குரு பௌர்ணமி - உலகின் முதல் குரு உருவான திருநாள்

முழுமதி வானில் தவழும் நாளான குரு பௌர்ணமி நாள், ஆதியோகி ஆதிகுருவாக அமர்ந்து முதன்முதலில் சப்தரிஷிகளுக்கு ஞானத்தைப் பரிமாறிய நாளாக கொண்டாடப்படுகிறது.
 

நிலவின் ஒளியில் குருவின் அருளில் திளைத்திட வாருங்கள்!

நாள்: ஜூலை 16, 2019

இடம்: ஈஷா யோக மையம், கோயம்புத்தூர்

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

குரு பௌர்ணமி அன்னதானம்

ஈஷாவில் தொண்டு புரியும் ஆன்மிக சாதகர்களுக்கும்,தன்னார்வலர்களுக்கும் உணவளியுங்கள்! புனிதமான அன்னதானம் வழங்குங்கள்!

நன்கொடை செய்ய

குரு பௌர்ணமி விழா - ஏன் கொண்டாட வேண்டும்?

குரு பௌர்ணமி நமக்கு சொல்லும் செய்தி என்ன?

"போராட்டங்கள், வெறுப்புணர்வுகள், முட்டாள்தனங்கள், ஏக்கங்கள் இப்படி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் "விருப்பத்துடன் முயற்சித்தால், இவை எல்லாவற்றையும் தங்களால் கடந்து செல்லமுடியும்."

உங்களுடைய மரபு என்ன, உங்களுடைய தந்தை யார் அல்லது எந்த வகையான வரையறைகளோடு நீங்கள் பிறந்தீர்கள் அல்லது எந்த வகையான வரையறைகளில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது பிரச்சனையில்லை. "விருப்பத்துடன் நீங்கள் முயற்சித்தால்" உங்களால் இவையெல்லாவற்றையும் கடந்து செல்லமுடியும்.

குரு பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்?

உங்களுடைய உள்நலத்திற்காக அந்த நாளை அர்ப்பணியுங்கள், அளவாக சாப்பிடுங்கள், இசை கேளுங்கள், தியானம் செய்யுங்கள், பூரண நிலவைப் பாருங்கள். உங்களுக்கு இது மிகவும் அற்புதமாக இருக்கும், ஏனென்றால் இது உத்தராயணத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி. இது ஒரு முக்கியமான நாள் என்று குறைந்தது பத்து பேருக்காவது நீங்கள் சொல்லவேண்டும்.

நேரடி ஒளிபரப்பை அற்புதமான அனுபவமாக்க இதை செய்யலாம்

மாலை 5.50 - 6 : குருபாதுகா ஸ்தோத்திரம் (கேட்க & டவுன்லோட் செய்ய)

மாலை 6 : நேரடி ஒளிபரப்பைக் கண்டு சத்குருவின் அருளில் திளைத்திடுங்கள்

நேரடி ஒளிபரப்பு முடிந்த பிறகு 10 நிமிடங்களுக்கு: பிரம்மானந்த ஸ்வரூபா உச்சாடனை (கேட்க & டவுன்லோட் செய்ய)

குறிப்பு:

  • "குரு பௌர்ணமி" - இலவச மின்புத்தகத்தை டவுன்லோட் செய்யுங்கள்
  • சத்குருவுடன் தொடர்பில் இருக்க சத்குரு Appஐ டவுன்லோட் செய்யுங்கள்
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1