இன்றைய தரிசன நேரத்தில் நிகழ்ந்தது வார்த்தைகள் விவரிக்க முடியாத அற்புத நிகழ்வு. அற்ப மனங்களுக்கும் சொற்ப சொற்களுக்கும் வேலையில்லாமல் போன நேரமது. அப்படி என்னதான் நடந்தது? மேலும் படியுங்கள்...

 

வார்த்தைகளுக்கு வேலையில்லாமல் போனது. மௌனத்தைக் கூட மொழிப்பெயர்த்துவிடலாம். யோகியின் நிசப்தத்தை விளக்க யாரால் முடியும்?

அவர் 6:20 மணிக்கு சற்று முன்னால் வந்து அமர்ந்த அக்கணம் முதல் தரிசனம் முடியும் வரை மௌனமே நீடித்தது. சமஸ்கிரிதி குழந்தைகள் மாறி மாறி இசைமாரி பொழிய, அதையும் தாண்டி இடிபோல் முழங்கியது, குருவின் நிசப்தம்.
நிசப்தத்தின் இடி சப்தம் கேட்ட சிலர் கீறிச்சிட, மௌனம் புரிந்த அன்பர்கள் பலர் கண்திறந்து அவர் அருளைப் பருகிட, தங்கள் மனதின் பேச்சை நிறுத்தத் தெரியாதவர்களைக் கூட அரவணைத்து, உயிர்வரை ஊடுருவிச் சென்ற ஞானியை என்னவென்று சொல்ல?

"பேசிப் பேசி ஓய்ந்தது போதும், என்ன பேசினாலும் எனக்குப் புரியாது. பேச்சிற்கு அப்பால் நீங்கள் மட்டுமே புவியில் நிகழ்த்தக் கூடியவற்றை நிகழ்த்துங்கள் சத்குரு," என்று ஏங்கியவர் பலருக்கு விருந்து.

அவருடைய நிசப்தத்தைக் காரண அறிவில் புரிந்துகொள்ள முடியாமல் தினறியவர்களுக்கோ, அவர் இறுதியில் அனைவரையும் பாடவைத்த "பூதேஷ யோகீஷ சர்வேஷ..." மந்திரம் மருந்து.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.