இன்றைய தரிசன நேரத்தில், "தட்சிணாயனம் தொடங்கும் வேளை ஆன்மீக சாதனையை தீவிரப் படுத்துவதற்கான நேரம்." என்று கூறி, குரு பௌர்ணமியின் முன்னரே அதன் முக்கியதத்துவத்தையும் நினைவுபடுத்தி, தியானலிங்கம் உருவாகி 16 வருடங்கள் ஆகியிருக்கும் இத்தருணத்தின் மகத்துவத்தையும் விளக்கினார் சத்குரு.

6:28

ஆடி மாதம் வரும் முன்னரே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமோகமாய் காற்றடிக்க, பார்க்க மெல்லிய தென்றலைப் போலத் தெரிந்தாலும், தன் அருளெனும் புயலால் அனைவரையும் ஆட்கொள்ள சத்குரு வந்தமர்ந்தார்.

6:34

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"யோகரத்தோவா போகரத்தோவா..."

6:40

இப்போதுதான் தட்சிணாயனம் துவங்கியிருக்கிறது. யோக கலாச்சாரத்தில் இதை சாதனா பாதை என்பார்கள். மாதக் கடைசியில் குரு பௌர்ணமி வருகிறது. இப்படிப்பட்ட பரிமாணங்கள் இருக்கிறது என்று மனிதர்கள் கற்பனை கூட செய்திராத விதத்தில் இருந்தவற்றை மனிதர்களுக்கு வழங்கிட ஒரு தைரியமான படியை இந்த நாளில் ஆதிகுரு எடுத்தார். இந்த பௌர்ணமி தினம் மிகவும் சக்திவாய்ந்தது.

இந்த பூமியை நாம் கர்மபூமி என்கிறோம். அதாவது உள்நிலையில் உங்களைப் பற்றி நீங்கள் பல விஷயங்கள் செய்துகொள்ள முடியும். உலகின் பிற இடங்களில் இந்த சாத்தியம் இல்லாமலில்லை. ஆனால் இவ்விடம் விசேஷமானது.

தியானலிங்கம் உருவாக்குவதற்காக மூன்று ஜென்மங்கள் பாடுபட்டபோது, சில சமயங்களில் இதற்காக இத்தனை பேரை இவ்வளவு பாடுபடுத்த வேண்டுமா என்று சிந்தித்துள்ளேன். ஆனால் தியானலிங்கம் உருவான பின்னர் ஒருபோதும் நான் திரும்பிப் பார்த்ததில்லை.

இப்போது தியானலிங்கம் உருவாக்கி 16 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் பல்லாயிரம் பேர் உணரும்விதமாக நாம் இங்கு ஏதோவொன்று செய்வோம். உச்சநிலை தீவிரத்தில் இருந்தாலும் அசைவின்றி இருப்பதால் பலரால் உணரமுடியாமல் இருக்கிறது, அதனால் சூழ்நிலையில் நாம் ஏதோவொரு மாற்றம் செய்வோம்.

ஆனால் தியானலிங்கம் பற்றி அறிந்த உங்களுக்கு, லிங்க ஸ்நானத்தின் போது தியான லிங்கத்தைத் தொட்டு மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது உங்களை உணர்ச்சியில், நோக்கத்தில், தீவிரத்தில் என்று எல்லா நிலைகளிலும் தயார்செய்து, பிறகு தியானலிங்கத்தைத் தொடும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கண்ணால் காணவே மூன்று ஜென்மங்கள் ஆகிவிட்டது, உங்களுக்கு கிடைத்திருப்பது கிடைப்பதற்கரிய வாய்ப்பு.

உங்கள் இலக்கை, உங்கள் திசையை உறுதிசெய்துவிட்டால், சூழ்நிலைகள் மாறலாம், பருவங்கள் மாறலாம், இனிமையாக இருக்கலாம், கசப்பாக இருக்கலாம், ஆனால் உங்கள் இலக்கு நோக்கி நீங்கள் நகர்வது நிச்சயம். ஆன்மீக நோக்கத்திற்காக வருபவர்களுக்கு வேறெதையும் பற்றி கவலைப்படத் தேவையில்லாத ஒரு சூழ்நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் விலங்குத்தன்மை பாதுகாப்பைத் தேடுகிறது. உங்கள் மனிதத்தன்மை விடுதலையை நாடுகிறது. இயற்கையின் எல்லைகள் உட்பட எல்லா எல்லைகளையும் தாண்டிய சுதந்திரத்தை உணரும் வாய்ப்பு குரு பௌர்ணமி தினத்தில் மனிதகுலத்திற்கு கிடைத்தது. குரு பௌர்ணமி தினம் அதற்கான ஒரு நினைவூட்டல்.

7:30

ஈஷா இசைக்குழு இனிய பாடலை இசைக்க, வணங்கி விடைபெற்றார் சத்குரு.