ஒரு படைப்பையோ அல்லது ஒரு தனிநபரையோ விமர்சனம் செய்யும்போது எதிர்மறையாக விமர்சிப்பவரே அதிகமாக கவனிக்கப்படுகிறார். குற்றம் கண்டுபிடித்து விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவும் தெரிகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை? சத்குருவின் கருத்து இங்கே!

சத்குரு:

குற்றம் கண்டுபிடிப்பதும், ஒன்றை மறுப்பதும் ஏதோவொன்றை உருவாக்குவதைவிட புத்திசாலித்தனமாய் தோன்றுகிறது. நம்மை எதிர்த்துப் பேசுபவர்கள் குற்றம் கண்டுபிடிப்பதால், அதிக புத்திசாலிகளாக தோற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் எதையும் உருவாக்குவது இல்லை. படைப்புத் திறனுள்ள ஒரு மனிதர் அத்தனை புத்திசாலியாய் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஏனெனில், எதையோ ஒன்றை படைக்க எத்தனிக்கும்போது நாம் பல பிழைகளைச் செய்கிறோம். சில விஷயங்கள் சரியாய் போகும், பல தவறுகள் நேரும். சும்மா உட்கார்ந்து குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென அதிக புத்திசாலியாய் தெரிவார்கள். ஆனால், இப்படி குற்றம் சொல்பவர்களில் வெகுசிலரே படைப்பாளிகளாய் இருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.

படைப்புத் திறனுள்ள ஒரு மனிதர் அத்தனை புத்திசாலியாய் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஏனெனில், எதையோ ஒன்றை படைக்க எத்தனிக்கும்போது நாம் பல பிழைகளைச் செய்கிறோம். சில விஷயங்கள் சரியாய் போகும், பல தவறுகள் நேரும். சும்மா உட்கார்ந்து குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென அதிக புத்திசாலியாய் தெரிவார்கள்.

கேள்வி கேட்பதில் தவறே இல்லை. ஆனால், பாருங்கள்... படைத்ததை சுக்கு நூறாக்குவதற்காக கேள்விகள் எழுப்பி அதை உடைப்பது பலம் எனக் கருதப்படுகிறது. நீங்கள் வளர நான் ஊக்கப்படுத்தினால் அதை மிகைப்படுத்தி நாடகமாக்க என்ன இருக்கிறது? அதுவே, நான் ஆயுதங்கள் ஏந்தி பத்து பேருக்கு முன் உங்களை போட்டு தாக்கினால் அதில் நாடகமாக்குவதற்கான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதனால்தான், யாரோ ஒருவரை போட்டுத்தாக்குவது சினிமாக்களில் முக்கிய காட்சிகளாய் இடம் பெற்றுவிடுகின்றன. இது விமர்சனம் செய்பவர்களுக்கும் பொருந்தும். விமர்சனம் என்பது யாரோ ஒருவரை வாய்ப்பு கிடைக்கும்போது போட்டுத்தாக்குவது தானே?

எதிர்மறையான நிலைப்பாடு நேர்மறையான நிலைப்பாட்டினை விட புத்திசாலித்தனம் உடையதாய் தோன்றுகிறது. இப்படிச் செயல்பட, ஒரு குறிப்பிட்ட வாதம் தேவை. ஆனால், பெரும்பாலான சமயங்களில் இவை முதிர்ச்சியற்ற வாதங்களாய் இருக்கின்றன. உங்களுடைய தர்க்கம் முதிர்ச்சியில்லாமல் இருந்தால் நீங்கள் அனைத்தையும் மறுப்பீர்கள். உங்கள் தர்க்கம் முதிர்ச்சியுடையதாய் இருந்தால், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும். வாழ்வின் செயல்பாட்டை உணரத் துவங்குவீர்கள். உங்கள் வாழ்க்கை தர்க்கவாதத்தில் மட்டும் நடக்கவில்லை, வாழ்க்கை என்ன வகுத்திருக்கிறதோ அதன் தர்க்கப்படி செயல்படுகிறீர்கள். தர்க்கத்தைவிட உங்களுக்குள் அதிகப்படியான உயிர்நோக்கம் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.