தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…


மழை பெய்து ஓய, அந்த மழையின் ஈரப்பதத்திலும் தன்னைக் காண காத்துக்கிடக்கும் மக்களுக்காக சந்திரகுண்டம் முன்னே சரியாக 6.20 மணிக்கு வந்தமர்ந்தார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவிற்காக இயற்றிய பாடலை தெலுங்கு மொழியில், தங்களுக்கே உண்டான பாணியில் சம்ஸ்கிருதி குழந்தைகள் அவருக்கு அர்ப்பணிக்க, அவர் முன் அமர்ந்திருந்த மக்கள் கண்களில் கண்ணீர் மழை. மௌனமே சொரூபமாய் அமர்ந்த குருவின் இருப்பை உணர்ந்தவர்களுக்கு தான் பாடிய பாடலில் மௌனம் கலைந்தார்..

ஜெய ஜெய ஜெய மஹாதேவ...
ஷிவ ஷங்கர ஆதிதேவ...

என்று தன் பாடலின் மூலம் அந்த சிவனைப் போற்றவும் அவர் தவறவில்லை. அதன் பின் தொடர்ந்த அவரது பேச்சிலிருந்து...

ஞானம் என்பதை மக்கள் மாயாஜாலம் என்றே தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் ஆதியோகியோ அப்படி எந்த ஒரு மாயவித்தைகளையும் செய்யவில்லை. அப்படியென்றால், ஞானத்தின் பலன் என்ன என்ற கேள்வி எழும். சொல்லப்போனால், ஒரு பலனுமில்லை. இது கொடுக்கல் - வாங்கல் போன்ற ஒரு பண்டமாற்று முறை இல்லை. இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கும் மனிதர்களுக்கு, இது வேலை செய்யாது. ஏனென்றால், இந்த உலக நியதியே இதுதான் - நீங்கள் இந்த பூமியிலிருந்து எதுவும் கொண்டு செல்லப் போவது இல்லை. அலெக்ஸேண்டர் தான் சாகும் போது கூட இரு கைகளை விரித்துக் கொண்டு "இங்கிருந்து ஒன்றும் எடுத்துச் செல்ல முடியாது" என்பதை காட்டிவிட்டு போனார்.

இப்படி பேசிய சத்குரு, ஈஷாவில் விரைவில் வெளியிடப்போகும் ஆங்கில புத்தகத்தைப் பற்றியும், அந்த புத்தகத்திலிருந்து தங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பைப் பற்றியும் பேசினார்.

அதுமட்டுமல்லாமல், "எனக்கு என்ன கிடைக்கும்" என்ற போக்கு எப்படி இன்றைய கல்விமுறையிலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிவாக விளக்கினார். மக்கள் வாழ்க்கையின் பயணத்தை அனுபவிக்காமல், இந்த பயணத்தினால் தங்களுக்கு ஏற்படும் பலன்களை இப்போதே கணக்கிட ஆரம்பித்துவிட்டார்கள், அதனால் வாழ்க்கையை உயிரோட்டமாக வாழத்தெரியாமல், "இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன?" என்ற கேள்வியுடன் என்னிடம் வருகிறார்கள். இந்த போக்கில் வாழ்க்கையை வாழாமல், இங்கே வெறும் ஒரு உயிராக இருந்தால், நான் உங்களுக்கு ஏதோ ஒன்று செய்ய முடியும், அது போன்ற மனிதர்களைத் தான் நான் ஆசிரமத்திலும் தேடுகிறேன், ஆனால் அதன் சதவிகிதம் மிகக் குறைவுதான், அதனால் தான் நாம் சம்ஸ்கிருதி குழந்தைகளைத் தயார்ப்படுத்துகிறோம்.

இதை முடிக்கும் போது, முன் காலத்தில் மக்கள் எப்படி இருவகையாக வாழ்ந்தனர் - அத்யாத்மிகம் (ஆன்மீகம்),லௌகீகம் (கொடுக்கல் - வாங்கல்). ஆனால் இப்போது வெறும் லௌகீகமாக மாறிவிட்டனர் என்பதையும் விரிவாக பேசினார்.

இதைத் தொடர்ந்து, அவரிடம் ஒரு பெண்மணி தன் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கேள்வியைக் கேட்க...

"நான் என் முதல் 25 வருடங்களில் மிக ஆர்வத்துடன் செயல்பட்டேன், அடுத்து வந்த வருடங்களில் அது இல்லாமல் தோய்வு ஏற்பட்டதன் காரணம், என் கர்வமா?"

அதற்கும் அவர் அளித்த பதிலோ அனைவரையும் யோசிக்கவைக்கும் விதமாய் இருந்தது. அத்துடன் சேர்ந்து இந்தியாவின் கடைசி தந்தி அமைப்பு நேற்று முடிய, அதன் பொருட்டு தான் ஆசிரமத்துக்கு அனுப்பிய தந்தியைப் பற்றியும் சுவாரஸ்யமாக தன்னுடய நகைச்சுவை பாணியில் எல்லோரையும் சிரிக்க வைத்தார்.