எதற்காக இவற்றை அணிகிறான் சிவன்?
சிவனின் கழுத்தில் பாம்பு, தலையில் பிறை நிலா, கையில் திரிசூலம் போன்றவை இருப்பதை அனைவரும் அறிவோம். இவையெல்லாம் ஏன் சிவனின் வசம் உள்ளன என்பதையும், சிவனின் இருப்பிடங்களின் மகத்துவம் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்வோம்...
 
சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 12

சிவனின் கழுத்தில் பாம்பு, தலையில் பிறை நிலா, கையில் திரிசூலம் போன்றவை இருப்பதை அனைவரும் அறிவோம். இவையெல்லாம் ஏன் சிவனின் வசம் உள்ளன என்பதையும், சிவனின் இருப்பிடங்களின் மகத்துவம் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்வோம்...

shiva_kailash_1

shiva_kailash_2

இருளில் சிவனின் அருளில்...

ஜடாமுடி பிரபஞ்சமெங்கும் அசைந்தாட, பிறை நிலவை நெற்றியில் சூடியபடி உடம்பெல்லாம் திருநீற்றோடு உடுக்கை இசையில் இரவுமுழுக்க ஆடுகிறான் ஒரு பித்தன். அவனைக் காண்பதைவிட, அவனிடம் பேச நினைப்பதைவிட, அவனைத் தழுவ நினைப்பதைவிட, அவனுடன் ஒன்றாகி கலப்பதிலேயே பேரானந்தம் இருக்கிறது.

யார் அவன்? எங்கிருக்கிறான்? எந்த ஊர்க்காரன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் யாரிடமும் பதிலில்லை. அவன்தான் முதலும் முடிவுமானவன். ஆதியோகியாய் அமர்ந்து யோகக் கலாச்சாரத்தை சப்தரிஷிகள் மூலம் அகிலமெங்கும் பரவச் செய்த ஆதிசிவன்.

சிவா என்றால் ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒன்றுமில்லாததை அடைய என்ன செய்துவிட முடியும்?! அவனுடன் சும்மா இருப்பதே வழி. ஆனால், தூக்கத்தில் அல்ல; முழு விழிப்போடு போர்வைக்குள் படுத்துக் கொண்டு அல்ல; முதுகுத்தண்டு நேராக அமர்ந்தபடி!

அடுத்த பதிவில்...

சிவனைப் பற்றி சத்குருவின் அனுபவம் என்ன என்பதை தெரிந்துகொல்ளலாம்!

சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

  0 Comments
 
Login / to join the conversation1