் என்று நம் பாரம்பரியத்தில் சொல்லி வந்திருக்கிறார்கள். இறந்த உயிரின் இந்தச் செயலைத் தடுப்பது உயிர்வாழ்பவர்கள் நலனுக்கும் முக்கியமானது. மிகப் பிரியமான யாரோ ஒருவர் இறக்கும்போது, மனம் உங்களை ஏமாற்றத் துவங்கிவிடும். ஒருவேளை ஏதோ அதிசயம் நிகழுமோ, ஒருவேளை கடவுள் அவரை திரும்பக் கொண்டு வருவாரோ, இப்படியெல்லாம் சொல்லும். இதுவரை யாருக்கும் அப்படி நிகழ்ந்ததில்லை, இருந்தும் இறந்த அந்த மனிதர்மீது உங்களுக்கு இருக்கும் உணர்ச்சியால், மனம் அப்படி விளையாடும். அதே விதமாக, உடலைவிட்டு வெளியேறியிருக்கும் அந்த உயிர், மறுபடியும் தன் உடலுக்குள் வந்துவிடலாம் என்று நம்புகிறது.

இந்த நாடகத்தை நிறுத்த, ஒன்றரை மணிநேரத்தில் அந்த உடலை எரித்திட வேண்டும். அல்லது அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்திட, எரியூட்டுவதை அதிகபட்சமாக நான்கு மணிநேரம் வரை நீட்டித்தார்கள். ஆனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உடலை அப்புறப்படுத்த வேண்டும். நம் உடல் இந்த மண்ணால் ஆனது தானே? அதனால், விவசாய சமூகங்களில் தன் சொந்தத்தின் உடல்களை, அவர்களுக்கு ஊட்டமளித்த அதே மண்ணிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று புதைத்தார்கள். இன்று கடையிலிருந்து உணவை வாங்குகிறீர்கள், அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் புதைப்பது, இக்காலத்திற்கு உகந்ததல்ல.

முந்தைய காலங்களில் உடலைப் புதைத்தபோது, உடல் வெகு சீக்கிரத்தில் மண்ணுக்குள் மக்கிப்போக, இறந்த உடலின்மீது உப்பையும் மஞ்சளையும் போட்டார்கள். ஆனால், உடலைத் தகனம் செய்வதே சிறந்தது. ஏனெனில், தகனம் செய்வதால் கதை முழுவதுமாக முடிந்துவிடுகிறது. குடும்பத்தில் ஒரு சாவு நிகழ்ந்தால் அழுது கதறும் மக்கள், தகனம் முடித்ததும் அமைதியாகிவிடுவதைப் பார்க்க முடியும். எல்லாம் முடிந்துவிட்டது என்ற உண்மை, உடல் எரிக்கப்பட்ட உடன் அவர்களுக்குள் ஆழ்ந்துவிடுகிறது. வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல, உடலைவிட்டு வெளியேறியிருக்கும் உடலற்ற அந்த உயிருக்கும் அப்படித்தான். உடல் இருக்கும்வரை, அந்த உயிர் மறுபடியும் உள்ளே வந்துவிடமுடியும் என்ற ஏமாற்றத்தில் இருக்கும்.

இப்படிப்பட்ட நிர்ணயிக்கும் சக்தியில்லாத மனதிற்குள், இறுதிச்சடங்கு மூலம் எப்படியோ ஒருதுளி இனிமையைப் போட்டுவிட்டால், அந்த இனிமை பன்மடங்கு அதிகரித்து, தாமாகவே உருவாக்கிய ஒரு சொர்க்கத்தில் அவ்வுயிர்களை வாழ்ந்திடச் செய்யும். ஆனால், அவை முறையாக செய்யப்பட வேண்டும். சடங்குகளின் நோக்கமும் அதுதான்.

ருனானுபந்தா

யாரோ ஒருவர் இறந்துவிட்டால், ருனானுபந்தத்தை சுவடில்லாமல் எப்படி அழிப்பது என்று நம் பாரம்பரியத்தில் பார்க்கிறோம். அஸ்தியை கங்கையிலும் சமுத்திரத்திலும் கரைப்பதன் நோக்கமே இதுதான்.

உங்களில் பெரும்பாலானவர்கள் ருனானுபந்தா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இது உடல்நிலையிலான உறவைக் குறிக்கிறது. நீங்கள் இன்னொருவரைத் தொடும்போதெல்லாம், இரத்த பந்தத்தாலோ, உடலுறவினாலோ அல்லது கையைப் பிடித்திருந்தாலும், உடைகளை மாற்றியிருந்தாலும்கூட, இரு உடல்கள் ருனானுபந்தத்தை உருவாக்கும்.

யாரோ ஒருவர் இறந்துவிட்டால், ருனானுபந்தத்தை சுவடில்லாமல் எப்படி அழிப்பது என்று நம் பாரம்பரியத்தில் பார்க்கிறோம். அஸ்தியை கங்கையிலும் சமுத்திரத்திலும் கரைப்பதன் நோக்கமே இதுதான். அதை எவ்வளவு தூரமாக பரப்பமுடியுமோ அவ்வளவு தூரமாக பரப்புவதே நம் நோக்கம். அப்போதுதான் பிரிந்தவருடன் ருனானுபந்தா உருவாக்காமல் இருப்பீர்கள். உங்கள் வாழ்வை நீங்கள் சுகமாக தொடர்வதற்கு, இந்த ருனானுபந்தத்தை முறையாக முறிக்கவேண்டும். இல்லாவிட்டால், நவீன சமூகங்களில் நடப்பதுபோல, இது உங்கள் உடல் மற்றும் மனதின் கட்டமைப்புகளை பாதிக்கும்.

குழந்தைகளுக்கு எட்டு வயது ஆகும்வரை இதுபோன்ற விஷயங்கள் அவர்களை பாதிக்காது. இயற்கை அவர்களுக்கு இந்தப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. ஆனால், இறந்தவர்களை சரியாக கவனிக்காவிட்டால், இளைஞர்கள் சொல்லமுடியாத பாதிப்புக்கு ஆளாவார்கள். உடலை இழந்த உயிர்களின் சக்திகள் உலவிக்கொண்டு இருக்கின்றன, அவை எப்போதும் இளைஞர்களைத் தேடித்தான் போகின்றன. ஏனென்றால், அவர்கள்தான் இந்தச் சக்திகளுக்கு திறந்தவர்களாய் இருக்கிறார்கள்.

இன்றைய தேதியில், இளம்பருவத்தினர் அதிக ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். முந்தைய தலைமுறைகளில் இருந்ததைவிட இன்று இளமைப் பருவம் பெரும் போராட்டமான காலகட்டமாக இருப்பதற்குக் காரணம், இறந்தவர்களை நாம் சரியாக கையாள்வதில்லை. அவர்களுடைய ருனானுபந்தம் எல்லா இடத்திலும் உலவுகின்றன. ஆங்காங்கு தனியாக தொங்கிக்கொண்டிருக்கும் மென்பொருளைப் போன்றது இது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ இளைஞர்கள்தான்.

Question: ஆனால் என்ன செய்ய? உணர்வுகளை உடைப்பது எப்படி? அதனை வெட்டிவிடுவது சாத்தியமில்லை அல்லவா?

உயிரைப் பொறுத்தவரை உணர்வு என்பது இரண்டாவது அம்சம்தான். உடல்நிலையில் இருக்கும் இந்த ஒற்றுமையை, அதாவது இறந்தவருடன் இருக்கும் ருனானுபந்தத்தை மட்டும்தான் இந்தச் சடங்குகளின் மூலம் நீங்கள் தகர்க்கப் பார்க்கிறீர்கள். ஏனென்றால், இது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதனைச் சரியாய் கையாளாவிட்டால், ஒருவர் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், புத்தி பேதலிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

அதனாலேயே நாம் அதனை தகர்த்தெறிய விரும்புகிறோம். உணர்வுகள் தாமாகவே பாதிப்பு தரக்கூடியவை அல்ல. யாரோ ஒருவருடன் உங்களுக்கு அற்புதமான உறவு இருந்தால், அந்த மனிதர் இல்லாமல் போய்விட்டால், அந்த உறவின் அழகை மனதில் பத்திரமாக வைத்துக்கொள்வது ஆரோக்கியமானது. ஆனால், ருனானுபந்தம் இருந்தால் அது உங்கள் உடல் மற்றும் மனக்கட்டமைப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால், இருவருக்கு இடையிலிருந்த அந்த அழகான விஷயங்களை இரசிப்பதற்கு பதிலாக, அதனால் பாதிப்படைவீர்கள்.

ஒருநிலையில் பார்த்தால், இது உயிர்த்தன்மையை சீரில்லாத நிலைக்கு கொண்டுசெல்லும். அதை தவிர்த்திட, உடல்நிலையில் இருக்கும் ஞாபகங்களை மட்டும் நாம் அழிக்க முயல்கிறோம். உணர்வுநிலையிலும் மனோரீதியாகவும் இருக்கும் ஞாபகங்களை நீங்கள் மறக்கமுடியாது என்பது மட்டுமல்ல, அதை நீங்கள் மறக்கவும் கூடாது. யாரோ ஒருவர் உங்களுக்கு மிக முக்கியமானவராக இருந்தால், அவரை நீங்கள் எதற்காக மறக்கவேண்டும்? அந்த உறவை உங்களுக்குள் பொக்கிஷமாக பொதித்து வாழ்நாள் முழுவதும் போற்றிக்காக்க வேண்டும்.

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலுடன் காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி என்னும் இறந்தோருக்கான சடங்குகள் கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா பிரம்மச்சாரிகளால் தினந்தோறும் நடத்துவிக்கப்படுகிறது. உங்கள் முன்னோருக்கு பித்ரு கடன் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள... +91 94864 94865

மின்னஞ்சல்: kbprocess@lingabhairavi.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1