குருவின் சொற்படி நடப்பது பலருக்குக் கடினமாக இருக்கிறதே?
ஒரு புதிய கருவியை வாங்கினீர்களென்றால், அதைப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டால்தான், அது உபயோகமாக இருக்கும். குருவும் அவ்வளவுதான். அவர் சொல்லிக் கொடுக்கும் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால்தான் அவரிடம் நீங்கள் எதற்காகப் போனீர்களோ, அது உங்களுக்கு நேர வாய்ப்பு கிடைக்கும்.
 
குருவின் சொற்படி நடப்பது பலருக்குக் கடினமாக இருக்கிறதே?, Guruvin sorpadi nadappathu palarukku kadinamaga irukkirathe
 
Question:குருவின் சொற்படி நடப்பது பலருக்குக் கடினமாக இருக்கிறதே? அவருடைய போதனைகளையும், கொள்கைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லையே?

சத்குரு:

சில போதனைகள், தத்துவங்கள், கோட்பாடுகள் இவற்றைப் பின்பற்றும் குழுக்களைப் பற்றியது உங்கள் கேள்வி, குருவைப் பற்றியதல்ல. ஏனென்றால், புதிய தத்துவங்களையும், கோட்பாடுகளையும் கற்றுக் கொடுப்பவரல்ல குரு. அதற்காக ஒரு குருவிடம் போவதில் அர்த்தம் இல்லை.

ஒரு புதிய கருவியை வாங்கினீர்களென்றால், அதைப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டால்தான், அது உபயோகமாக இருக்கும். குருவும் அவ்வளவுதான். அவர் சொல்லிக் கொடுக்கும் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால்தான் அவரிடம் நீங்கள் எதற்காகப் போனீர்களோ, அது உங்களுக்கு நேர வாய்ப்பு கிடைக்கும்.

குருவிடம் எதற்காகப் போகிறீர்கள்? சும்மா கேளிக்கைக்காக, கடைத்தெருவுக்குப் போவதுபோல் குருவிடம் போகிறீர்களா, அல்லது உண்மையான மாற்றம் நேர வேண்டும் என்று விரும்பிப் போகிறீர்களா?

ஒரு புதிய கருவியை வாங்கினீர்களென்றால், அதைப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டால்தான், அது உபயோகமாக இருக்கும். குருவும் அவ்வளவுதான். அவர் சொல்லிக் கொடுக்கும் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால்தான் அவரிடம் நீங்கள் எதற்காகப் போனீர்களோ, அது உங்களுக்கு நேர வாய்ப்பு கிடைக்கும்.

ஏதோ ஆன்மீகம் தொடர்பான விஷயம் என்று இதை ஒதுக்கிவிட முடியாது, வாழ்க்கையே அப்படித்தான். சில விஷயங்களைக் கடைப்பிடித்தால்தான், அதற்கான பலன் கிடைக்கும். எதிரில் சாப்பாடு இருந்தால் போதுமா? அதை எடுத்துப் புசித்தால் தான், அது உங்களுக்குச் சத்தும், சக்தியும் கொடுக்கும். அதேபோல், குரு வழங்குவதை உள்ளே ஏற்றுக்கொண்டால் தான் அதற்குரிய பலன் கிடைக்கும்.

குரு என்பவர் ஒரு வழிமுறை. அவர் வழங்குவது வேலை செய்ய வேண்டும் என்பது தானே உங்கள் விருப்பம்? உங்களுக்குப் பிடித்தமானதை அவர் வழங்காமல் இருக்கலாம். ஆனால், அவர் சொல்வதைச் செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும்.

  0 Comments
 
Login / to join the conversation1